Published:Updated:

உள்ளாட்சித் தேர்தல்: T23 புலி அச்சத்தையும் மீறி வாக்குகளைப் பதிவு செய்து வரும் மசினகுடி மக்கள்

T23 புலி அச்சத்தையும் மீறி ஆர்வத்துடன் வாக்குகளைப் பதிவு செய்து வரும் மசினகுடி மக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

09 Oct 2021 1 PM

T23 புலி அச்சத்தையும் மீறி ஆர்வத்துடன் வாக்குகளைப் பதிவு செய்து வரும் மசினகுடி மக்கள்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிக்கான 2ம் கட்ட இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில்,நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் தேர்வுக்கான இடைத்தேர்தல் மசினகுடி 4, சேரங்கோடு 11 ஆகிய வார்டுகளில் நடைபெற்று வருகிறது.அதேபோல் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், நடுபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டு உறுப்பினர் தேர்வுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்று வருகிறது.

கால்நடைகளையும் மனிதர்களையும் தாக்கி வரும் டி-23 என்ற ஆண் புலியின் பதற்றம் தொற்றியிருக்கும் மசினகுடியில் புலி அச்சத்தையும் மீறி மக்கள் 4வது வார்டுக்கான உறுப்பினரைத் தேர்வு செய்யும் ஆர்வத்துடன் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

09 Oct 2021 1 PM

வேட்பாளரின் சின்னம் இல்லாத வாக்குச் சீட்டால் பரபரப்பு!

பாபு
பாபு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வடகோட்டி பாக்கம் ஊராட்சியில் 5வது கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பாளராகப் போட்டியிட்டுள்ளார் பாபு என்ற நபர். இவருக்கு கார் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்று வாக்குப்பதிவு நடைபெற்ற போது, அவரை எதிர்த்து போட்டியிடும் 3 நபர்களின் சின்னங்கள் வாக்குச் சீட்டில் இடம்பெற்றிருந்த போது, இந்நபரின் சின்னம் மட்டும் இல்லாமல் இருந்து வாக்குப்பதிவு நடைபெற்றதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 6 வாக்குகள் பதிவாகிய நிலையில், தன் சின்னம் வாக்குச் சீட்டில் இல்லாத செய்தி பாபுவிற்கு சென்றுள்ளது. இதைத் தொடர்ந்து, வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார் பாபு. அந்த புகாரை ஏற்ற அதிகாரிகள், அவரது சின்னம் இடம்பெற்ற வாக்குச்சீட்டை வாக்குச் சாவடிக்குக் கொண்டு வந்துள்ளனர். இதனால், அங்கு வாக்குப்பதிவு சுமார் 1.5 மணி நேரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

09 Oct 2021 11 AM

ஒரு வாக்குகள் கூட பதிவாகாத விற்பட்டு கிராமம்..! காரணம் கூறும் கிராம மக்கள்.

விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அவியூர் ஊராட்சியை சேர்ந்த 'விற்பட்டு' கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தனி ஊராட்சி வேண்டி இன்று (09.10.2021) நடைபெற்று வரும் உள்ளாட்சி தேர்தலை வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி புறக்கணிப்பு செய்து வருகின்றனர். இதுவரை அக்கிராமத்தில் ஒரு வாக்குகள் கூட பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

09 Oct 2021 7 AM

2ம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்

ஊரக உள்ளாட்சித் தேர்தலலின் முதல் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6-ம் தேதி நடந்த முடிந்த நிலையில், இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 9 மாவட்டங்களில் உள்ள 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 62 மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகள், 626 ஊராட்சி ஒன்றிய வார்ட் கவுன்சிலர் பதவிகள், 1,324 கிராம ஊராட்சி தலைவர் பதவிகள், 10,239 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 12 ஆயிரத்து 341 இடங்களுக்குத் தேர்தல் நடைபெறுகிறது

ராமநாதபுரத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு

விழுப்புரம் மாவட்டத்தில் 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு