Published:Updated:

மஞ்சப்பை பரோட்டா, மஞ்சள் ஸ்கூல்பேக், மஞ்சப்பை; விழிப்புணர்வுக்காக இலவசமாக கொடுக்கும் மதுரை ஹோட்டல்!

மஞ்சப்பை பரோட்டா

பார்சல் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு மஞ்சப்பை, மஞ்சள் ஸ்கூல் பேக் என இலவசமாகக் கொடுப்பது மட்டுமல்லாமல் மஞ்சப்பை பரோட்டோவும் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள் மதுரை, அழகரடி 'முக்கு கடை’ கே.சுப்பு ஹோட்டல் நிர்வாகத்தினர்.

இலவச மஞ்சப்பை
இலவச மஞ்சப்பை

ருசியான உணவுகளுக்குப் பெயர் பெற்ற மதுரையில் பரோட்டோ, கறிதோசை, பிரியாணி, மட்டன் முட்டைக்கறி, வெங்காயக்கறி, இலை பரோட்டா, பொரிச்ச பரோட்டா என வெரைட்டியான உணவுகளுக்கு பிரபலமானது அழகரடி 'முக்கு கடை' கே.சுப்பு ஹோட்டல். பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இந்த ஹோட்டலுக்கு மதுரையில் 5 இடங்களில் கிளைகள் உள்ளன. கேட்டரிங் சர்வீஸும் நடத்துகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பைகளை ஒழித்து துணிப்பைகளை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த அரசு அறிவித்த திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், சமீபத்தில் இவர்கள் செய்த விளம்பரம் மதுரை மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

ஹோட்டல் நிர்வாகி நவநீதன்
ஹோட்டல் நிர்வாகி நவநீதன்

கடையில் பார்சல் வாங்க வருபவர்கள் மஞ்சள் பையுடன் வந்தால் அவர்களுக்கு 5% தள்ளுபடியும், முகக்கவசமும் வழங்குகிறார்கள். முழு கிரில் அல்லது தந்தூரி சிக்கன் வாங்கினால் மஞ்சள் கலர் ஸ்கூல் பேக்கும், அரை கிரில் அல்லது தந்தூரி சிக்கன் வாங்கினால் மஞ்சப்பை போன்று உருவாக்கப்பட்ட மஞ்ச பரோட்டா மூன்றும் வழங்குகிறார்கள். அது மட்டுமல்லாமல் பார்சல் வாங்கும் அனைவருக்கும் மஞ்சப்பைகளை இலவசமாக வழங்குகிறார்கள்.

"இது வியாபார தந்திரமா?" என்று ஹோட்டல் நிர்வாகி நவநீதனிடம் கேட்டோம். "எங்கள் கடைக்கென்று இனி விளம்பரம் தேவையில்லை. அந்தளவுக்கு மக்கள் மத்தியில் பிரபலம். 60 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் தாத்தா காலத்தில் இதே பகுதியில் சின்ன இட்லிக் கடையாக தொடங்கி பின்பு அசைவ ஹோட்டலாக மாறி பல சுவையான உணவுகளை கொடுத்து இன்று 5 கிளைகள் கொண்ட ஹோட்டலாக மாறியுள்ளோம். வெங்காயக்கறி உள்ளிட்ட எங்கள் ஹோட்டலுக்கென்று உள்ள தனித்த வெரைட்டிகளை விரும்பி வாடிக்கையாளர்கள் தேடி வருகிறார்கள். அப்படி இருக்கும்போது வியாபார விளம்பரத்துக்காக இதை செய்யவில்லை. பிளாஸ்டிக் ஒழிப்பில் நாமும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், அரசு அறிவித்துள்ள மஞ்சப்பை திட்டத்தை மக்களிடம் மீண்டும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் எடுத்த சின்ன முயற்சிதான் இது.

சுப்பு ஹோட்டல்
சுப்பு ஹோட்டல்

மாணவ பருவத்திலிருந்தே மஞ்சப்பை பற்றிய புரிதல் ஏற்பட வேண்டும் என்பதால்தான், ஒரு முழு கிரில் சிக்கன் வாங்குகிறவர்களுக்கு 300 ரூபாய் மதிப்புள்ள மஞ்சள் கலர் ஸ்கூல் பேக் வழங்குகிறோம். இதனால் எங்களுக்கு லாபமே இல்லை.

அதுபோல் அரை கிரில் சிக்கன் வாங்குகிறவர்களுக்கு மஞ்சள் தூள் கலந்து மஞ்சப்பை மாடலில் தயார் செய்த 3 பரோட்டாக்களை இலவசமாக கொடுக்கிறோம். இதை எல்லாம் ஒரு வாரத்துக்கு மட்டும் கொடுக்கத்தான் திட்டமிட்டிருந்தோம். இப்ப இதை எதிர்பார்த்து மக்கள் அதிகமாக வருவதால் தொடர்ந்து கொடுக்க திட்டமிட்டுள்ளோம். அரசின் நல்ல திட்டத்துக்கு எங்களால் முடிஞ்ச விழிப்புணர்வுப்பணி இது" என்றார்.

ஹோட்டல் நிர்வாகி நவநீதன்
ஹோட்டல் நிர்வாகி நவநீதன்

விழிப்புணர்வு நோக்கம் நிறைவேறட்டும்.