Published:Updated:

`நிம்மதியாக ஆட்டோ ஓட்ட முடியவில்லை!' -போலீஸ் டார்ச்சரால் உயிரிழந்தாரா மதுரை டிரைவர்?

ஆட்டோ டிரைவர் தற்கொலை தொடர்பான சுவரொட்டி
ஆட்டோ டிரைவர் தற்கொலை தொடர்பான சுவரொட்டி

`நியாயம் கிடைக்காமல் அரிச்சந்திரனின் உடலை வாங்க மாட்டோம்' என்று அவர் குடும்பத்தினரும் ஆட்டோ சங்கத்தினரும் அரசு மருத்துவமனை முன்பு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

`ஆட்டோ டிரைவரான தன் கணவர் தற்கொலை செய்துகொண்டதற்கு காவல்துறையினரின் டார்ச்சர்தான் காரணம்' எனக் கூறி பெண் ஒருவர் மதுரை கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார்.

ஆட்டோ டிரைவர்கள் போராட்டம்
ஆட்டோ டிரைவர்கள் போராட்டம்

மதுரை ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அரிச்சந்திரன் என்பவர் கடந்த 28-ம் தேதி மின்சாரக் கம்பியைப் பிடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள், அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 90 சதவிகித தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இறந்துவிட்டார். தற்கொலை முயற்சி தொடர்பாக, நீதிபதியிடம் மரண வாக்குமூலமும் கொடுத்துள்ளார்.

காவல்துறையினரின் டார்ச்சரால்தான் அரிச்சந்திரன் தற்கொலை செய்துகொண்டார் என்றும் கூறப்பட்டது. இது ஆட்டோ டிரைவர்கள் மத்தியில் சோகத்தையும் காவல்துறையினர் மீது வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதைக்கண்டித்து போஸ்டர் ஒட்டியவர்கள், `நியாயம் கிடைக்காமல் அரிச்சந்திரனின் உடலை வாங்க மாட்டோம்' என்று அவர் குடும்பத்தினரும் ஆட்டோ சங்கத்தினரும் அரசு மருத்துவமனை முன்பு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறையின் தொடர்ச்சியான டார்ச்சரால் என் கணவர் தற்கொலை முடிவை எடுத்துவிட்டார். சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆட்டோ ஓட்டுநரின் மனைவி

இந்தநிலையில், இன்று ஆட்டோ டிரைவர்கள் மதுரையில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்துக்குத் திரண்டு வந்தனர். அரிச்சந்திரனின் மனைவி சந்திரஜோதி கலெக்டரிடம் மனு ஒன்றை அளித்தார். அதில், `கடந்த 20 வருடங்களாக என் கணவர் ஆட்டோ ஓட்டி அதன்மூலம் கிடைத்த வருமானத்தில்தான் குடும்பம் நடத்திவந்தோம்.

`தீக்குளித்த ஆட்டோ டிரைவர்… மூலவர் சந்நிதியில் உயிரிழந்த இளைஞர்' - அத்திவரதர் விழாவில் தொடரும் சோகம்!

காவல்துறையின் தொடர்ச்சியான டார்ச்சரால் என் கணவர் தற்கொலை முடிவை எடுத்துவிட்டார். சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு பிள்ளைகளுடன் கஷ்டப்படும் எனக்கு இழப்பீடு வழங்க வேண்டும், அரசு வேலை வழங்க வேண்டும்' என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

ஆட்டோ டிரைவர்கள் போராட்டம்
ஆட்டோ டிரைவர்கள் போராட்டம்

அரிச்சந்திரன் மரணம் குறித்துப் பேசும் போலீஸார், `` ஆட்டோ டிரைவரின் தற்கொலைக்குக் காவல்துறை காரணமல்ல. உரிய அனுமதி இல்லாமலும் விதிகளை மீறியும் அதிகப் பயணிகளை ஏற்றுகின்றனர். போக்குவரத்து விதிகளைப் பின்பற்றாமல் விபத்துகளுக்கு காரணமாகும் ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பிலிருந்து புகார் தெரிவிப்பதால்தான் ஆட்டோக்களை ஆய்வு செய்கிறோம். மற்றபடி, அவருடைய மரணத்துக்கு நாங்கள் காரணமல்ல" என்கின்றனர்.

பின் செல்ல