Published:Updated:

`மாணவருக்கு வட்டியுடன் செலுத்துங்கள்!' - கூடுதல் கட்டணம் வசூலித்த கல்லூரிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றம்

உடனடியாக கல்லூரியை நாடி விசாரித்த போது, ஆண்டுதோறும் கல்வி கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட்டது கண்டறிப்பட்டது. பல இடங்களில் இதை குறித்து புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர், அசோக் குமார். கடந்த ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள தண்டலத்தில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் நேரடியாக இரண்டாம் ஆண்டு படிப்பில் சேர்ந்துள்ளார். இதற்காக 2011-ம் ஆண்டு முதல் 2014 -ம் ஆண்டுக்கான கல்வி கட்டணமாக 1 லட்சத்து 42 ஆயிரம் ரூபாயை நிர்ணயித்துள்ளது அக்கல்லூரி. குடும்பத்தில் முதல் பட்டதாரி மற்றும் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் தமிழக அரசின் உதவி தொகை 60,000 ரூபாய் கல்லூரிக்கு நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள கட்டணத்தை வங்கியின் கல்வி கடன் மூலம் செலுத்தியுள்ளார்.

கல்வி கடன்
கல்வி கடன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

படிப்பை முடித்த பின் வங்கி கடனை செலத்தி வந்தவருக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது கூடுதலாக அவர் வங்கி கணக்கில் 1.20 லட்சம் ரூபாய் பாக்கி இருப்பது தெரியவந்துள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உடனடியாக கல்லூரியை நாடி விசாரித்த போது, ஆண்டுதோறும் கல்வி கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட்டது கண்டறிப்பட்டது. பல இடங்களில் இதை குறித்து புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி மனுதாரருக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்ட நிதியை தவறாக நிறுத்தி வைத்த அந்த பொறியியல் கல்லூரியின் மீது அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் நடவடிக்கை எடுக்கவும், ஆண்டுதோறும் அவரிடமிருந்து வசூலிக்கப்பட்ட கூடுதல் கல்வி கட்டணத்தை, தமிழக அரசு வழங்கிய அந்நாளிலிருந்து, இந்நாள் வரை கணக்கிட்டு வட்டியுடன் கல்லூரி நிர்வாகம் மாணவனுக்கு செலுத்த வேண்டும் எனவும் கூறினார். மேலும் மாணவனின் கல்விக் கடன் வட்டியை வங்கி தள்ளுபடி செய்வது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism