Published:Updated:

``இந்த ஆட்சியிலும் ஜனநாயகப் போராட்டத்துக்கு அனுமதி இல்லை!" - நந்தினியின் கணவர்

நந்தினி - ஆனந்தன்
நந்தினி - ஆனந்தன்

இருவரின் பிணை மனுவை நிராகரித்துள்ளது சைதாப்பேட்டை நீதிமன்றம். இருவருக்கும் பிணை பெற, நந்தினியின் கணவர் குணாவும், தங்கை நிரஞ்சனாவும் தொடர்ந்து முயன்று வருகிறார்கள்.

பிரதமர் மோடிக்கு எதிராக வழக்குத் தொடர குடியரசுத் தலைவரின் அனுமதி கேட்டு சமூக செயற்பாட்டாளர் மதுரை நந்தினியும், அவர் தந்தை ஆனந்தனும் சென்னை ஆளுநர் மாளிகை முன்பு கடந்த 14-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்றபோது கைது செய்யப்பட்டனர். தற்போது சிறையில் இருந்துவரும் நிலையில் அவர்களின் பிணை மனுவை நிராகரித்துள்ளது நீதிமன்றம்.

மதுரை நந்தினி
மதுரை நந்தினி

சட்டக்கல்லூரி மாணவியாக இருந்த காலத்திலிருந்து மதுவுக்கு எதிராகப் போராட ஆரம்பித்த மதுரை நந்தினி, தொடர்ந்து சமூக, அரசியல் பிரச்னைகளுக்கு எதிராகவும் போராடி வந்தார். இதன் காரணமாக கடந்த ஆட்சியில் பல வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆட்சி மாறியுள்ள நிலையில், மதுக்கடைகளை திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நந்தினி நடத்தும் போராட்டங்கள் தொடர்ந்தன. அதன் காரணமாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து டிஜிபியை சந்தித்து பொள்ளாச்சி பாலியல் வழக்கு சம்பந்தமாக மனு அளிக்க சென்னை கிளம்பியபோதும் கைது செய்யப்பட்டார்.

நந்தினி - ஆனந்தன்
நந்தினி - ஆனந்தன்
மதுரை: `தமிழ்நாடு அரசு சட்டப்பிரிவு 328-க்கு எதிராக செயல்படுகிறது!’-டி.ஜி.பி-க்கு மதுரை நந்தினி மனு

இந்த நிலையில், கொரோனாவினால் மக்கள் பாதிக்கப்பட்டதற்கு மத்திய அரசுதான் காரணம் என்று பிரதமர் மோடி மீது புகார் தெரிவித்த நந்தினி, அவர் மீது வழக்குத் தொடர குடியரசு தலைவரின் அனுமதி கோரி சென்னை ஆளுநர் இல்லம் முன் போராட்டம் நடத்த சென்றபோது, தந்தை ஆனந்தனுடன் கைது செய்யப்பட்டு இருவரும் சிறைக்கு அனுப்பட்டார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த சூழ்நிலையில், அவர்களின் பிணை மனுவை நிராகரித்துள்ளது சைதாப்பேட்டை நீதிமன்றம். இருவருக்கும் பிணை பெற, நந்தினியின் கணவர் குணாவும், தங்கை நிரஞ்சனாவும் தொடர்ந்து முயன்று வருகிறார்கள்.

இதுபற்றி நந்தினியின் கணவர் குணாவிடம் பேசினோம். ``ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க.வின் முழு கட்டுப்பாட்டில் உள்ள ஸ்டாலின் அரசால் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

நந்தினியின் கணவர் குணா
நந்தினியின் கணவர் குணா

இருவருக்கும் பெயில் மனுவை, கடந்த 17-ம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தோம். வழக்கு கடந்த 19-ம் தேதி விசாரணைக்கு வந்தது. ஆனால் வழக்கு விசாரணையை 23-ஆம் தேதிக்கும், அதன் பின்னர் 24-ம் தேதிக்கும் தள்ளி வைத்தது நீதிமன்றம்.

நீட் தேர்வை எதிர்த்துப் போராட்டம் நடத்த முயன்ற நந்தினி கைது; என்ன நடந்தது?

நேற்று வழக்கை விசாரித்த நீதிமன்றம் நாங்கள் தாக்கல் செய்திருந்த பெயில் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. மீண்டும் அவர்களை ஜாமீனில் கொண்டுவர தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம். கடந்த ஆட்சிபோலவே, இந்த ஆட்சியிலும் ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்த அனுமதிக்காமல் அடக்குமுறையை கையாளுகின்றனர்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு