Published:Updated:

கொரோனா : 4,000-த்தைக் கடந்த பாதிப்பு! - அச்சத்தில் மதுரை மக்கள்

மதுரை
மதுரை

சென்னைக்கு அடுத்தபடியாக, மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து, இன்று 4,000-த்தைக் கடந்துள்ளது.

`கொரோனாத் தொற்று; விரட்டிய குடும்பம்!' - மாடியிலிருந்து குதித்த மதுரை முதியவர்

மதுரை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 308 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனால், மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,085 ஆக அதிகரித்துள்ளது. எப்போதும் இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் மதுரையில் 352 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது ஒருபுறம் என்றால், கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துவருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 4-ம் தேதி கணக்கின்படி மதுரையில் 57 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நேற்று ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். 2,975 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

மதுரை கொரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனை
மதுரை கொரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனை
`எல்லோரையும் போல பயப்பட்டோம், ஆனால்?' - மதுரை கொரோனா வார்டை அசத்திய 3 சகோதரிகள்

அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த, மாவட்டத்தில் கடந்த மாதம் 24-ம் தேதி கொண்டுவரப்பட்ட ஊரடங்கு, மேலும் ஒரு வாரத்துக்கு, அதாவது வரும் ஜூலை 12 வரை முழு ஊரடங்காக அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதையொட்டியுள்ள மாவட்டங்களைத் தவிர்த்து, தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டமாக மதுரை உள்ளது. அதிகரித்துவரும் பாதிப்புகளால், சென்னை போன்றதொரு பெரும் பாதிப்புக்கு மதுரை ஆளாகும் என்றே கூறப்படுகிறது.

சென்னை போன்றே, மதுரை மாநகராட்சி எல்லைக்குள்ளாகவே தொற்று அதிகமாகப் பரவி வருகிறது. இந்த நிலையில், மதுரையில், முகாம்கள் அமைத்து கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படுகிறது. இன்று, ஆறாம் கட்ட கொரோனா மருத்துவ முகாம் 16 இடங்களில் நடத்தப்படுகின்றன.

பிரேம் ஆனந்த் சின்ஹா. ஐ.ஏ.எஸ்
பிரேம் ஆனந்த் சின்ஹா. ஐ.ஏ.எஸ்
மூடப்பட்ட காவல் நிலையம், தீயணைப்பு நிலையம்! - கொரோனா தொற்று அதிகரிப்பால் அச்சத்தில் மதுரை

இதற்கிடையில் மதுரை மாநகர ஆணையராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிரேம் ஆனந்த் சின்ஹா, பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், ``கொரோனா தொற்று பரவாமல் இருக்க, பாதுகாப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பொதுமக்களும், அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மதித்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு