Published:Updated:

``தமிழர்களைப் பாதுகாக்க தனி செயலி; 15,000 புகார்கள்மீது நடவடிக்கை!" - மலேசியா மனிதவள அமைச்சர் தகவல்

மலேசியா அமைச்சர் சரவணன்

மலேசியாவுக்கு வேலைக்கு வரும் தமிழர்களைப் பாதுகாக்க தனி செயலி உருவாக்கப்பட்டிருப்பதாக அந்த நாட்டின் மனித வளத்துறை அமைச்சர் சரவணன் தெரிவித்தார்.

``தமிழர்களைப் பாதுகாக்க தனி செயலி; 15,000 புகார்கள்மீது நடவடிக்கை!" - மலேசியா மனிதவள அமைச்சர் தகவல்

மலேசியாவுக்கு வேலைக்கு வரும் தமிழர்களைப் பாதுகாக்க தனி செயலி உருவாக்கப்பட்டிருப்பதாக அந்த நாட்டின் மனித வளத்துறை அமைச்சர் சரவணன் தெரிவித்தார்.

Published:Updated:
மலேசியா அமைச்சர் சரவணன்

மலேசியா நாட்டின் மனிதவள அமைச்சராக இருப்பவர் டத்தோ. ஸ்ரீ.எம்.சரவணன். இவருக்கு ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து மலேசியாவில் சென்று பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் சார்பில் ராமநாதபுரத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மலேசிய அமைச்சருக்கு மாலை, பொன்னாடைகள் அணிவித்து மலேசியாவில் பணிபுரியும் ராமநாதபுரம் தமிழர்கள் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியின் முடிவில் டத்தோ.ஸ்ரீ.எம்.சரவணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ``இன்னும் 10 ஆண்டுகளில் 4-வது தொழில் புரட்சி ஏற்படவிருக்கிறது. இந்த தொழில் புரட்சி உலகத்தையே புரட்டிப் போடப் போகிறது. இந்தப் புரட்சியை எதிர்கொள்ள தமிழர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும். அனைத்து துறைகளும் முழுக்க முழுக்க இயந்திரமயமாகும் சூழல் ஏற்படும்‌. அதற்கு ஏற்றார்போல் வியாபாரிகள் தங்களைத் தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சரவணன்
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சரவணன்

தமிழ்நாட்டிலிருந்து விசா இன்றி, சுற்றுலா விசாவில் வந்து பணிபுரியும் தமிழர்கள், அங்கு பணியாற்றும் தொழில் நிறுவனங்களின் முதலாளிகளால் சித்ரவதை செய்யப்பட்டாலும் அதை வெளியில் சொல்ல முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அவ்வாறு அவர்கள் சித்ரவதை செய்தது கண்டுபிடிக்கப்பட்டாலும் சுற்றுலா விசாவில் வந்து பணியாற்றியதற்காக முதலில் அவர்கள் கைதுசெய்யப்படுகிறார்கள். எனவே விசா வாங்கி முறையாக அனுமதி பெற்று தமிழர்கள் பணியாற்ற வரவேண்டும்.

தமிழ்நாட்டிலிருந்து மலேசியாவில் வேலைக்கு வரும் தமிழர்களுக்கு உதவுவதற்காகவே மலேசியாவில் புதிய செயலியை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். அங்கு தமிழ்நாட்டு தொழிலாளர்களுக்கு எதிராக எந்தப் பிரச்னை ஏற்பட்டாலும் புகார் தெரிவிக்க இந்த செயலியை பயன்படுத்த அறிவுறுத்தியிருக்கிறோம். இந்த செயலி மூலம் அளிக்கப்படும் புகாருக்கு 7 நாள்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை இந்த செயலி மூலம் அளிக்கப்பட்ட 15 ஆயிரம் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சரவணன்
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சரவணன்

மலேசியாவில் தமிழர்கள் உணவகம், மின்சாரத்துறை பணிகளுக்கு மட்டுமே ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனரே என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு,

``இந்த இரு துறைகளில் பணியாற்றுவதற்கு மட்டும்தான் இந்திய அரசு மலேசியா உள்ளிட்ட மற்ற நாடுகளுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது. எனவே வெளிநாடுகளில் அனைத்து துறைகளிலும் பணியாற்ற தமிழர்களை அனுமதிக்க இந்திய அரசு மற்ற அனைத்து நாடுகளுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும். அப்போதுதான் மலேசயா உட்பட அனைத்து நாடுகளிலும், அனைத்து துறைகளிலும் பணிபுரிய தமிழர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்" என்று கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism