Published:Updated:

மதுரை: தாசில்தார் உடனடி சஸ்பெண்ட்; கலெக்டரின் அதிரடிக்குக் காரணம் என்ன?!

முதியோர் பராமரிப்பு

சமீபத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளின் குற்றச்சாட்டுக்கு சரியாக பதில் அளிக்காத மேலூர் துணை தாசில்தாரை கூட்டத்தை விட்டு வெளியேற்றி, மெமோ வழங்க கலெக்டர் உத்தரவிட்டார். முறைகேட்டில் ஈடுபட்ட தன் அலுவலக செயலாளர், கார் டிரைவர் டிரான்ஸ்ஃபர் செய்தார்.

மதுரை: தாசில்தார் உடனடி சஸ்பெண்ட்; கலெக்டரின் அதிரடிக்குக் காரணம் என்ன?!

சமீபத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளின் குற்றச்சாட்டுக்கு சரியாக பதில் அளிக்காத மேலூர் துணை தாசில்தாரை கூட்டத்தை விட்டு வெளியேற்றி, மெமோ வழங்க கலெக்டர் உத்தரவிட்டார். முறைகேட்டில் ஈடுபட்ட தன் அலுவலக செயலாளர், கார் டிரைவர் டிரான்ஸ்ஃபர் செய்தார்.

Published:Updated:
முதியோர் பராமரிப்பு

புகார் மனு அளித்த பெரியவரை, புகாரைத் திரும்பப் பெற மிரட்டிய தாசில்தாரை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ள சம்பவம், மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை திருப்பாலையை சேர்ந்த சதாசிவத்துக்கு இரண்டு மகன்கள்.  கோயம்புத்தூரில் மத்திய அரசு பணியில் உள்ள  இரண்டாவவது மகன் ஜெயபிரகாஷ், தன்னிடமிருந்த நகை, பணம், சொத்துகளை எமாற்றி அபகரித்ததாக மதுரை ஆர்.டி.ஒ-விடம் `பெற்றோர் மற்றும் முதியோர் நலம் பரமாரிப்பு சட்டத்தின்' கீழ் சதாசிவம் புகார் செய்தார்.

தாசில்தார் செல்வராஜ்
தாசில்தார் செல்வராஜ்

அந்த புகார் மீது விசாரணை நடைபெற்று வரும்  நிலையில் ஆர்.டி.ஒ-வின் நேர்முக உதவியாளரான, தாசில்தார் கேடரில் உள்ள செல்வராஜ், விசாரணைக்கு வந்த சதாசிவத்திடம், `மனுவை வாபஸ் வாங்குங்கள்’ என்று ஜெயபிரகாஷுக்கு ஆதரவாகப் பேசி மிரட்டியுள்ளார்.

இது குறித்து கலெக்டரிடம் சதாசிவம் புகார் அளித்தார். கலெக்டர் நடத்திய விசாரணையில், செல்வராஜ் மிரட்டியதும் அதிகார வரம்புக்கு மீறி செயல்பட்டதும் தெரியவந்தது.

உடனே தாசில்தார் செல்வராஜை சஸ்பெண்ட் செய்து ,கலெக்டர் அனீஷ் சேகர் உத்தரவிட்டார்.

சமீபத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், விவசாயிகளின் குற்றச்சாட்டுக்கு சரியாக பதில் அளிக்காத மேலூர் துணை தாசில்தாரை, கூட்டத்தை விட்டு வெளியேற்றி மெமோ வழங்க கலெக்டர் உத்தரவிட்டார்.

கலெக்டர் அனீஷ் சேகர்
கலெக்டர் அனீஷ் சேகர்

சில மாதங்களுக்கு முன், தன் அலுவலக செயலாளர், கார் டிரைவர் முறைகேட்டில் ஈடுபடுகிறார்கள் என்ற தகவல் வந்தவுடன், அவர்களை டிரான்ஸ்ஃபர் செய்தார்.

இந்நிலையில், தற்போது தாசில்தார் செல்வராஜை சஸ்பெண்ட் செய்துள்ளார். மதுரை கலெக்டரின் அதிரடி நடவடிக்கைகள், தவறு செய்யும் அதிகாரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.