Published:Updated:

`லாரி டு பேருந்துகள்..!’ -ஊட்டிக்கு அதிர்ச்சிகொடுத்த சென்னை ரிட்டன் நபரின் ட்ராவல் ஹிஸ்ட்ரி

bus
bus

கோயம்பேடு மார்க்கெட்டில் கடை நடத்திவந்த நபர் ஒருவர் நடந்தும், சரக்கு வாகனத்திலும், அரசுப்பேருந்திலும் பயணித்து நீலகிரியை வந்தடைந்தார். தற்போது அவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து நீலகிரி மாவட்டம் மஞ்சூருக்கு, ஒரு நபர் அரசுப் பேருந்தில் பயணித்துள்ளார். அந்த நபருக்கு சோதனைச் சாவடியில் கொரோனா பரிசோதனைக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. மேலும், அந்த நபரை வீட்டுத் தனிமையில் இருக்க அறிவுறுத்தினர் அதிகாரிகள்.

corona
corona

தற்போது சோதனை முடிவுகள் வந்த நிலையில், அந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த நபரின் டிராவல் ஹிஸ்ட்ரி அதிகாரிகளைத் தலை சுற்றவைத்துள்ளது.

தொற்று உறுதிசெய்யப்பட்ட நபரின் டிராவல் ஹிஸ்ட்ரி குறித்து நம்மிடம் பேசிய சுகாதார அதிகாரி ஒருவர், ``நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பிக்கட்டி அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த இந்த 54 வயது நபர், சென்னையில் காய்கறிக் கடை நடத்தி வந்துள்ளார். ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுவரும் நிலையில், சென்னையிலிருந்து நடந்தே வேலூர் மாவட்டத்திற்கு வந்துள்ளார்.

passengers
passengers

அங்கிருந்து ஒரு சரக்கு லாரி மூலம் சேலத்திற்கு வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து கோவைக்கு ஒரு பேருந்தில் வந்துள்ளார். அடுத்து, மேட்டுப்பாளையம் வந்த அவர், அங்கிருந்து நீலகிரி மாவட்டம் மஞ்சூர் வந்துள்ளார். அங்கிருந்து பிக்கட்டி சென்றுள்ளார்.

இவரை பர்லியார் செக்போஸ்ட்டில் சோதனை செய்திருந்த நிலையில், தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இவர் கடந்த ஒரு வார காலமாக பிக்கட்டி மற்றும் மஞ்சூர் பகுதிகளில் சலூன், டாஸ்மாக் என சஜகமாக நடமாடியுள்ளார். அவருடன் நேரடி தொடர்பில் இருந்த நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, பிக்கட்டி பகுதியையும் தனிமைப்படுத்தி விசாரித்துவருகிறோம்" என்றார்.

Bus
Bus

சென்னையிலிருந்து இ-பாஸ் எதுவும் பெறாமல் நீலகிரிக்குவந்து, அரசுப் பேருந்தில் வந்த நபருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட சம்பவம் பலரையும் அச்சத்தில் உறையச்செய்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு