Published:Updated:

`15 சதவிகித நிறுவனங்கள் தமிழகத்தில்தான் இருக்கின்றன!’ - அரசுக்குக் கோரிக்கை வைக்கும் மதுரை எம்.பி

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன் ( என்.ஜி.மணிகண்டன் )

`நடுத்தர சிறு குறு தொழில்கள் நெருக்கடியில் இருந்து மீள்கிற வகையில் மாநில அரசின் கொடை (Grant) வழங்கப்பட வேண்டும்’ என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியிருக்கிறார்.

''கொரோனா பாதிப்பினால் தமிழகத்தில் நடுத்தர சிறு குறு தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இத்தொழில்களுக்கான நிதி ஆதாரங்கள் கிடைப்பதற்கு மத்திய அரசிடம் அழுத்தமாக தமிழகஅரசு வலியுறுத்த வேண்டும்'' என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்
என்.ஜி.மணிகண்டன்

இது பற்றி நம்மிடம் பேசியவர், ``இந்தியா முழுவதுமுள்ள நடுத்தர சிறு குறு தொழில் நிறுவனங்களில் 15 சதவிகிதத்துக்கும் அதிகமாக தமிழகத்தில் உள்ளன. நாட்டின் ஏற்றுமதி பங்களிப்பில் இரண்டாவது மாநிலம் என்ற பெருமையைத் தமிழகத்திற்கு இவை பெற்றுத் தருகின்றன.

விவசாயத்திற்கு அடுத்து அதிக வேலை வாய்ப்புகளைத் தருகிறது. தமிழகப் பொருளாதாரத்திற்கு இந்த நிறுவனங்கள் அளித்து வரும் பங்களிப்பு அளப்பரியதாகும். இந்த நிறுவனங்களின் நலமும் வளர்ச்சியும் தமிழகப் பொருளாதாரத்துக்கு முக்கியமானது.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்
என்.ஜி.மணிகண்டன்

தற்போது கோவிட்-19 பாதிப்பால் சிறு குறு தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு உதவி, இத்தொழில்களைப் பாதுகாக்க முக்கியமான விஷயங்களை தமிழக அரசுக்குக் கோரிக்கையாக வைத்துள்ளேன். அதன்படி வங்கிக் கடன்கள் பெறும் போது பிணை வைக்கப்படும் சொத்து பற்றிய எம்.ஒ.டி (MOD) பதிவு செய்யப்பட உயர்த்தப்பட்ட கட்டணம் ரத்து செய்யப்பட வேண்டும். சகஜ நிலைக்கு வந்த பிறகும் ரூ.5,000-க்குக் கட்டணம் குறைக்கப்பட வேண்டும்.

மின்சாரக் கட்டணம், சொத்து வரி, தொழில் வரி, உரிமக் கட்டணம் மற்றும் அனைத்து சட்ட பூர்வ கட்டணங்களும் செலுத்தப்பட, தொழில் நடத்துகிற நிலை உருவாகும் நாளிலிருந்து ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.

Representational Image
Representational Image

நடுத்தர சிறு குறு தொழில்கள் நெருக்கடியிலிருந்து மீள்கிற வகையில் மாநில அரசின் கொடை (Grant) வழங்கப்பட வேண்டும். இது விரைவில் அறிவிக்கப்பட வேண்டும். கோவிட் 19-க்கு முன்பே பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி அறிமுகம் ஆகியவற்றால் 50,000 நிறுவனங்கள் வரை தமிழகத்தில் மூடப்பட்டன. தற்போது மிக மோசமான நிலையைப் பல நிறுவனங்கள் எதிர் நோக்கியுள்ளன. தமிழக அரசிடமிருந்தும் உடனடி நிவாரணங்களை நடுத்தர சிறு குறு தொழில்களை நடத்துவோர் எதிர்பார்க்கிறார்கள் என்பதை அரசுக்கு வலிறுயுத்தியுள்ளேன்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு