Published:Updated:

`பெண் என்பதால் மறுப்பதா? மாணவியை போலந்து அழைத்துச் செல்லுங்கள்!' - உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தடகளப் போட்டியில் வாங்கிய பரிசுகளுடன் மாணவி சமீஹா பர்வீன்
தடகளப் போட்டியில் வாங்கிய பரிசுகளுடன் மாணவி சமீஹா பர்வீன்

சமீஹா பர்வீனை போலந்துக்கு அழைத்துச் சென்று விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள வைக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து கடையாலுமூட்டை சேர்ந்த மக்கள் மகிழ்ச்சியில் மாணவிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு பகுதியைச் சேர்ந்த முஜீப் - சலாமத் தம்பதியின் மகள் சமீஹா பர்வீன்(18). பெற்றோர் சுக்கு காபி கடை நடத்தி வருகின்றனர். சமீஹா பர்வீன் ஆறாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட, அவரது காதுகேட்கும் திறன் மற்றும் பேச்சுத்திறன் பறிபோனது. வீட்டை விற்று சுமார் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் மருத்துவம் பார்த்தும் பலன் இல்லை. இதற்கிடையே சமீஹா பர்வீனுக்கு விளையாட்டில் இருக்கும் ஆர்வத்தையும், அபார திறமையையும் பள்ளி ஆசிரியர்கள் கண்டுகொண்டனர். நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஓட்டம் என தனது திறமையால் பல பதக்கங்களை வென்றெடுத்தார் சமீஹா பர்வீன்.

தேசிய காது கேளாதோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாகத் தங்க பதக்கங்களை பெற்று அசத்தினார். மேலும் 2020-ம் ஆண்டு உலக தடகளப் போட்டிக்கும் இவர் தேர்வானார். ஆனால் கொரோனா காரணமாக அந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டது. போட்டி ரத்து ஆனாலும் தனது பயிற்சியைத் தொடர்ந்தார்.

கோர்ட் தீர்ப்பைத் தொடர்ந்து சமீஹா பர்வீனுக்கு வாழ்த்து
கோர்ட் தீர்ப்பைத் தொடர்ந்து சமீஹா பர்வீனுக்கு வாழ்த்து
``பெண் என்பதால் போலந்து செல்ல அனுமதிக்கவில்லை!" - சோகத்தில் வீராங்கனையின் குடும்பம்

சமீஹா பர்வீன் இப்போது 11-ம் வகுப்புப் படித்து வருகிறார். இந்த நிலையில், வரும் 26-ம் தேதி போலந்து நாட்டில் நடக்க உள்ள நான்காவது உலக காது கேளாதோர் தடகளப் போட்டிக்கான தகுதித் தேர்வு டெல்லியில் நடப்பதாக தகவல் வெளியிடப்பட்டது. டெல்லி சென்ற சமீஹா பர்வீன் கடந்த மாதம் 21-ம் தேதி அங்கு நடந்த தகுதித் தேர்வில் நீளம் தாண்டுதல் போட்டியில் சாதனை படைத்தார். நீளம் தாண்டுதலில் 4.2 மீட்டர்தான் இலக்கு. ஆனால் சமீஹா பர்வின் 5 மீட்டர் தூரம் தாண்டி, போலந்துக்குச் செல்லும் தகுதியைப் பெற்றார்.

ஆனால் போட்டிக்குத் தேர்வாகயிருந்த மாணவி ஒருவர், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாததால், சமீஹா பர்வீன் மட்டுமே ஒரே பெண்ணாக போலந்துப் போட்டியில் கலந்துகொள்ளும் சூழல். ஒரே ஒரு பெண் என்பதால், பாதுகாப்பாளர் மற்றும் செலவுக் காரணங்களால் அவரை போலந்துக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என இந்திய விளையாட்டுக் கழகம் முடிவு செய்திருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியும், பெற்றோரும் மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டவர்களைச் சந்தித்து உதவும்படி வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அவர்கள் முயற்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

சமீஹா பர்வீன்
சமீஹா பர்வீன்

இதையடுத்து மாணவியை போலந்தில் நடக்கும் தடகளப் போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என கடந்த 11-ம் தேதி மதுரை உயர்நீதிமன்றத்தில் சமீஹா பர்வீன் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சமீஹா பர்வீனை போலந்துக்கு அழைத்துச் சென்று விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள வைக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து கடையாலுமூட்டைச் சேர்ந்த மக்கள் மகிழ்ச்சியில் சமீஹா பர்வீனுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சமீஹா பர்வீனுக்கு உதவிவரும் சமூக சேவகர் மாஹினிடம் பேசினோம். ``எங்கள் மனு, நீதிபதி மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்திய விளையாட்டு ஆணையத்திடம் `பெண் என்பதால் மறுப்பதா?' என கோர்ட் கேள்வி கேட்டதுடன் அதுகுறித்து பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. முன்னதாக எங்களிடம், மாணவி வாங்கிய பதக்கங்களை தாக்கல் செய்யக் கூறியிருந்தது. விளையாட்டு ஆணையம் கோர்ட்டில், மாணவி எட்டாவதாக வந்ததாக பதில் அளித்தது.

ஷமீஹா பர்வின்
ஷமீஹா பர்வின்

பெண்களில் வேறு யாராவது தேர்வாகியுள்ளார்களா என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு இல்லை' என ஆணையம் பதிலளித்தது. அப்படியானால் மகளிரில் இந்த மாணவி முதலிடத்தில்தானே வந்திருக்கிறார் என நீதிபதி கூறினார். மேலும் மாணவியை போலந்து அழைத்துச் செல்லவும் நீதிபதி உத்தரவிட்டார். சமீஹா பர்வீன் இன்று சென்னை சென்றுள்ளார். நாளை டெல்லி செல்கிறார். அங்கிருந்து விளையாட்டு ஆணையம் மூலம் போலந்து நாட்டுக்குச் செல்கிறார்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு