Published:Updated:

மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் பாதியில் பழுதான லிஃப்ட்! - கதவை உடைத்து மீட்ட தீயணைப்பு படையினர்

மதுரை அரசு மருத்துவமனை
மதுரை அரசு மருத்துவமனை

ஐந்து தளங்களைக்கொண்ட இந்த சிறப்புப் பிரிவில் நேற்று மாலை லிஃப்ட் திடீரென பழுதாகி, பாதி வழியிலே நின்றிருக்கிறது. இதனால் லிஃப்டில் இருந்த 13-க்கும் மேற்பட்ட நோயாளிகள், நோயாளிகளின் உறவினர்கள், குழந்தைகள் சிக்கிக்கொண்டு அலற ஆரம்பித்தார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மதுரை அரசு இராசாசி மருத்துவமனையிலுள்ள லிஃப்ட்டில் நோயாளிகள் உட்பட 13 பேர் சிக்கிக்கொள்ள, அவர்களைத் தீயணைப்புத்துறை மீட்புப்படையினர் பத்திரமாக மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீட்கும் பணி
மீட்கும் பணி

தென் தமிழகத்தில், முக்கியமானதும் மிகப்பெரியதுமான மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு தினமும் உள் நோயாளிகளாகவும், வெளி நோயாளிகளாகவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள்.

இங்கு வருகிற நோயாளிகளுக்குப் போதிய வசதிகள் இல்லையென்று புகார்கள் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், மக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிவருகிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

லிஃப்ட்டிலிருந்து மீட்கப்படும் மக்கள்
லிஃப்ட்டிலிருந்து மீட்கப்படும் மக்கள்

இந்தநிலையில்தான், லிஃப்ட் பழுதாகி மக்கள் அதில் மாட்டிக்கொண்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியடையவைத்திருக்கிறது. பச்சிளம் குழந்தைகளுக்கும், தாய்மார்களுக்கும் அனைத்துச் சிறப்பு வசதிகளுடன் சிகிச்சை அளிக்கும் தாய்-சேய் பிரிவு புதிய கட்டடத்தில் செயல்பட்டுவருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஐந்து தளங்களைக்கொண்ட இந்தச் சிறப்புப் பிரிவில் நேற்று மாலை லிஃப்ட் திடீரென பழுதாகி பாதி வழியிலே நின்றிருக்கிறது. இதனால் லிஃப்டில் இருந்த 13-க்கும் மேற்பட்ட நோயாளிகள், அவர்களின் உறவினர்கள், குழந்தைகள் சிக்கிக்கொண்டு அலற ஆரம்பித்தார்கள்.

மீட்புப் பணி
மீட்புப் பணி

உடனே தல்லாகுளம் தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டதால் விரைந்து வந்த அவர்கள், லிஃப்டின் கதவை உடைத்து பொதுமக்களை மீட்டனர். லிஃப்டை முறையாகப் பராமரிக்க ஆட்கள் இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.

ஆறு மாதங்களுக்கு முன்பும் இதுபோல் லிஃப்ட் பழுதாகி பாதியில் நின்றதாகச் சொல்கிறார்கள். அதிகமான மக்கள் வந்து செல்லும் இந்த மருத்துவமனையில் பொதுமக்கள், நோயாளிகள் பயன்படுத்தும் அனைத்து வகையான இயந்திரங்களும், மருத்துவ உபகரணங்களும் தொடர் கண்காணிப்புடனும், முறையாகப் பராமரிக்கப்படவும் வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு