Published:Updated:

`மக்களின் கவலையைப் போக்கவே கோழிக்கறி!' - ஊரடங்கில் உதவிய மதுரை பா.ஜ.க பிரமுகர்

நிவாரணம் வழங்குதல்
நிவாரணம் வழங்குதல்

பி.ஜே.பி இளைஞரணியின் மதுரை கோட்டப் பொறுப்பாளர் சங்கர்பாண்டி சற்று வித்தியாசமானவர். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு`அரிசியுடன் சேர்த்து ஒரு கிலோ கோழிக்கறியும் வழங்கப்படும்' என்று அறிவித்தார்.

கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருள்களுடன் கோழிக்கறியை வழங்கி அசத்தியிருக்கிறார், மதுரையைச் சேர்ந்த பி.ஜே.பி பிரமுகர்.

கோழிக்கறி விநியோகம்
கோழிக்கறி விநியோகம்

பி.ஜே.பி இளைஞரணியின் மதுரை கோட்டப் பொறுப்பாளர் சங்கர்பாண்டி சற்று வித்தியாசமானவர். முரசொலி நில விவகாரம் சர்ச்சையானபோது ஜெர்மனியில் இருந்த இவர், `முரசொலி மூலப்பத்திரம் எங்கே?' என்று பதாகையைப் பிடித்தபடி தனிநபராக பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில், கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க இருப்பதாக அறிவித்தவர், `அரிசியுடன் சேர்த்து ஒரு கிலோ கோழிக்கறியும் வழங்கப்படும்' என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்பெற்றது.

நிவாரணம் வழங்குதல்
நிவாரணம் வழங்குதல்

ஊமச்சிகுளம் அருகில் உள்ள சிறுதூரில் இன்று நடந்த நிகழ்ச்சியில், பா.ஜ.க மாநிலச் செயலாளர் ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டார். அவர், ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி மற்றும் கோழிக்கறியை வழங்கினார். பா.ஜ.க சார்பில் கோழிக்கறி வழங்கப்பட்டதை அனைவரையும் ஆச்சர்யமாகப் பார்த்தனர்.

பா.ஜ.க இளைஞரணி கோட்டப் பொறுப்பாளர் சங்கர் பாண்டியிடம் பேசினோம். ``பா.ஜ.க வெஜிடேரியன் கட்சி இல்லை. அப்படியொரு தோற்றம் தேவையில்லாமல் உருவாகிவிட்டது. பா.ஜ.க அனைவருக்குமானது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இப்பகுதியிலுள்ள எளிய மக்களுக்கு காய்கறிகள், அத்தியாவசிய பொருள்களை வழங்கிவருகிறேன்.

கோழிக்கறி விநியோகம்
கோழிக்கறி விநியோகம்

சமீபகாலமாக, சிறுவர்களைப் பார்க்கும்போது கவலையாக இருக்கிறது. நல்ல ருசியான உணவு இல்லாமல் அவர்கள் முகம் வாடிப் போயிருந்தது. இந்தச் சூழலில், மக்களால் கறி வாங்க முடியாத சூழ்நிலை. கறியும் கிடைப்பதில்லை. அப்படிக் கிடைத்தாலும் விலை அதிகமாக உள்ளது. இப்பகுதி மக்களின் கவலையைப் போக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கோழிக்கறி வழங்க முடிவுசெய்தேன். இன்று, 300 குடும்பத்தினருக்கு அரிசியுடன் கோழிக்கறி வழங்கியுள்ளோம். மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு