Published:Updated:

`சிலம்பம் போட்டியில் தொடர் சாதனை!’ - சர்வதேச விருது வென்ற மதுரை சிறுவன்

மதுரை சிறுவன் அதீஸ்ராம்
மதுரை சிறுவன் அதீஸ்ராம் ( ஈ.ஜெ.நந்தகுமார் )

மலேசியப் போட்டியில் தங்கம் வென்றதற்காக, இந்த சர்வதேச விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பல பிரிவுகளைக் கொண்ட விருதுப் பட்டியலில் சர்வதேச விருதுக்கான பிரிவில் தமிழகத்தை சேர்ந்த சிறுவன் அதீஸ்ராம் மட்டுமே தேர்வாகியுள்ளார்.

தேசிய விளையாட்டு மற்றும் உடல் தகுதி வாரியத்தின் `சர்வதேச விளையாட்டு நட்சத்திரம்' (International Sports Star Award) என்ற விருதை, மதுரையை சேர்ந்த 5-ம் வகுப்பு பயிலும் அதீஸ்ராம் பெற்று தமிழகத்துக்கு பெருமை தேடித்தந்துள்ளார்.

அதீஸ்ராம்
அதீஸ்ராம்
ஈ.ஜெ.நந்தகுமார்

மதுரை விராட்டிபத்தைச் சேர்ந்த ஜெயராமன்-சித்திரக்கனி தம்பதியரின் மகன் அதீஸ்ராம். தனியார் பள்ளியில் 5-ம் வகுப்புப் படித்துக்கொண்டே, தனியார் பயிற்சி மையத்தில் சிலம்பம் கற்று, பல போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளைப் பெற்று வருகிறார்.

பெண்கள் அவசியம் சிலம்பம் கத்துக்கணும்! - சிலம்பம் சூர்யா

சிலம்பத்தில் புதிய முயற்சியாக ஸ்கேட்டிங் போய்க்கொண்டு வேகமாக சிலம்பம் சுற்றுவார். அதோடு களரி, கட்டைக்கால், வில்வித்தையிலும் சிறப்புப் பயிற்சி எடுத்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளில் மாவட்ட, மாநில அளவில் 60-க்கும் மேற்பட்ட சிலம்பம் போட்டிகளில் பங்கு பெற்று அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளார்.

சரவதேச விருது
சரவதேச விருது

2018-ல் பஞ்சாபில் நடந்த தேசிய போட்டியில் முதல் பரிசு பெற்றார். 2019 செப்டம்பரில் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பப் போட்டியில் இரட்டைக் கம்பு பிரிவில் கலந்துகொண்டு முதலிடம் பெற்றார்.

`கடினமாக உழைக்க அப்பா  கற்றுக்கொடுத்தார்!' - வைரலாகும் சிலம்பம் சுற்றும் பாட்டி

ஹரியானாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தேசிய விளையாட்டு மற்றும் உடல் தகுதி வாரியம், ஒவ்வொரு ஆண்டும் தேசிய, சர்வதேச அளவில் விளையாட்டு போட்டிகளில் சாதனை படைப்பவர்களைத் தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகிறது.

அதீஸ்ராம்
அதீஸ்ராம்
ஈ.ஜெ.நந்தகுமார்

மலேசியப் போட்டியில் தங்கம் வென்றதற்காக, இந்த சர்வதேச விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பல பிரிவுகளைக் கொண்ட விருதுப் பட்டியலில் சர்வதேச விருதுக்கான பிரிவில் தமிழகத்தை சேர்ந்த சிறுவன் அதீஸ்ராம் மட்டுமே தேர்வாகியுள்ளார். கொரோனா ஊரடங்கினால் விருதை, அதீஸ்ராமுக்குத் தபால் மூலம் அனுப்பி வைத்துள்ளார்கள்.

அடுத்த கட்டுரைக்கு