Published:Updated:

`எங்களைப் பிரித்து கொலை செய்திடுவாங்க!'- தி.மு.க மாவட்ட துணைச் செயலாளர் மகள் கண்ணீர்

அருண் சின்னதுரை
வி.சதிஷ்குமார்

இந்த வழக்கானது திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலிருந்து திருப்பரங்குன்றம் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

திருமணம் செய்துக்கொண்ட  காதல் ஜோடி
திருமணம் செய்துக்கொண்ட காதல் ஜோடி

திருவள்ளூர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் காயத்ரி ஸ்ரீராம். 2009-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. சார்பில் வேட்பாளராக போட்டியிட்டவர்.

நிதர்சனா - மைக் ரிச்சர்ட்சன்
நிதர்சனா - மைக் ரிச்சர்ட்சன்

இவரின் மகள் நிதர்சனா. இவர், மைக் ரிச்சர்ட்சன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில். நண்பர்கள் உதவியுடன் காதலன் மைக் ரிச்சர்ட்சனை நிதர்சனா இன்று மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் திருமணம் செய்துகொண்டார்.

இதனிடையே, நிதர்சனாவை காணவில்லை என பூந்தமல்லி காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் நிதர்சனாவை காவல்துறையினர் தேடிவந்தனர். இந்த நிலையில் நிதர்சனா மதுரையில் இருப்பதாக வந்த தகவலையடுத்து பூந்தமல்லி காவல்துறையினர் அங்கு விரைந்தனர். தகவல் அறிந்து திருமணமான காதல் ஜோடி, திருப்பரங்குன்றம் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தது.

திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம்

இந்த வழக்கானது திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலிருந்து திருப்பரங்குன்றம் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. `தங்களுக்கு திருமண வயது இருந்தபோதும், சென்னைக்குச் சென்றால் பெற்றோர் பிரித்துக் கொலை செய்ய வாய்ப்புள்ளது' என காவல்துறையினரிடம் நிதர்சனா கண்ணீர் மல்க கூறியுள்ளார்.