Published:Updated:

மதுரை: 68 மீனவர்களை மீட்பதில் தாமதம்; மத்திய அரசிடம் விளக்கம் கேட்ட உயர் நீதிமன்றம்!

மதுரை உயர் நீதிமன்றம்
News
மதுரை உயர் நீதிமன்றம்

நீதிபதிகள், ஜனவரி மாத தொடக்கத்திலேயே 68 மீனவர்களும் அவர்கள் குடும்பத்தை சந்திக்கும் வகையில் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்கள்.

இலங்கை கடற்படையால் 68 தமிழக மீனவர்கள் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பேரதிர்ச்சி ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தை கண்டித்து ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

மதுரை உயர் நீதிமன்றம்
மதுரை உயர் நீதிமன்றம்

இந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை மீட்பதில் தாமதம் ஏற்படுகிறது, எனக்கூறி மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் விரிவான பதில் மனுவை மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன், தாக்கல் செய்த மனுவில், ``ராமேஸ்வரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 68 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீது இலங்கை சுகாதாரத்துறையினர் கிருமிநாசினி தெளித்து அவமானப்படுத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்!
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்!

கடந்த 34 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்படுவதும் தாக்கப்படுவதும் தொடர்கிறது. இந்திய மீனவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டியது மத்திய அரசின் கடமை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்திய மீனவர்களை பாதுகாப்பாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக முதல்வர் உள்ளிட்டோர் ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளனர். குஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் கடற்படையினரால் சுடப்பட்டதில் ஒருவர் இறந்தபோது உடனடியாக செயல்பட்ட ஒன்றிய அரசு, பாகிஸ்தான் தூதரை அழைத்து கடுமையாக எச்சரித்தது. ஆனால், நமது மீனவர்கள் 68 பேரை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உயர் நீதிமன்றம் தலையிட்டு 68 மீனவர்களையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் அவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை மேற்கொள்ளவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஸ்ரீமதி, ``இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 68 மீனவர்களை இந்தியா அழைத்து வர என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?" என கேள்வி எழுப்பினர்.

"தமிழக முதல்வர், 68 மீனவர்களையும் இலங்கையிலிருந்து மீட்டு வர மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்" எனத் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசு தரப்பில், ``68 மீனவர்களை இந்தியா கொண்டு வருவதற்காக இலங்கை வெளியுறவுத் துறையுடன் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது" என தெரிவித்தனர். மேலும் மத்திய அரசு தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது.

மதுரை உயர் நீதிமன்றம்
மதுரை உயர் நீதிமன்றம்

அப்போது நீதிபதிகள், ``ஜனவரி மாத தொடக்கத்திலேயே 68 மீனவர்களும் அவர்கள் குடும்பத்தை சந்திக்கும் வகையில் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அறிவுறுத்தினார்கள். ``இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான பதில் மனுவை 31-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்" என மத்திய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

புத்தாண்டுக்குள் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஜனவரி 1-ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக ராமேஸ்வரம் வட்டார மீனவர் சங்கங்கள் அறிவித்துள்ள நிலையில், மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ள பதில் மனு, மீனவர்கள் மீட்பு நடவடிக்கையில் நம்பிகையை ஏற்படுத்துமா என்பது என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.