Published:Updated:

கணவருக்கு இறுதிக் காரியம்; சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்த பெண்!- நெகிழவைத்த மதுரை கலெக்டர்

அஞ்சலிதேவி குழந்தைகளுடன்
அஞ்சலிதேவி குழந்தைகளுடன்

இறுதிக் காரியம் முடிந்த பின், கொரோனா ஊரடங்கால் எந்தவித போக்குவரத்தும் இல்லாததால், வாகராயம்பாளைத்துக்கு அவரால் திரும்பிச் செல்ல முடியவில்லை.

உடல் நலமில்லாமல் மரணமடைந்த கணவர் உடலை கோயம்புத்தூர் வாகராயம்பாளையத்திலிருந்து கணவரின் சொந்த ஊரான வாடிப்பட்டிக்கு கடந்த மாதம் கொண்டுவந்து அடக்கம் செய்துவிட்டு, ஊருக்கு திரும்பிச் செல்ல முடியாமல் 3 குழந்தைகளுடன் தவித்த பெண்ணுக்கு, மதுரை கலெக்டர் உதவி செய்தது அனைவராலும் பாராட்டப்பட்டுவருகிறது.

செஞ்சிலுவைச் சங்கம் உதவி
செஞ்சிலுவைச் சங்கம் உதவி
ஈ.ஜெ.நந்தகுமார்

கோவை சூலூர், வாகராயம்பாளையம் பள்ளக்கோரையில், முனீஸ்வரன்-அஞ்சலிதேவி தம்பதியினர் வசித்துவந்தனர். கூலி வேலை செய்துவந்த இவர்களுக்கு 3 குழந்தைகள். இந்தநிலையில், உடல் நலமில்லாமல் இருந்துவந்த முனீஸ்வரன், நெஞ்சுவலியால் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி மரணமடைந்தார்.

கடந்த ஏப்ரல் 1-ம் தேதி, முனீஸ்வரனின் விருப்பப்படி அவரது சொந்த ஊரான மதுரை வாடிப்பட்டி அருகே உள்ள காடுப்பட்டி கிராமத்துக்கு உடலைக் கொண்டுவந்து அடக்கம் செய்தார் அஞ்சலிதேவி.

இறுதிக் காரியம் முடிந்த பின், கொரோனா ஊரடங்கால் எந்தவித போக்குவரத்தும் இல்லாததால், வாகராயம்பாளைத்துக்கு அவரால் திரும்பிச் செல்ல முடியவில்லை.

அஞ்சலிதேவிக்கு உதவி
அஞ்சலிதேவிக்கு உதவி

கணவரின் சகோதரி வீட்டில் ஒரு மாதமாக தங்கியிருந்தார். அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டுவந்ததால், அங்கு போதிய உணவின்றியும் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமலும் 3 குழந்தைகளுடன் தவித்த அவரின் நிலையை அங்குள்ள ஆட்டோ ஓட்டுனர் அறிந்து, அவர்களை மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்துவந்தார்.

கலெக்டர் வினய் ஐ.ஏ.எஸ்-ஸை சந்தித்து தன் நிலையைச் சொல்ல, ரெட் கிராஸ் அமைப்பின் மூலம் அவர்களுக்குத் தேவையான அரிசி, மளிகைப் பொருள்களை அளித்து, கார் மூலம் வாகராயம்பாளையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அடுத்த கட்டுரைக்கு