Published:Updated:

`அன்று கறுப்புக்கொடி காட்டிய தி.மு.க இன்று கறுப்புக்கொடி காட்டினால் கைது செய்கிறது’ - மதுரை நந்தினி

மதுரை நந்தினி, நிரஞ்சனா

``எதிர்க்கட்சியாக இருந்தபோது பிரதமர் மோடிக்கு எதிராகப் பல போராட்டங்களை நடத்திய தி.மு.க, ஆளும்கட்சியாக வந்த பின்பு ஜனநாயக முறையிலான போராட்டங்களை நடத்த விடாமல் அடக்குமுறையை ஏவுவது ஏன்?" - மதுரை நந்தினி

`அன்று கறுப்புக்கொடி காட்டிய தி.மு.க இன்று கறுப்புக்கொடி காட்டினால் கைது செய்கிறது’ - மதுரை நந்தினி

``எதிர்க்கட்சியாக இருந்தபோது பிரதமர் மோடிக்கு எதிராகப் பல போராட்டங்களை நடத்திய தி.மு.க, ஆளும்கட்சியாக வந்த பின்பு ஜனநாயக முறையிலான போராட்டங்களை நடத்த விடாமல் அடக்குமுறையை ஏவுவது ஏன்?" - மதுரை நந்தினி

Published:Updated:
மதுரை நந்தினி, நிரஞ்சனா

சட்டப்படிப்பை முடித்த இவர், தன் தந்தை ஆனந்தனோடும் தங்கை நிரஞ்சனாவுடனும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் போராட்டம் நடத்தி, பல வழக்குகளைச் சந்தித்து வருகிறார். கடந்த காலங்களில் மத்திய அரசை எதிர்த்து டெல்லியிலும், தமிழக அரசை எதிர்த்து சென்னையிலும் போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டார்.

நந்தினி, நிரஞ்சனா
நந்தினி, நிரஞ்சனா

சமீபகாலமாக மத்திய அரசின் கொள்கைகளைக் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், இன்று 11-ம் தேதி திண்டுக்கல் காந்திகிராமம் பல்கலைக்கழக விழாவுக்கு வரும் பிரதமர் மோடிக்கு எதிராகக் கறுப்புக் கொடி போராட்டம் நடத்தப்போவதாக சமூக ஊடகத்தில் அவர் அறிவித்திருந்த நிலையில், நேற்று 10-ம் தேதி நந்தினியும் தங்கை நிரஞ்சனாவும் கைது செய்யப்பட்டார்கள்.

``எதிர்க்கட்சியாக இருந்தபோது பிரதமர் மோடிக்கு எதிராகப் பல போராட்டங்களை நடத்திய தி.மு.க, ஆளும்கட்சியாக வந்த பின்பு ஜனநாயக முறையிலான போராட்டங்களைக்கூட நடத்தவிடாமல் அடக்குமுறையை ஏவுகிறது" என்று மதுரை நந்தினியின் தந்தை ஆனந்தன் குற்றம்சாட்டியுள்ளார்.

மதுவுக்கு எதிரான போராட்டத்தில் தந்தை ஆனந்தனுடன்
மதுவுக்கு எதிரான போராட்டத்தில் தந்தை ஆனந்தனுடன்

கடந்த 10 ஆண்டுகளாக மதுவுக்கு எதிராகவும், மத்திய மாநில அரசுகளின் கொள்கைகளுக்கு எதிராகவும், பல்வேறு சமூகப் பிரச்னைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடி வருகிறார் மதுரையைச் சேர்ந்த நந்தினி.

இது குறித்து சமூக ஊடகத்தில் தகவல் வெளியிட்டுள்ள நந்தினியின் தந்தை ஆனந்தனும், கணவர் குணாவும், ``பிரதமர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தி, திண்டுக்கல் காந்திகிராமம் வரும் நரேந்திர மோடிக்கு கறுப்புக்கொடி காட்டும் போராட்டம் அறிவித்திருந்தார் நந்தினி. கடந்த 9-ம் அதிகாலை முதலே போராட்டத்தைத் தடுப்பதற்காக, தி.மு.க அரசு எங்களை வீட்டுச் சிறையில் அடைத்துவிட்டது.

நந்தினி - ஆனந்தன்
நந்தினி - ஆனந்தன்

எதிர்க்கட்சியாக இருந்தபோது பிரதமர் மோடிக்கு எதிராகப் பல போராட்டங்களை நடத்திய தி.மு.க, ஆளும்கட்சியாக வந்த பின்பு ஜனநாயக முறையிலான போராட்டங்களை நடத்த விடாமல் அடக்குமுறையை ஏவுவது ஏன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார் நந்தினி.