Published:Updated:

முக்கியச் சந்திப்பில் முடங்கிக் கிடக்கும் சித்தையன்கோட்டை பேருந்து நிலையம்; கவனிக்குமா அரசு?

பேருந்து நிலையம்
News
பேருந்து நிலையம்

பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து ஆட்டோ, கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பேருந்துகள் உள்ளே வருவதற்குச் சிரமம் ஏற்படுகிறது. இதனால் பெரும்பாலான பேருந்துகள் உள்ளே வருவதே கிடையாது.

முக்கியச் சந்திப்பில் முடங்கிக் கிடக்கும் சித்தையன்கோட்டை பேருந்து நிலையம்; கவனிக்குமா அரசு?

பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து ஆட்டோ, கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பேருந்துகள் உள்ளே வருவதற்குச் சிரமம் ஏற்படுகிறது. இதனால் பெரும்பாலான பேருந்துகள் உள்ளே வருவதே கிடையாது.

Published:Updated:
பேருந்து நிலையம்
News
பேருந்து நிலையம்

திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டை பேரூராட்சியில் சேடபட்டி, அழகர்நாயக்கன்பட்டி, நரசிங்கபுரம், எம்.புதுப்பட்டி, லெட்சுமிபுரம் உட்பட பல கிராமங்கள் அமைந்திருக்கின்றன. இந்த கிராமங்களின் முக்கியச் சந்திப்பாக சித்தையன்கோட்டை பேருந்து நிலையம் இருக்கிறது. இந்தப் பேருந்து நிலையத்தில் வணிக வளாகமும் அமைந்திருக்கிறது. இதன் அருகில் கழிப்பறைகள், மேல்நிலைத் தேக்க தண்ணீர் தொட்டி, மின்வாரிய அலுவலகங்கள் அமைந்திருக்கின்றன. ஆனால், பேருந்து நிலையம் முறையான பராமரிப்பின்றி திறந்தவெளிக் கழிப்பிடமாகவும், குடிமகன்களின் கூடாரமாகவும் இருந்துவருகிறது. 

பேருந்து நிலைய வளாகம்
பேருந்து நிலைய வளாகம்

ஞாயிற்றுக்கிழமைகளில் பேருந்து நிலைய வளாகத்துக்குள் மீன் வியாபாரம் செய்யப்படுவதால், அங்கு கழிவுகள் கொட்டப்பட்டு சுகாதாரச் சீர்கேடு நிலவுகிறது. மேலும் பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து ஆட்டோ, கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பேருந்துகள் உள்ளே வருவதற்குச் சிரமம் ஏற்படுகிறது. இதனால் பெரும்பாலான பேருந்துகள் உள்ளே வருவதே கிடையாது. 

​செம்பட்டி-வத்தலகுண்டு சாலை சித்தையன்கோட்டை பிரிவில் ​30 ஆண்டுகளுக்கு முன்பு வணிக வளாகத்துடன்கூடிய இந்தப் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. ஆனால் எந்தப் பேருந்தும், பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்வதில்லை. பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டிருந்த கடைகளும் பாதிக்கும் மேல் சேதமடைந்துவிட்டன.

பேருந்து நிலைய நுழைவு வாயில்
பேருந்து நிலைய நுழைவு வாயில்

​எனவே பேரூராட்சி நிர்வாகம் சித்தையன்கோட்டை புதிய பேருந்து நிலையத்தைப் புதுப்பித்து பேருந்துகள் வந்துசெல்ல வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பதும், சித்தையன்கோட்டை பிரிவிலுள்ள பழைய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி புதிய வணிக வளாகம் கட்டிக் கொடுக்க வேண்டும் என்பதும், அந்தப் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்துவருகிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய சித்தையன்கோட்டையைச் சேர்ந்த உபைதுல்லா, ``சித்தையன்கோட்டை பேருந்து நிலையத்துக்குள் ஊருக்குள் சென்றுவரும் பேருந்து மட்டுமே வருகின்றன. வெளியூர் செல்லும் பேருந்துகள் உள்ளே நுழைவதில்லை. மேலும் இடியும் நிலையிலிருக்கும் வணிக வளாகத்தை இடித்துவிட்டு புதிதாகக் கடைகளைக் கட்டிக்கொடுத்தால் பொதுமக்களும் வியாபாரிகளும் பயனடைவார்கள்" என்றார்.

உபைதுல்லா
உபைதுல்லா

இது குறித்து சித்தையன்கோட்டை ​பேரூராட்சித் தலைவர் பொன்னு முரளி​யிடம் பேசினோம். ​``புதிய பேருந்து நிலையத்துக்கு அனுமதி கோரி விண்ணப்பித்​தோம். பேருந்து நிலையம் கட்ட வாங்கப்பட்ட 10​ ​லட்ச​ ரூபாய் கடன் ​தற்போது 82​ ​லட்ச​ ரூபாயாக உயர்ந்திருக்கிறது​. முறையான திட்டமிடல் இன்றி பேருந்து நிலையம் கட்டப்பட்டுவிட்டது.

சேதமடைந்திருக்கும் கட்டடம்
சேதமடைந்திருக்கும் கட்டடம்

பழைய பேருந்து நிலையத்துக்கும், புதிய பேருந்து நிலையத்துக்கும் 2 கிலோமீட்டர் இடைவெளி இருக்கிறது. பழைய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் உள்ளே சென்று வருகின்றன. புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வந்து செல்ல ஏற்பாடுகளைச் செய்துவருகிறோம்" என்றார்.