Published:Updated:

ஸ்மார்ட் போனுடன் குதிரை வண்டி ஊர்வலம்; மகளிடம் கொடுத்த வாக்கை நிறைவேற்றிய `வேற லெவல்' தந்தை!

குதிரை வண்டி ஊர்வலம்
News
குதிரை வண்டி ஊர்வலம்

தன் மகள் கேட்டதற்காக முராரி குடிப்பழக்கத்தை விட்டிருக்கிறார். மேலும் அந்தத் தொகையைச் சேமித்து வைத்து ரூபாய் 12,500 மதிப்புள்ள ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த நிகழ்வைக் கொண்டாடும் வகையில் தன் மகளை, குதிரை ரதத்தில் அமர வைத்து, பட்டாசுகள் வெடித்து ஊர்வலமாக வந்துள்ளார்.

அப்பா- மகள் உறவு என்பது எப்போதும் மனதுக்கு நெருக்கமான ஒன்று. மகள்கள் ஆசைப்படுவதைச் செய்துவிட வேண்டும் என்பது, ஒவ்வோர் அப்பாவுக்கும் இருக்கும் மிகப்பெரிய லட்சியம். அப்படி ஓர் அப்பா, தன் மகளின் ஆசையை வித்தியாசமான முறையில் நிறைவேற்றி உள்ளார். அது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த வீடியோவில், `வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வண்டியில், ஸ்மார்ட் போன் ஒன்றை  கையில் வைத்தபடி, ஐந்து வயதுச் சிறுமி அமர்ந்திருக்கிறாள், பட்டாசு வெடிக்க, பாடல்கள் ஒலித்தபடி அந்த குதிரை ரதம் தெருவில் ஊர்வலமாக வருகிறது'.

குதிரை வண்டி ஊர்வலம்
குதிரை வண்டி ஊர்வலம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதன் பின்னணி சுவாரஸ்யமாக இருக்கிறது. மத்திய பிரதேசம் மாநிலம் சிவபுரியைச் சேர்ந்தவர் முராரி. தெருக்களில் டீ விற்பனை செய்பவர். முராரி பல ஆண்டுகளாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்திருக்கிறார். முராரியின் ஐந்து வயது மகள், தன் அப்பாவிடம் குடிப்பழக்கத்தை விட்டு விடுமாறு கேட்டுள்ளார். மேலும் அன்றாடம் மதுவாங்கச் செலவிடும் தொகையைச் சேமித்து வைத்து தனக்கு மொபைல் போன் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார்.

தன் மகள் கேட்டதற்காக முராரி குடிப்பழக்கத்தை விட்டிருக்கிறார். மேலும் அந்தத் தொகையைச் சேமித்து வைத்து ரூபாய் 12,500 மதிப்புள்ள ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த நிகழ்வைக் கொண்டாடும் வகையில் தன் மகளை, குதிரை ரதத்தில் அமர வைத்து, பட்டாசுகள் வெடித்து ஊர்வலமாக வந்துள்ளார்.

Father (Representational Image)
Father (Representational Image)
Image by Free-Photos from Pixabay

இது குறித்து முராரி பேசியபோது, ``என் மகள் என்னிடம் நீண்ட நாள்களாக ஸ்மார்ட் போன் ஒன்றை கேட்டுக்கொண்டே இருந்தாள். ஒவ்வொரு முறை அவள் போன் கேட்கும் போதும், `நான் உனக்கு நிச்சயம் போன் வாங்கி கொடுப்பேன். அதற்கு இந்த ஊரே சாட்சியாக அமையும்' என்று சொல்வேன். அதற்காக பணத்தைச் சேமித்து வைத்துக் கொண்டே இருந்தேன். கனவை நிறைவேற்றும் விதமாக இன்று என் மகளுக்கு ஸ்மார்ட் போன் வாங்கிவிட்டேன். நான் அவளுக்கு வாக்கு கொடுத்தபடி, ஊரே சாட்சியாக வேண்டும் என்பதற்காக அவள் கையில் புதிதாக வாங்கிய போனை கொடுத்து, குதிரை வண்டியில் அமரவைத்து ஊர்வலமாக அழைத்து வந்தேன். மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று கூறியுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த பலரும் டாடியின் லிட்டில் பிரின்சஸ் என்று வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.