Published:Updated:

சிலம்பம் போட்டியில் 4 தங்கம், 2 வெள்ளி! - மலேசிய மண்ணில் சாதித்த மதுரை மாணவர்கள்

Students
News
Students

இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த மதுரை மாணவர்கள்.....

சர்வதேச போட்டிகளில் மதுரையைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் பதக்கங்கள் வென்று அசத்தியிருக்கிறார்கள். மலேசியாவுக்குச் சென்றுவந்த உற்சாகத்தில் திளைத்த மாணவர்கள் தங்கள் பெற்ற வெற்றிகளை மகிழ்ச்சியோடு நம்மோடு பகிர்ந்துகொண்டனர்.

ஆசியா சிலம்பம் அகாடமி மற்றும் மலேசியா சிலம்பம் அகாடமி இணைந்து நடத்திய உலக சிலம்பம் சாம்பியன்ஷிப் 2019 போட்டிகள் மலேசிய தலைநகர் கோலாம்பூரில் நடந்தது. இதில் மதுரை ஸ்ரீமாருதி சிலம்பம் பயிற்சிப் பள்ளி சார்பில் கலந்து கொண்ட மாணவர்கள் பல்வேறு சாதனைகளைச் செய்து பதக்கங்களை வென்றுள்ளனர்.

Students
Students

6 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் களமிறங்கிய இந்தப் போட்டியில், மதுரை விராட்டிப்பத்துவைச் சேர்ந்த ஸ்ரீ மாருதி சிலம்பம் பயிற்சிப் பள்ளி சார்பில் 6 மாணவர்கள் கலந்துகொண்டனர். அவர்களில் மதுரை மாணவர்கள் 4 தங்கப்பதக்கமும், 2 வெள்ளிப் பதக்கமும் வென்று பெருமை சேர்த்துள்ளனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மதுரை, கேரன் பப்ளிக் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்துவரும் அதீஸ்ராம், 10 வயதிற்குட்பட்டோர் பிரிவில் இரட்டைக்கம்பு வீச்சில் தங்கப்பதக்கம் வென்றார். இவர் ஸ்கேட்டிங் செய்துகொண்டே சிலம்பம் சுற்றியதை ரசிகர்கள் பார்த்து வியந்தனர். அரங்கமே அதிரும் கைதட்டல் கிடைத்தது.

Students
Students

மதுரை, லட்சுமி பப்ளிக் பள்ளி மாணவியான காவ்யாஸ்ரீ இரட்டைக் கம்பு பிரிவில் தங்கம் வென்றார். டால்பின் பள்ளி மாணவர் ராஜதுரை சுருள்வாள் போட்டியில் தங்கம் வென்றார். பப்ளிக் பள்ளி மாணவி ராசிகா ஒற்றைக்கம்பு போட்டியில் தங்கம் வென்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மதுரை பப்ளிக் பள்ளி மாணவர் கிஷோர் ஒற்றைக்கம்பு போட்டியிலும், தேவதானப்பட்டி பள்ளி மாணவி காருண்யாதேவி சுருள்வாள் போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினர்.

Students
Students

இவர்களுக்குப் பயிற்சி அளித்த மதுரை விராட்டிப்பத்து ஸ்ரீமாருதி சிலம்பம் பயிற்சிப் பள்ளியின் பயிற்சியாளர் ராமகிருஷ்ணனுக்கு 'மகாகுரு' என்ற பட்டம் வழங்கப்பட்டது. தமிழரின் பாரம்பர்யக் கலையில் சிறந்து விளங்கும் இவர்களுக்கு அரசும், தனியார் நிறுவனங்களும் நிதிஉதவி செய்தால் உலக அளவில் இன்னும் பல சாதனைகள் படைக்க பேருதவியாக இருக்கும்.