Published:Updated:

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்: 169 இடங்களில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர், 77 இடங்களில் வெற்றி! - காலை நிலவரம்

தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பான முக்கியச் செய்திகளின் தொகுப்பு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

12 Oct 2021 5 PM

உள்ளாட்சித் தேர்தல் (9 மாவட்டங்கள்): முன்னணி நிலவரம்: ( 9 மணி வரை)

மாவட்ட கவுன்சிலர்கள் - 137/140 இடங்கள்

தி.மு.க கூட்டணி - 135

அ.தி.மு.க கூட்டணி - 02

பா.ம.க - 00

நாம் தமிழர் - 00

மநீம - 00

அ.ம.மு.க - 00

தே.மு.தி.க - 00

பிற - 00

__________________________________________

ஒன்றிய கவுன்சிலர்கள் - 1212/1,381 இடங்கள்

தி.மு.க கூட்டணி - 896

அ.தி.மு.க கூட்டணி - 181

பா.ம.க - 33

நாம் தமிழர் - 00

ம.நீ.ம - 00

அ.ம.மு.க - 04

தே.மு.தி.க - 01

பிற - 97

13 Oct 2021 7 AM

விஜய் மக்கள் இயக்கத்தினர் 77 பேர் வெற்றி!

தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒன்பது மாவட்டங்களில் 169 இடங்களில் விஜய் ரசிகர்கள் போட்டியிட்டனர். அவற்றில் தற்போது வரை மாவட்ட வார்டு உறுப்பினர்கள் 77 பேர் வெற்றிபெற்றுள்ளனர் என விஜய் மக்கள் மன்றம் தெரிவித்திருக்கிறது. வாக்கு எண்ணிக்கை தொடர்வதால், இன்னும் சிலர் வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

12 Oct 2021 6 PM

விஜய் மக்கள் இயக்கத்தினர் 52 பேர் வெற்றி!

விஜய்
விஜய்

நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒன்பது மாவட்டங்களில் 169 இடங்களில் விஜய் ரசிகர்கள் போட்டியிட்டனர். அவற்றில் தற்போது வரை மாவட்ட வார்டு உறுப்பினர்கள் 52 பேர் வெற்றிபெற்றிருக்கிறார்கள் என விஜய் மக்கள் மன்றப் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்திருக்கிறார்.

12 Oct 2021 4 PM

`பணநாயகம் வென்றது!’ - ஒரு ஓட்டு வாங்கிய பாஜக வேட்பாளர்..!

குடும்பத்தினர் 5 பேர்... கிடைத்த வாக்கு 1... அதிர்ச்சியடைந்த கோவை பாஜக வேட்பாளர்

கோவை குருடம்பாளையம் 9-வது வார்டில் பாஜக வேட்பாளர் கார்த்திக் ஒரு ஓட்டு மட்டுமே வாங்கியிருந்தார். இந்த நிலையில், `தனது குடும்பத்தினருக்கு 4-வது வார்டில்தான் ஓட்டு இருப்பதாகவும், தேர்தலில் பணநாயகம் வென்றதாகவும்’ விளக்கம் அளித்துள்ளார்.

12 Oct 2021 12 PM

குடியாத்தம் ஒன்றிய நிலவரம்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் அங்குள்ள கே.எம்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 152 மேஜைகளில், 630 அலுவலர்களால் எண்ணப்பட்டுவருகின்றன. இந்த ஒன்றியத்தைப் பொறுத்தவரை ஒரு மாவட்ட கவுன்சிலர் மற்றும் மூன்று ஒன்றியக்குழு கவுன்சிலர் பதவிகளில் தி.மு.க முன்னிலையில் இருக்கிறது. அ.தி.மு.க வேட்பாளர்கள் இரண்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் முன்னிலைவகிக்கிறார்கள்.

- லோகேஸ்வரன்

12 Oct 2021 12 PM

விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியத்தில் அனைத்துச் சின்னங்களிலும் வாக்களிக்கப்பட்ட மாவட்ட கவுன்சிலர் சீட்டு!

ஓட்டுச் சீட்டு
ஓட்டுச் சீட்டு
12 Oct 2021 11 AM

தென்காசி: அடிப்படை வசதிகூட இல்லை?!

தென்காசி மாவட்டம், கடையம் யூனியனுக்கு உட்பட்ட வார்டுகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளுக்கான வாக்குகள் வெய்க்காலிபட்டியிலுள்ள செயின்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாமல் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் சிரமத்துக்கு உள்ளானார்கள்.

குடிநீர்
குடிநீர்

செய்தியாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தண்ணீர் குடிக்க டம்ளர்கூட வைக்கப்படவில்லை. பாத்ரூமில் தண்ணீர் வராததால் வாக்கு எண்ணும் அலுவலர்கள் மற்றும் முகவர்கள் சிரமப்பட்டனர்.

12 Oct 2021 11 AM

கோவை உள்ளாட்சித் தேர்தல் அப்டேட்..!

கோவை
கோவை

கோவை, மதுக்கரை ஒன்றியம், சீரபாளையம் ஊராட்சி, 4-வது வார்டு கவுன்சிலர் தேர்தல் தி.மு.க வேட்பாளர் ஜெயபிரகாஷ் வெற்றி.

மாதம்பட்டி 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் சிவபிரகாஷ் வெற்றி.

தேக்கம்பட்டி ஊராட்சியில் 15-வது வார்டு உறுப்பினருக்கான இடைத்தேர்தலில், தி.மு.க ஆதரவுடன் சாவி சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் முத்துக்குமார் வெற்றி.

மாவட்ட ஊராட்சி அன்னூர் 3-வது வார்டு தேர்தலில், தி.மு.க வேட்பாளர் ஆனந்தன் 2,000 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை .

- குருபிரசாத்

12 Oct 2021 9 AM

உளுந்தூர்பேட்டை: புறக்கணிப்பு... பரபரப்பு!

உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்த ஆசிரியர்களுக்கு 9:30 மணி ஆகியும் உணவு வழங்காததால் வாக்கு எண்ணும் மையத்தைப் புறக்கணித்துவிட்டு வெளியில் காத்திருக்கின்றனர். குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்று ஆசிரியர்கள் வாக்கு எண்ணும் மையத்தைவிட்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது!

- ஜெ.முருகன்

12 Oct 2021 9 AM

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் பரபரப்பு!

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியத்துக்கான வாக்கு எண்ணிக்கை அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. மையத்துக்குள் வாக்கு எண்ணும் அலுவலர்கள் முதலில் அனுமதிக்கப்பட்டனர். அடுத்து முகவர்கள் அனுமதிக்கப்பட்டபோது அவர்கள் முண்டியத்து வந்ததால் போலீஸார் கட்டுப்படுத்த முடியாமல் திணறினார்கள். இதனால் நுழைவு வாயில் இரும்புக்கதவை போலீஸாரும் முகவர்களும் அவரவர் பக்கம் இழுக்க, அதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்: 169 இடங்களில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர், 77 இடங்களில் வெற்றி! - காலை நிலவரம்

ஒரு கட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் போலீஸ் தடையை மீறி காத்திருந்த ஒட்டுமொத்த முகவர்களும் முண்டியடித்து உள்ளே நுழைந்தனர். இதனால் வாக்கு எண்ணிக்கை மையத்தில் சில நிமிடங்கள் பரபரப்பு காணப்பட்டது.

- ஜெ.முருகன்

12 Oct 2021 8 AM

மாயமான வாக்குப்பெட்டியின் சாவி!

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்: 169 இடங்களில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர், 77 இடங்களில் வெற்றி! - காலை நிலவரம்

பரமக்குடியில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, வாக்குப்பெட்டியின் சாவி மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, அதிகாரிகளால் சுத்தியல் மூலம் வாக்குப்பெட்டி உடைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

- உ.பாண்டி

பரமக்குடி தேர்தல் எண்ணிக்கை குறித்து ராமநாதபுரம் ஆட்சியர் பேட்டி....

12 Oct 2021 8 AM

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணும் பணி காலை 8 மணிக்குத் தொடங்கியது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களில் 19 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 180 ஒன்றிய வார்டு உறுப்பினர், 412 ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் 3,162 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9- ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு 115 வேட்பாளர்களும், ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கு 154 வேட்பாளர்களும், கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 1,387 வேட்பாளர்களும், கிராம வார்டு உறுப்பினர்களுக்கு 8,471 வேட்பாளர்களும் என மொத்தம் 10,728 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.

உள்ளாட்சித் தேர்தல்
உள்ளாட்சித் தேர்தல்

மொத்தம் 9,64,778 வாக்காளர்களில் 7,12,297 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை ஆர்வத்துடன் பதிவு செய்தனர். 2,51,491 வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருக்கோவிலூர், ரிஷிவந்தியம், திருநாவலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்களுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6-ம் தேதி 939 வாக்குச்சாவடிகளிலும், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருகம், கல்வராயன்மலை ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு 2-வது கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 9-ம் தேதி 950 வாக்குச்சாவடிகளிலும் நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் மாவட்டத்தின் ஒன்பது இடங்களில் நடைபெறுகினறது. வாக்கு எண்ணிக்கையின்போது வீடியோ பதிவும், மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பும் தீவிரக் கண்காணிப்பும் இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்திருக்கிறார்.

- ஜெ.முருகன்

12 Oct 2021 8 AM

முன்னணி நிலவரம்!

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை
உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை

தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களிலுள்ள கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் (ஒன்றிய கவுன்சிலர்), மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்குப் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டுவருகின்றன.

இதில் 140 இடங்களுக்கான மாவட்ட கவுன்சிலர்கள் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க கூட்டணி இரண்டு இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.

மேலும் 1,381 இடங்களுக்கான ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க கூட்டணி ஐந்து இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.

12 Oct 2021 8 AM

தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!

தமிழ்நாட்டில் புதிதாகப் பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவிருக்கின்றன. குறிப்பிட்ட ஒன்பது மாவட்டங்களிலும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது

12 Oct 2021 7 AM

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை!

தமிழ்நாட்டில் புதிதாகப் பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 6-ம் தேதி, 9-ம் தேதி ஆகிய இரண்டு நாள்கள் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. மாவட்டப் பஞ்சாயத்து உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து உறுப்பினர் ஆகிய நான்கு பதவிகளுக்குத் தேர்தல் நடந்தது.

இரண்டு கட்டங்களாக பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குட் தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை அனைத்தையும் வீடியோவில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. வெப் ஸ்ட்ரீமிங் முறையில் மாநில தேர்தல் ஆணையத்திலிருந்து கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு