Published:Updated:

பயோ டீசலாக மாறும் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்; புது முயற்சியில் மதுரை மீனாட்சியம்மன் கோயில்!

பயன்படுத்திய எண்ணெய்
பயன்படுத்திய எண்ணெய்

உபயோகிக்கப்பட்ட சமையல் எண்ணெய்யை மீண்டும் மீண்டும் உபயோகிப்பதால் அதில் தயாரிக்கப்படும் உணவை உண்பவர்களுக்கு பலவித நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது என்று மருத்துவர்கள், உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் எச்சரித்து வருகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்யை பயோ டீசல் தயாரிக்க வழங்கத் தொடங்கியுள்ளதன் மூலம் சமையல் எண்ணெய் பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

பயன்படுத்திய எண்ணெய்
பயன்படுத்திய எண்ணெய்
“சாணம் இருக்க பயோ உரங்கள் எதற்கு?” - வழிகாட்டிய சுபாஷ் பாலேக்கர்!

உபயோகிக்கப்பட்ட சமையல் எண்ணெய்யை மீண்டும் மீண்டும் உபயோகிப்பதால் அதில் தயாரிக்கப்படும் உணவை உண்பவர்களுக்கு பலவித நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது என்று மருத்துவர்கள், உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் எச்சரித்து வருகிறார்கள்.

பெரிய ஹோட்டல்களில் ஒருமுறை உபயோகிக்கப்பட்ட சமையல் எண்ணெய்யை, சிறு ஹோட்டல்காரர்கள், சாலையோர பலகாரக் கடைக்கரர்கள் குறைந்த விலைக்கு வாங்கிச் சென்று பயன்படுத்துகிறார்கள். பலமுறை ஒரே சமையல் எண்ணெய்யை பயன்படுத்துவது உடல் நலத்துக்கு கேடு என்றாலும், இதுபோன்று பயன்படுத்தும் கடைகள் பற்றி மக்களுக்கு தெரியாமல் உள்ளது.

பயன்படுத்திய எண்ணெய்
பயன்படுத்திய எண்ணெய்

இதைத் தடுக்கும் வகையில் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்யை விலைக்கு வாங்கிக் கொள்வதாக உணவு பாதுகாப்புத் துறை அறிவித்து, அதன்படி, பெரிய ஹோட்டல்கள், பேக்கரி, கேட்டரிங் சர்வீஸ்காரர்களிடம் பெற்று வருகிறது. அப்படி வாங்கிய சமையல் எண்ணெய்யை பயோ டீசல் தயாரிக்கும் நிறுவனத்துக்கு அனுப்புகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில்தான் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகமும், தங்கள் பக்தர்களுக்கு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்யை பயோ டீசல் தயாரிக்கும் நிறுவனத்துக்கு வழங்க முடிவெடுத்தது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மீனாட்சி அம்மன் கோயில் அலுவலர், ``கோயில் சார்பில் புளியோதரை, வடை, முறுக்கு போன்றவை பிரசாதமாக விற்பனை செய்யப்படுகின்றன. இதற்காக தினமும் பல லிட்டர் சமையல் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.

ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மறுமுறை பயன்படுத்துவதில்லை. அதனால், அப்படி கிடைக்கும் எண்ணெய்யை பயோ டீசல் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு வழங்க முடிவெடுத்தோம். முதல்கட்டமாக 600 லிட்டர் வழங்கியுள்ளோம்" என்றார்.

பயன்படுத்திய எண்ணெய்
பயன்படுத்திய எண்ணெய்
`தமிழகத்தை முழு இயற்கை வேளாண்மை மாநிலமாக மாற்றுவதில் உறுதி!' - சரியான வழியில் தமிழக அரசு

பொதுவாக கலப்பட எண்ணெய்யால் ஏற்படும் பாதிப்பு ஒருபக்கம் இருக்கும் நிலையில், பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் கொடுமையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை தடுக்கும் நோக்கில் கடந்த சில வருடங்களாக பயன்படுத்திய எண்ணெய்யை உணவுப் பாதுகாப்பு துறையினர் பெற்று வருகிறார்கள்.

கடந்த 2 வருடங்களில் மதுரையில் மட்டும் 92,000 லிட்டர் சேகரிக்கப்பட்டு, அதில் 75,000 லிட்டர் பயோ டீசலாக மாற்றப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் சிறு ஹோட்டல்கள், சாலையோர கடைகள், வீடுகளிலும் பயன்படுத்திய எண்ணெய்யை பெற்றுக் கொள்ள உணவு பாதுகாப்புத் துறையினர் திட்டமிட்டு வருவதாகச் சொல்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு