Published:Updated:

மதுரை: ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை... நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பாலம் வேலை! - தவிக்கும் மக்கள்

சோழவந்தான்
News
சோழவந்தான்

மதுரை பெரியார் நிலையத்திலிருந்து சோழவந்தான் செல்லும் பேருந்துகள் அனைத்தும் ஊருக்குள் செல்லாமல் பயணிகளை வாடிப்பட்டி ரோட்டிலேயே இறக்கிவிட்டுச் செல்கின்றன.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் கடந்த அதிமுக ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட ரயில்வே மேம்பால வேலை இன்னும் முடிவடையாமல் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளகிவருகின்றனர்.

சோழவந்தான்
சோழவந்தான்

கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பாக அதிமுக ஆட்சியில் இருந்தபோது பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டு போதிய நிதி இல்லாத காரணத்தால் பாதியில் பணிகள் நிறுத்தப்பட்டுவிட்டன. பசும்பொன் நகரிலிருந்து சோழவந்தான் பேருந்து நிறுத்தம் வரை கட்டப்படவிருக்கும் இந்த மேம்பால வேலைகள் கடந்த மூன்று வருடங்களாக எந்தப் பணியும் நடக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தோண்டப்பட்ட கழிவுநீர் வாய்க்கால் இன்னும் சரிசெய்யப்படாததால் மழைநீர் கலந்து பாதையே சேறும் சகதியுமாக மாறியுள்ளது. பாலத்துக்குக் கீழே உள்ள சாலையின் தரைத்தளம் சரியான முறையில் இல்லாததால், மழைநீர் தேங்கி வழுக்கு சாலையாக மாறிவிட்டது. இதனால் மக்கள் நடந்து செல்லக்கூட முடிவதில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சோழவந்தான்
சோழவந்தான்

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சோழவந்தான் செல்லும் பேருந்துகள் அனைத்தும் ஊருக்குள் செல்லாமல் பயணிகளை வாடிப்பட்டி ரோட்டிலேயே இறக்கிவிட்டுச் செல்கின்றன. இதனால் தென்கரை, முள்ளிப்பள்ளம் போன்ற ஊர்களுக்கு மக்கள் வெகுதூரம் நடந்து செல்லவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றனர். மழைக் காலங்களில், இரவு நேரங்களில் சகதியில் நடந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டிருக்கிறது.

இது குறித்து பொதுமக்களிடம் கேட்டபோது, "பாலம் கட்டரேன்னு ஆரம்பிச்சு ரொம்ப வருஷம் ஆச்சு. மூணு வருஷமா ஒரு செங்கல் கூட நகரல. அப்டியேதான் கெடக்கு. நாங்களும் மனுவல்லாம் குடுத்து பாத்தோம். ஆனாலு ஒன்னு நடக்கல.

எல்லாரும் வருவாங்க! பாப்பாங்க! போவாங்க! அவ்ளோதா ஆனா வேல மட்டும் நடக்காது. விடியல் பொறந்தாவச்சு இந்த பாலத்துக்கு நல்ல காலம் பொறக்கும்னு பாத்தோம். எம்எல்ஏ கூட வந்து பாத்துட்டு தான் போனாரு. ஆனாலும் அப்டியே தான் கெடக்குது. எப்பதான் இந்த பாலத்துக்கு விடிவுக்கலாம் வருமோ தெரியல" என்று கூறினர்.

சோழவந்தான்
சோழவந்தான்

மேலும் நடத்துநர்களிடம் கேட்டபோது, ``ரோடு போடாம வச்சுருக்கறதால உள்ள வர முடியல. சேத்துல வண்டிய திருப்ப முடியாது. வண்டிய ஷெட்ல போடறதுக்கு கூட பாண்டியராஜபுரம் ரயில்வே கேட் சுத்தி போக வேண்டியதா இருக்கு. தவிர ஓட்டுநர், நடத்துநர் பற்றாகுறை வேற. ஆள் இல்லாம பெரிய சிரமமா இருக்கு" என்று கூறுகிறார்கள்.

மதுரை: ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை... நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பாலம் வேலை! - தவிக்கும் மக்கள்

விரைவில் மேம்பாலப் பணிகள் முடிக்கப்பட்டு பேருந்து போக்குவரத்து சீரமைய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மக்கள் கோரிக்கை அரசின் செவிகளுக்கு எட்டும் என நம்புவோம்.