Published:Updated:

`உறவுகள் இல்லாத சத்தியப்பிரமாணம்.. !' - மெட்ராஸ் ரெஜிமெண்ட்டில் இதுவே `முதல் முறை'

 சத்தியப்பிரமாணம்
சத்தியப்பிரமாணம்

கொரோனா அச்சம் காரணமாக ராணுவ வீரர்களின் பெற்றோர் உறவினர்கள் யாரும் பங்கேற்காமலேயே சத்தியப்பிரமாணம் நடைபெற்றது.

மெட்ராஸ் ரெஜிமெண்ட் எனப்படும் குன்னூர் ராணுவ பயிற்சி மையத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

சத்தியப்பிரமாணம்
சத்தியப்பிரமாணம்

46 வாரங்கள் கடுமையான ராணுவப் பயிற்சிக்குப் பின்னர் தங்களை முழு ராணுவ வீரனாய் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் சத்தியப்பிரமாண நிகழ்ச்சி நடைபெறும். இதன் பிறகே ராணுவ சேவையாற்ற களமிறங்குவர். இந்த நிகழ்வில் இளம் ராணுவ வீரர்களின் பெற்றோர், உறவினர்கள் கலந்துகொண்டு வழியனுப்பி வைப்பது வழக்கம்.

தற்போது கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில் சத்தியப்பிரமாண நிகழ்ச்சியில் பெற்றோர், உறவினர் இன்றி முதல் முறையாக நடைபெற்றது.

 சத்தியப்பிரமாணம்
சத்தியப்பிரமாணம்

மழை, பனி, குளிர் என 46 வாரங்கள் கடும் பயிற்சி பெற்ற 350 இளைஞர்கள் சீருடை தரித்து கையில் துப்பாக்கியுடன் அணிவகுத்து நிற்க, தங்கள் முன் ராணுவ வீரர்கள் வீறுநடைபோட்டு பகவத்கீதை, பைபிள், குரான் ஆகிய புனித நூல்கள் மற்றும் தேசியக் கொடியைக் கொண்டுவர அதன் மீது சத்தியம் செய்துகொண்டனர்.

இதன் மூலம் தங்களை நாட்டுக்கு அர்ப்பணித்துக்கொண்டு கம்பீரமான அணிவகுப்பை மேற்கொண்டனர்.

 சத்தியப்பிரமாணம்
சத்தியப்பிரமாணம்

பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட 5 வீரர்களுக்குப் பதக்கம் வழங்கி பாராட்டப்பட்டது.

கொரோனோ வைரஸ் அச்சம் காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து, பயிற்சி முடித்த வீரர்களின் பெற்றோர்கள் அழைக்கப்படவில்லை. பெற்றோர், உறவினர்கள் யாரும் பங்கேற்காமலேயே சத்தியப்பிரமாணம் நடைபெற்றது வீரர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சத்தியப்பிரமாணம்
சத்தியப்பிரமாணம்

இப்படி நடப்பது இதுவே முதல் முறை என பேசிக்கொண்டனர்.

அடுத்த கட்டுரைக்கு