Published:Updated:

சண்டையைத் தடுக்கச் சென்ற பழங்குடிக்கு நேர்ந்த சோகம்! - மதுபோதையில் விபரீதம்

murder
murder

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் பரிதாபமாக உயிரிழந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த விஜயனுக்கு சிந்து என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.

பல்வேறு தரப்பு மக்களின் எதிர்ப்பை மீறி நீலகிரியிலும் மதுபானக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன. நீலகிரியைப் பொறுத்தவரை சுகாதார இடைவெளியை முறையாகப் பின்பற்றினாலும் அடையாள அட்டை, மது விநியோக அளவு வரைமுறை, முதியோருக்கு முன்னுரிமை போன்ற எந்தக் கட்டுப்பாடுகளும் பின்பற்றப்படாமல் கேட்பவர்களுக்கு கேட்கும் அளவு மது வகைகளை வாரி வழங்கப்படுவதாக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.

tasmac
tasmac

இந்தநிலையில் நீலகிரி மாவட்டம் பந்தலுார் அருகில் உள்ள எருமாடு திருமங்கலம் பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த பாபு மற்றும் அவரது நண்பர் பேபி இருவரும், 40 நாள்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு மது வாங்கச் சென்றுள்ளனர். நீண்ட வரிசையில் நின்று வாங்கிய மதுவை இருவரும் சேர்ந்து அருந்தியுள்ளனர்.

தலைக்கேறிய மது போதையில் இருவருக்கும் இடையே நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை கோபமாக மாறி, பின்னர் தகராறு ஏற்பட்டுள்ளது. திடீரென இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

tasmac
tasmac

இதனை அருகில் இருந்த பார்த்த இதேப்பகுதியைச் சேர்ந்த விஜயன் என்ற தொழிலாளி அங்கு வந்து, இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளார். விஜயனும் மது போதையில் இருந்ததாகத் தெரிகிறது. ஆத்திரமடைந்த பிரபு கீழே கிடந்த கட்டையை எடுத்து, சண்டையைத் தடுக்க வந்த விஜயன் தலையில் தாக்கியுள்ளார். தலையில் படுகாயம் அடைந்த விஜயன் ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார்.

உடனடியாக விஜயனை அருகில் உள்ள கப்பாலா ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பரிசோதித்த மருத்துவர்கள் விஜயன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து எருமாடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

murder
murder

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் பரிதாபமாக உயிரிழந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த விஜயனுக்கு சிந்து என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு