Published:Updated:

மீனாட்சியம்மன் கோயில் அர்ச்சகரின் தாயாருக்குக் கொரோனா தொற்று! - தனிமைப்படுத்தப்பட்ட குடும்பத்தினர்

மீனாட்சியம்மன் கோயில்
மீனாட்சியம்மன் கோயில் ( என்.ஜி.மணிகண்டன் )

இதையடுத்து அர்ச்சகரின் தாயார், மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடும்பத்தினர் அனைவரும் பரிசோதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் அர்ச்சகரின் தாயாருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளதால் மதுரை மக்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மதுரை மீனாட்சியமன் கோயில்
மதுரை மீனாட்சியமன் கோயில்

கொரோனா தொற்றால் மதுரையைச் சேர்ந்தவர்தான் தமிழகத்தில் முதலில் பலியானார். அதனால் மதுரை மாநகரம் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பல பகுதிகள் லாக் செய்யப்பட்டுள்ளன.

மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 50 பேர் சிகிச்சை எடுத்து வரும் நிலையில் சமூகப் பரவல் ஆகாமல் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் பல ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. பிரபலமான சித்திரைத் திருவிழா உட்பட பல்வேறு விழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மீனாட்சியம்மன் கோயில்
மீனாட்சியம்மன் கோயில்
என்.ஜி.மணிகண்டன்

இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பூஜை செய்யும் அர்ச்சகரின் தாயாருக்குக் கொரானா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன்பு காய்ச்சல் அறிகுறியுடன் இருந்தவரை மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனை செய்தபோது அவருக்குக் கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அர்ச்சகரின் தாயார், மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடும்பத்தினர் அனைவரும் பரிசோதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர் வசித்த தெரு முழுவதும் கிருமிநாசினி அடித்து வருகின்றனர். தற்போது அப்பகுதிக்கு மற்ற பகுதி மக்கள் வராதபடி லாக் செய்யப்பட்டுள்ளது.

மீனாட்சியம்மன் கோயில்
மீனாட்சியம்மன் கோயில்
என்.ஜி.மணிகண்டன்

அவருடன் பணியாற்றிய அர்ச்சகர்கள், ஊழியர்கள், காவலர்கள், அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மீனாட்சியம்மன் கோயில் முழுவதும் கிருமிநாசினி அடிக்கப்பட்டு கோயிலில் தினசரி பூஜைகள் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது கண்காணிப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மீனாட்சியம்மன் கோயில் அர்ச்சகரின் தாயாருக்கு எந்த வகையில் கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது பற்றி மருத்துவ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு