Election bannerElection banner
Published:Updated:

``குடிமராமத்துப் பணி விவரங்களை இணையத்தில் வெளியிடுங்கள்!" - தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

HC Madurai Bench
HC Madurai Bench

குடிமாரமத்துப் பணிகள் தொடர்பான வழக்கில் பொதுமக்களுக்கு தெரியும்படி புகைப்படத்துடன் குடிமராமத்துப் பணி குறித்த விவரங்களை இணையத்தில் வெளியிட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

குடிமராமத்துப் பணிகள் தொடர்பான வழக்கில் பொதுமக்களுக்குத் தெரியும்படி புகைப்படத்துடன் குடிமராமத்துப் பணி குறித்த விவரங்களை இணையத்தில் வெளியிட உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இது சம்பந்தமாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்த வழக்கறிஞர் அன்புநிதியிடம் ஏற்கெனவே நாம் பேசியபோது, ``தமிழகத்தில் ஆறு, ஏரி, குளங்களைத் தூர்வாரி ஆழப்படுத்தவும் கரைகளை மேம்படுத்தவும் குடிமராமத்து மேற்கொள்ள சிறப்பான திட்டம் கொண்டுவரப்பட்டது.

குடிமராமத்துப் பணி குறித்து சாத்தையார் அணையில் அமைச்சர் உதயகுமார் ஆய்வு.
குடிமராமத்துப் பணி குறித்து சாத்தையார் அணையில் அமைச்சர் உதயகுமார் ஆய்வு.

ஊரகப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகப்படுத்த 1,250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து குடிமராமத்து திட்டத்தை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் கடந்த 2019-ல் அறிவித்தார். ஆனால், தற்போது போதுமான அளவு மழை பெய்தும், தமிழகத்திலுள்ள நீர் நிலைகள் போதுமான அளவு நிரம்பவில்லை. இதற்குக் காரணம், இத்திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படாததே.

அதனால் தமிழகத்தில் அனைத்து நீர்நிலைகளில் நடத்தப்படும் குடிமராமத்துப் பணிகளின் விவரம், அவற்றின் சர்வே எண், நிதி ஒதுக்கீடு பற்றி மக்கள் அறியும் வகையில் அனைத்தையும் அந்தந்த மாவட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கோரியிருந்தேன். அதை விசாரித்த நீதிபதிகள், குடிமராமத்துப் பணியில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 9-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை மீண்டும் இன்று நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் குடிமராமத்துப் பணி என்பது ரகசிய பணி அல்ல. ஒரு பணியில் வெளிப்படைத்தன்மை இருந்தால் அங்கு ஊழல் என்பது குறைக்கப்படும். எனவே, மனுதாரரின் கோரிக்கையை குடிமராமத்துப் பணிகள் குறித்த விவரங்களை அனைத்துப் பொதுமக்களும் தெரிந்துகொள்ளும் விதமாக இணையதளம் தொடங்கி அதில் குடிமராமத்துப் பணி நடைபெறக்கூடிய இடம் பணியின் விவரம் கால அளவு அதற்கான செலவழிக்கக்கூடிய தொகை, அதில் நடைபெற்றுள்ள பணிகள் என முழு விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அமைச்சர் பாஸ்கரன் சிவகங்கை பகுதியில் குடிமராமத்துப் பணியைத் தொடங்கி வைத்தபோது.
அமைச்சர் பாஸ்கரன் சிவகங்கை பகுதியில் குடிமராமத்துப் பணியைத் தொடங்கி வைத்தபோது.

அதேபோல் பணி ஆரம்பிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட போட்டோ பணி முடிந்த பின் எடுக்கப்பட்ட போட்டோவையும் சேர்த்து இணைய தளத்தில் பதிவிட வேண்டும்.
இந்த உத்தரவை 12 வார காலத்தில் அரசு நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு