Published:Updated:

"மகாத்மா காந்தியின் வார்த்தைகளே எங்களுக்கு வேதம்!"- ராம்ராஜ் காட்டன் காந்திய வேட்டி நூற்றாண்டு விழா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ராம்ராஜ் காந்திய வேட்டி நூற்றாண்டு விழா
ராம்ராஜ் காந்திய வேட்டி நூற்றாண்டு விழா

மகாத்மா காந்தி வேட்டி அணிந்து நூறாண்டுகள் நிறைவடைந்த நிலையில், ராம்ராஜ் காட்டன் நிறுவனம் சார்பில் காந்திய வேட்டி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மகாத்மா காந்தி, ‘இனி வாழ்நாள் முழுவதும் வேட்டி மட்டுமே அணிவேன்’ என்று மதுரை மண்ணில் முடிவெடுத்து, வேட்டி அணிந்து நூறாண்டுகள் ஆகிவிட்டன. இந்நிலையில், காந்தி வேட்டி அணிந்த நூற்றாண்டு தினத்தை ராம்ராஜ் காட்டன் நிறுவனம் 'மகாத்மாவை கொண்டாடுவோம்' என்ற புத்தகம் வெளியிட்டு கொண்டாடியுள்ளது.
காந்தியை கொண்டாடுவோம்
காந்தியை கொண்டாடுவோம்
மதுரையில் மகாத்மா காந்தி அரையாடை புரட்சி செய்த நூற்றாண்டு தினக் கொண்டாட்டம் #VikatanPhotoStory

இந்த விழா திருப்பூரில் நடைபெற்றது. இதில் சுதந்திர போராட்ட தியாகிகள் குடும்பத்தினர் 100 பேர் மற்றும் நெசவாளர்கள் 100 பேர் கௌரவிக்கப்பட்டனர்.

சென்னை கலாஷேத்ரா குழுவினர் வழங்கிய காந்திய வழியில் ராம்ராஜ் என்ற விசேஷ நாட்டிய நாடகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ராம்ராஜ் காட்டன் குழுமத்தின் நிறுவனத் தலைவர் கே.ஆர்.நாகராஜன், கோவை பாரதி வித்யாபவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கே.ஆர். நாகராஜன்
கே.ஆர். நாகராஜன்

நிகழ்ச்சியில் பேசிய கே.ஆர்.நாகராஜன், “வேட்டிக்கு அடையாளமாகத் திகழ்ந்த மகாத்மா காந்தியின் வார்த்தைகளை வேதமாகக் கொண்டு 40 ஆண்டுகளாக நெசவாளர்களை ஊக்குவித்து வருகிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நெசவாளர்களின் வாழ்வாதாரத்துக்கு வழிவகுத்து, இன்றைய தலைமுறைக்கு ஏற்றவாறு வேட்டி வடிவமைத்து, அதை இந்தியாவின் அடையாளமாக்கிய பெருமையையும், வெற்றியையும் காந்தியின் திருப்பாதங்களில் அர்ப்பணிக்கிறோம்.

ராம்ராஜ் காந்திய வேட்டி நூற்றாண்டு விழா
ராம்ராஜ் காந்திய வேட்டி நூற்றாண்டு விழா

வேட்டி என்பது ஒரு எளிய உடை என்பது மட்டுமல்லாமல், நெசவாளர்களின் வாழ்வாதாரமாகவும் இருக்கிறது என்பதை அறிந்து, காந்தி சுதேசி பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தினார். உலகத் தலைவர்களை சந்திக்கும்போது வேட்டி மட்டுமே உடுத்திய காந்தியடிகளையும், அவரின் உண்மையான வாழ்வையும் போற்றி வணங்குகிறோம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு