Published:Updated:

`புனிதப் பயணம்; கயாவில் தவித்த மதுரை முதியவர்கள்!’- நீதிபதி தீபா உதவியால் நெகிழ்ச்சி #Lockdown

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

`சட்டப்பணிகள் ஆணைக்குழு, களத்தில் இறங்கி 22 பேரையும் மீட்டு பாதுகாப்பான சத்திரம் ஒன்றில் தங்க வைத்துள்ளனர்.'

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் மிகப்பெரிய சமூக, பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்திவருகிறது. சர்வதேச நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, மக்கள் தங்கள் தங்குமிடங்களுக்குள் முடக்கிவைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில், மதுரையில் இருந்து காசிக்கு புனித யாத்திரைக்குச் சென்ற நபர்கள் மீண்டும் ஊர் திரும்பும் சமயத்தில் ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து வசதி இல்லாமல் கயாவில் தவித்துள்ளனர்.

கொரோனா
கொரோனா

இதில் பாதிக்கப்பட்ட 22 நபர்களும் முதியவர்கள் என்பதால் உணவு, மருந்து, தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதி கிடைக்காமல் அவதிப்பட்டுள்ளனர். அங்கு சிக்கித் தவிப்பவர்களுக்கு மதுரையிலிருந்து சட்ட உதவி மையம் மூலம் நீதிபதி தீபா, அவர்களுக்குத் தேவையான உதவிகளை ஏற்பாடு செய்து உதவியிருக்கிறார்.

இதுகுறித்து நீதிபதி தீபாவிடம் பேசினோம். ``புனிதப் பயணம் சென்ற நபர்கள் ஊர் திரும்பும்போது உதவிகள் இல்லாமல் தவித்தது தெரியவந்தது. இதுதொடர்பாக மதுரை இலவச சட்ட பணிகள் ஆணையக்குழுவுக்குத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், நான் அங்குள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழு நீதிபதி பரத்வாஜிடம் போனில் தொடர்புகொண்டு, அத்தியாவசியத் தேவைக்காக தவித்து வரும் அந்த 22 பேரையும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்குமாறு கேட்டுக் கொண்டேன்.

தீபா
தீபா

இதையடுத்து, அங்குள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழுவினர், களத்தில் இறங்கி 22 பேரையும் மீட்டு பாதுகாப்பான சத்திரம் ஒன்றில் தங்க வைத்துள்ளனர். அந்த 22 பேரும் பல்வேறு இடங்களுக்கு பயணித்திருக்கிறார்கள். அதனால், அவர்களுக்கு கொரோனா தொற்று உட்பட வேறு எந்த நோய் தொற்றும் உள்ளதா என மருத்துவக் குழுவினரை வைத்து சோதனை செய்தனர்.

இச்சோதனையின் முடிவில் அவர்களுக்கு தொற்று ஏதும் இல்லை என்பது கண்டறியப்பட்டது. மேலும், அவர்களது உடலில் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் போன்றவற்றையும் பரிசோதனை செய்தனர். அந்தப் பரிசோதனையிலும் 22 பேரும் நலமுடன் இருப்பதாக தெரியவந்துள்ளது. அவர்கள் அனைவரும் தற்போது அங்குள்ள சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உதவியுடன் உணவு, தங்குமிடம் என பாதுகாப்பாக உள்ளனர்.

covid-19
covid-19

தற்போது போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினால் இவர்கள் அனைவரையும் ஊரடங்கு முடிந்தபின்பு மதுரைக்கு அழைத்து வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோல் மதுரையைச் சேர்ந்தவர்கள் வேறு எங்காவது சிக்கித் தவித்துக்கொண்டிருந்தால் இதுகுறித்து மதுரை இலவச சட்டப் பணிகள் ஆணைக்குழுவை அணுகினால் தேவையான உதவிகளை அந்தந்த பகுதியிலுள்ள சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் மூலம் செய்து தரப்படும்” என தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு