Published:Updated:

அவுட்டுக்காய் ஏற்படுத்திய காயம்! - தமிழக, கேரள எல்லையில் சுற்றிவந்த மக்னா யானை உயிரிழந்தது

மக்னா யானை
மக்னா யானை

தமிழக – கேரள எல்லையில் வாயில் காயத்துடன் சுற்றிவந்த மக்னா யானை இன்று காலை உயிரிழந்தது.

கோவை, மருதமலை அருகே வாயில் காயத்துடன் உணவு சாப்பிட முடியாமல் ஓர் மக்னா யானை கண்டறியப்பட்டது. வனத்துறை அந்த யானைக்குச் சிகிச்சை அளிக்க முயன்றபோது, அது ஆனைக்கட்டி வழியாக கேரளாவுக்குள் சென்றுவிட்டது. கேரள வனத்துறையினர் அந்த யானைக்குச் சிகிச்சை அளித்தநிலையில்,

மக்னா யானை
மக்னா யானை
கைவிட்ட தமிழக, கேரள வனத்துறை - வலியுடன் சுற்றித் திரியும் மக்னா யானை!

மக்னா மீண்டும் தமிழகத்துக்குள் வந்தது. இதையடுத்து, கோவை வனத்துறையினர் அந்த யானைக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை வழங்கினர்.

வீடுகளை அதிகம் இடிப்பதால், கேரள மக்கள் அந்த யானைக்கு 'புல்டோசர்' எனப் பெயரிட்டிருந்தனர். `அவுட்டுக்காய்’ எனப்படும் நாட்டு வெடிகுண்டால் யானையின் வாய்ப் பகுதி காயமடைந்தது. முக்கியமாக, நாக்குப்பகுதி சிதறி, மேல் தாடை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. காயமடைந்த மக்னா யானைக்கு உரிய சிகிச்சை கொடுக்காமல்,

மக்னா யானை
மக்னா யானை

தமிழக – கேரள வனத்துறையினர் பரஸ்பரம் யானையை விரட்டிவிடுவதாக புகார் எழுந்தது. யானையைப் பட்டாசுவைத்து, சைரன் ஒலி எழுப்பி விரட்டியதற்கு வனவிலங்கு ஆர்வலர்கள் கண்டனமும் தெரிவித்திருந்தனர்.

``மயக்க ஊசி போட்டு பிடித்து சிகிச்சை கொடுத்தால், யானை உயிரிழக்க வாய்ப்பிருக்கிறது. வாய்ப் பகுதி முழுவதும் சேதமடைந்திருப்பதால், யானையால் உணவும் சாப்பிட முடிவதில்லை. அது சில நாள்கள்தான் உயிருடன் இருக்கும்" என்று வனத்துறையினர் கூறியிருந்தனர். இதற்கிடையே, மக்னா யானை நேற்று முன்தினம் மீண்டும் கேரளாவுக்குச் சென்றது.

மக்னா யானை
மக்னா யானை

சோலையூர் அருகே மரப்பாலம் பகுதியில் சென்றுகொண்டிருந்த யானை, முடியாமல் அப்படியே சாலை ஓரமாகப் படுத்துவிட்டது. பிறகு, அந்த யானை பரிதாபமாக உயிரிழந்துவிட்டது.

யானைக்கு அஞ்சலி
யானைக்கு அஞ்சலி

உயிரிழந்த மக்னா யானைக்கு கேரள மக்கள் மலர் மாலையிட்டு அஞ்சலி செலுத்தினர்.

அடுத்த கட்டுரைக்கு