Published:Updated:

அதிகாலையில் வீட்டைச் சுற்றிய போலீஸ்... ஹை அலர்ட்! -`மதுரை நந்தினி' திடீர் கைது

நந்தினி கைது
நந்தினி கைது ( ஈ.ஜெ.நந்தகுமார் )

மது ஒழிப்புப் போராளி நந்தினியும் அவரின் தந்தை ஆனந்தனும் இன்று கைது செய்யப்பட்டார்கள்.

சிறுமி ஜெயஸ்ரீ படுகொலை செய்த குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்றும் டாஸ்மாக் கடைகளை திறக்க மேல்முறையீடு செய்யாதே என்ற கோரிக்கைகளுடன் மதுரை உயர் நீதிமன்றக் கிளை முன் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்த மது ஒழிப்புப் போராளி நந்தினியும் அவரின் தந்தை ஆனந்தனும் இன்று கைது செய்யப்பட்டார்கள்.

நந்தினியும் சகோதரியும்
நந்தினியும் சகோதரியும்
ஈ.ஜெ.நந்தகுமார்

மதுக்கடைகளை எதிர்த்தும் பல்வேறு சமூகப் பிரச்னைகளுக்கு எதிராகவும் போராட்டம் நடத்தி வருபவர் மதுரை நந்தினி. இவர் தன் தந்தையுடன் சேர்ந்து நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு பல வழக்குகளைச் சந்தித்து வருகிறார்.

இந்த நிலையில், `விழுப்புரம் சிறுமி ஜெயஶ்ரீயை குடிபோதையில் கொடூரமாக எரித்து படுகொலை செய்த அ.தி.மு.க நிர்வாகிகள் முருகன், கலியபெருமாள் இருவரையும் உடனே தூக்கிலிட வேண்டும். டாஸ்மாக்கை திறந்து கொலைகளையும் குற்றங்களையும் தூண்டாதே.

நந்தினி வீட்டு முன் போலிஸ்
நந்தினி வீட்டு முன் போலிஸ்
ஈ.ஜெ.நந்தகுமார்

டாஸ்மாக்கை மீண்டும் திறக்க தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டை வாபஸ் வாங்க வேண்டும். வீட்டுக்கே மது சப்ளை செய்யும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை உயர் நீதிமன்றக் கிளை முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக நேற்று அறிவித்திருந்தார் நந்தினி.

இதனால் அவர் நடவடிக்கைகளை கண்காணிக்கத் தொடங்கிய மதுரை காவல்துறையினர், இன்று காலை 5 மணியிலிருந்து நந்தினி வீட்டைச் சுற்றி குவிக்கப்பட்டனர். ஏற்கெனவே சில போராட்டங்களுக்கு காவல்துறையின் கண்காணிப்பையும் மீறி சென்றவர் என்பதால் இன்று ரொம்பவும் விழிப்பாக இருந்தனர்.

நந்தினி கைது
நந்தினி கைது
ஈ.ஜெ.நந்தகுமார்

போலீஸார் குவிக்கப்பட்டதையும் மீறி இன்று காலை போராட்டத்துக்கு கிளம்பிய நந்தினி மற்றும் அவரின் தந்தை ஆனந்தனையும் காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அடுத்த கட்டுரைக்கு