Published:Updated:

மதுரை: `மாலைக்கு 10 ரூபாய் கிடைக்கும்... இப்ப அதுவும் போச்சு’ -கலங்கும் பூ வியாபாரிகள்

ஆரப்பாளையம் பூக்கடை
ஆரப்பாளையம் பூக்கடை

ஊரடங்கு காரணமாகப் பூ வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர் மதுரை பூ வியாபாரிகள்.

மதுரை என்றாலே சட்டென நம் நினைவுக்கு வருவது பூக்கள்தான். கொரோனா ஊரடங்கு காரணமாகப் பூக்கள் வரத்து குறைவு மற்றும் திருவிழா, திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் இல்லாததால், பூ வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆரப்பாளையம் பூக்கடைகள்.
ஆரப்பாளையம் பூக்கடைகள்.
மதுரை: கொரோனா போண்டாவைத் தொடர்ந்து மாஸ்க்! - வரவேற்பால் மிரளும் ஹோட்டல்

மதுரை ஆரப்பாளையம் அருகே பூ கடை வைத்துள்ள ஐயப்பன் பேசும்போது, “20 வருடமாகப் பூ வியாபாரம் செய்து வருகிறேன். கொரோனா ஊரடங்கு ஆரம்பித்ததில் இருந்து கோயில், திருமணம், திருவிழா என எதுவும் இல்லை. இறுதிச் சடங்கிற்கும் 20 பேர்தான் போக வேண்டும் என அரசு கூறியிருப்பதால், இறுதிச் சடங்கு மாலைகளும் குறைவாகத் தான் விற்பனையாகிறது. ஒரு மாலை விற்றால் ரூ. 10 கிடைக்கும். இப்போது அதுக்கும் வழி இல்லை.

பூ வியாபாரி ஐயப்பன்
பூ வியாபாரி ஐயப்பன்

மார்க்கெட் சரிவர இல்லாததால், திண்டுக்கலில் உள்ள விவசாயிகளிடம் பூக்களை வாங்குகிறோம். ஒரு கிலோ ரோஜாப்பூ கிலோ ரூ. 100 என வைத்துக்கொண்டால், திண்டுக்கல் போய் வாங்கி வந்தால், அதன் விலை ரூ. 200 ஆக உயர்ந்துவிடுகிறது. ஆனால், ரூ. 70 மற்றும் ரூ. 80 -க்கு எனப் பழைய விலைக்குதான் மக்கள் மாலை கேட்கின்றனர். ரொம்பவும் சிரமமாக இருக்கிறது. அரசுதான் பூ வியாபாரிகளுக்கு ஏதாவது நிவாரணம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தளர்வுகள் அறிவிக்க வேண்டும்” என்றார் வேதனையோடு.

`12 மணி நேரமாகக் கிழிந்த நிலையில் பறந்த தேசியக் கொடி!’ - மதுரை ரயில் நிலைய சர்ச்சை
அடுத்த கட்டுரைக்கு