Published:Updated:

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியிருந்தால் என்ன பெயர் தெரியுமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ( Twitter Page: @ChennaiRmc )

குறிப்பிட்ட பிரதேசத்தில் உருவாகும் புயல்களுக்கு, அந்தப் பகுதியில் இருக்கும் நாடுகள் பெயர் சூட்டும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்பிராந்தியத்திலிருக்கும் நாடுகளும் பெயர் பட்டியலை முன்கூட்டியே உருவாக்கித் தந்துவிடும். அதிலிருந்து ஒரு பெயரைத்தான் புயலுக்குச் சூட்டுவார்கள்.

வங்கக் கடலில் உருவாகி, தற்போது (11 நவம்பர் 2021) வடதமிழகத்தை மிரட்டிக் கொண்டிருக்கும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று மாலை 5.30 மணி (இந்திய நேரப்படி) வாக்கில் சென்னை அருகே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. ஒருவேளை இது புயலாக மாறியிருந்தால், இதற்கு ஒரு பெயரைச் சூட்டியிருப்பார்கள்.

சாலையில் மழை நீர்
சாலையில் மழை நீர்
``சென்னை தத்தளிக்காமல் இருக்க அரசு இதைச் செய்தாக வேண்டும்!" - நீர்நிலை ஆய்வாளர்

ஆம், சமீப ஆண்டுகளாக புயல்களுக்குப் பெயர் சூட்டும் வழக்கம் அமலில் இருக்கிறது. அந்த வகையில், குஜராத் பகுதியில் அண்மையில் உருவான புயலுக்கு `ஷாகீன்’ என பெயரிடப்பட்டது. இந்தப் பெயரை கத்தார் நாடு சூட்டியிருந்தது. தற்போது சென்னையை குறிவைத்திருக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியிருந்தால், `ஜவாத்' (Jawad) என்ற பெயரைச் சூட்டியிருப்பார்கள். இது, சவுதிஅரேபியா தந்திருக்கும் பெயர்.

குறிப்பிட்ட பிரதேசத்தில் உருவாகும் புயல்களுக்கு, அந்தப் பகுதியில் இருக்கும் நாடுகள் பெயர் சூட்டும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் அரபிக் கடல், வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவாகும் புயல்களுக்கு, இந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகள்தான் பெயர் சூட்டவேண்டும்.

பெயர் பட்டியல்
பெயர் பட்டியல்
சென்னையில் தொடரும் அதி கனமழை! - 1,000 பேருந்துகளின் சேவை ரத்து

இதற்காக இப்பிராந்தியத்திலிருக்கும் அனைத்து நாடுகளும் பெயர் பட்டியலை முன்கூட்டியே உருவாக்கித் தந்துவிடும். அதிலிருந்து ஒரு பெயரைத்தான் புயலுக்குச் சூட்டுவார்கள். இது வரிசைக்கிரமப்படி கடைபிடிக்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு