Published:Updated:

மதுரை: `பல லட்சம் ரூபாயில் நிழற்குடை அமைத்தும் பயன் இல்லை..! -பராமரிப்பின்றி மக்கள் அவதி

மதுரை
News
மதுரை

இந்த இரண்டு பேருந்து நிலையங்களைச் சுற்றிலும் மீனாட்சி கல்லூரி, அரசு இராசாசி மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அமெரிக்கன் கல்லூரி போன்ற பல இடங்கள் உள்ளன. இதனால் அதிகமான பயணிகள் பேருந்து நிறுத்தத்துக்கு வருவார்கள்.

மதுரை தமுக்கம் மைதானத்தின் தமிழன்னை சிலைக்கு அருகிலும், எதிர்ப்புறத்திலும் பயணிகளின் வசதிக்காக பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டுள்ளன. தற்போது பயணிகளின் நிழற்குடை சரியான பராமரிப்பின்றி பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மாநகரம் மதுரை. இம்மாநகருக்கு பெருமை சேர்க்கும்விதமாக பல வரலாறுகளும் , அடையாளச் சின்னங்களும் உள்ளன. இத்தகைய சிறப்புமிக்க மாநகரில் அதன் அழகைக் குறைக்கும்விதமாக அசுத்தங்கள் நிரம்பியிருக்கின்றன.

எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது 1981, ஜனவரி மாதத்தில் மதுரையில் 5-வது உலகத்தமிழ் மாநாடு நடத்தப்பட்டது. தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் பங்காற்றிய தலைவர்களின் நினைவைப் போற்றும் வகையில் அவர்களின் மார்பளவு சிலைகளை மதுரைப் பகுதியில் அடையாளச் சின்னங்களாக அமைக்குமாறு உத்தரவிட்டார். அதன்பேரில் திருவள்ளுவர், தொல்காப்பியர், தமிழ்தாத்தா உ.வே.சாமிநாத அய்யர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை போன்ற பலருக்கும் மதுரையிலுள்ள ஒவ்வொரு பகுதியிலும் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மதுரை
மதுரை

அதே காலகட்டத்தில், தமுக்கம் மைதான நுழைவு வாயிலில் தமிழன்னை தேரில் அமைந்திருப்பது போன்ற சிலையும், அதன் அருகில் சங்கரதாஸ் சுவாமிகள் சிலையும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சிலைகள் மதுரைக்கு புதிய அடையாளத்தை ஏற்படுத்தியதோடு சுற்றுலாப்பயணிகள் இதைப் பார்வையிட்டு மகிழவும் சிறந்த இடமாக விளங்குகின்றன. மிகவும் பிரபலமான தமுக்கம் மைதானத்தில் உலகத் தமிழ் மாநாடு, பல அரசியல் கட்சிகளின் மாநாடுகள் மற்றும் தனியார் நிகழ்ச்சிகள் எனப் பல நடைபெற்றதுண்டு. குறிப்பாக சித்திரைத் திருவிழா மற்றும் கோடைகாலக் கண்காட்சியும் இந்த மைதானத்தில் நடைபெறும். அப்போது ஏராளமான மக்கள் ஒன்று கூடுவார்கள்.

மதுரை: `பல லட்சம் ரூபாயில் நிழற்குடை அமைத்தும் பயன் இல்லை..! -பராமரிப்பின்றி மக்கள் அவதி

இப்படிப் பரபரப்பாக இருக்கும் தமுக்கம் மைதானத்துக்கு முன்பும், அதன் எதிர்ப்புறமும் மக்களின் போக்குவரத்து வசதிக்காக கடந்த 2017-2018-ம் ஆண்டில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பயணிகளின் பேருந்து நிறுத்த நிழற்குடையை மதுரை வடக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.ராஜன்செல்லப்பா கட்டிக்கொடுத்தார். இதன் மூலம் கர்பிணிகள், குழந்தைகள், வயதானவர்கள் எனப் பலரும் பயன் பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. நிழற்குடை, நாளடைவில் சரியான பராமரிப்பின்றி பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. நிழற்குடைக்கு உள்ளே சுவிட்ச் போர்டு வசதிகூட இல்லை.

மதுரை
மதுரை

இந்நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு அரட்டையடித்துக்கொண்டும், pubg, free fire போன்ற விளையாட்டுகளை விளையாடும் இடமாகவும் இதைப் பயன்படுத்துகின்றனர். சில சமயங்களில் மது அருந்துபவர்களும் இந்த நிழற்குடைகளைப் பயன்படுத்துவதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் அச்சத்துடனேயே அந்தக் கட்டடத்தின் அருகில் நின்று பேருந்து ஏறுகிறார்கள்.

மதுரை: `பல லட்சம் ரூபாயில் நிழற்குடை அமைத்தும் பயன் இல்லை..! -பராமரிப்பின்றி மக்கள் அவதி

நிழற்குடைக்கு அருகாமையில் e-toilet அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகாமையில்கூட செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றமும், அதைச் சுற்றி குப்பைகளும் போடப்பட்டு அருவருக்கத்தக்க நிலையில் அது உள்ளது.

மேலும் தமுக்கம் பஸ் ஸ்டாப்புக்கு அருகிலுள்ள கோரிப்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் (பெரியார் பஸ் ஸ்டாப்பிலிருந்து மாட்டுத்தாவணி செல்லும் வழியில்) தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்து செல்கின்றனர். ஆனால் அந்தப் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாமல் மக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். மாலை நேரங்களில் தரைத்தளம் சமமாக இல்லாததால் தண்ணீர் தேங்கிவிடுகிறது. போக்குவரத்து நெரிசலும் அதிகமாக ஏற்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த இரண்டு பேருந்து நிறுத்தங்களையும் சுற்றிலும் மீனாட்சி கல்லூரி, அரசு இராசாசி மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அமெரிக்கன் கல்லூரி போன்ற பல இடங்கள் உள்ளன. இதனால் அதிகமான பயணிகள் பேருந்து நிறுத்தத்துக்கு வருவார்கள்.

தமுக்கம் பேருந்து நிறுத்தத்தில் மொத்தம் நான்கு பாகங்களாக பேருந்து நிழற்குடைகள் உள்ளன. ஒரே இடத்தில் இத்தனை பேருந்து இருந்தும், உபயோகமற்றவையாக உள்ளன.

மதுரை: `பல லட்சம் ரூபாயில் நிழற்குடை அமைத்தும் பயன் இல்லை..! -பராமரிப்பின்றி மக்கள் அவதி

தமுக்கம் பேருந்து நிறுத்தத்தின் தினசரிப் பயணிகளின் ஒருவரான அஹமத், ``பல லட்சம் செலவில் நிழற்குடை அமைத்தும், பொது மக்களுக்கு பயனில்லாமல் இருக்கிறது. e-toilet அருகில்கூட செல்ல முடியவில்லை. மாநகராட்சி ஊழியர்கள் இதைக் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது. சில ஆண்கள் நிழற்குடைக்குப் பின்புற வெளியில் சிறுநீர் கழித்துவிடுகின்றனர். இதனால் பிற மக்களுக்கும் நோய் பரவும் அபாயம் உள்ளது. தமிழன்னையின் சிலைக்கு அருகிலேயே இப்படி அசுத்தமாக இருக்கிறது. மாநகராட்சி ஆணையர், இது தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்ற கோரிக்கையை ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

- மாணவப் பத்திரிகையாளர்