Published:Updated:

சினிமா வாய்ப்பு ஆசை; இளம்பெண்களை ஆபாசப் படமெடுத்து மிரட்டல்! - போலி டைரக்டர், பெண்ணுக்கு குண்டாஸ்

போலி டைரக்டர், பெண்ணுக்கு குண்டாஸ்

சினிமா வாய்ப்பு தருவதாகக் கூறி இளம்பெண்களை ஏமாற்றி ஆபாசப் படங்களில் நடிக்கவைத்து மிரட்டிய போலி டைரக்டர், பெண் உதவியாளருடன் சிக்கினார்.

சினிமா வாய்ப்பு ஆசை; இளம்பெண்களை ஆபாசப் படமெடுத்து மிரட்டல்! - போலி டைரக்டர், பெண்ணுக்கு குண்டாஸ்

சினிமா வாய்ப்பு தருவதாகக் கூறி இளம்பெண்களை ஏமாற்றி ஆபாசப் படங்களில் நடிக்கவைத்து மிரட்டிய போலி டைரக்டர், பெண் உதவியாளருடன் சிக்கினார்.

Published:Updated:
போலி டைரக்டர், பெண்ணுக்கு குண்டாஸ்

கடந்த 2-ம் தேதி சேலம், இரும்பாலையைச் சேர்ந்த பெண் ஒருவர் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர், ``நான் கடந்த பிப்ரவரி மாதம் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு தேடி சேலத்துக்கு வந்தேன். அப்போது ஃபேஸ்புக்கில், `சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்புகள் மற்றும் நடிக்க கற்றுத்தரப்படும்' என்ற விளம்பரத்தைப் பார்த்து, சேலம் ஏ.வி.ஆர் ரவுண்டானா, ஆபீசர்ஸ் காலனி அருகே தனியார் கட்டடம் ஒன்றில், `நோபல் கிரியேஷன்ஸ்’ என்ற பெயரில் இயங்கிவந்த சினிமா கம்பெனிக்குச் சென்றேன். அங்கு இடைப்பாடி வீரப்பன்பாளையத்தைச் சேர்ந்த வேலு சத்ரியன், அவருடைய நேரடி உதவியாளரான விருதுநகரைச் சேர்ந்த ஜெயஜோதி ஆகியோர் இருந்தனர்.

ஜெயஜோதி
ஜெயஜோதி

அப்போது வேலு தன்னை இயக்குநர் என்றும், 10 வருடங்களுக்கு மேல் சினிமாதுறையில் பணியாற்றிவருவதாகவும் கூறினார். மேலும், அவர்கள் எடுக்கும் `நோ' எனும் புதிய படத்தில் வாய்ப்பு தருவதாகவும், அதற்கு முன்கூட்டியே பணம் தர வேண்டுமெனவும் கேட்டனர். நான் என்னிடம் பணம் இல்லை எனக் கூறவும் அவர்கள் அலுவலகத்தில் வேலைக்கு வைத்துக்கொண்டனர். ஆனால் அதற்குச் சம்பளம் ஏதும் தரவில்லை. மேலும் சில நாள்களுக்கு முன்பு வேலு என்னை ஆபாசப் படத்தில் நடிக்கச் சொல்லிக் கேட்டார். அதனால் நான் உடனே வேலையைவிட்டு வந்துவிட்டேன்.

அப்போது எனது செல்போனை பறித்துவைத்துக்கொண்டனர். அந்த போனை வாங்கவும், வேலை செய்ததற்குச் சம்பளம் கேட்டும் மீண்டும் சென்றேன். அப்போது வேலு, ஜெயஜோதி ஆகியோர் என்னை மிரட்டினர்.

சினிமா வாய்ப்பு ஆசை; இளம்பெண்களை ஆபாசப் படமெடுத்து மிரட்டல்! - போலி டைரக்டர், பெண்ணுக்கு குண்டாஸ்

சினிமா வாய்ப்பு தேடி அலையும் பெண்களை இவர்களுக்கு துருப்புச் சீட்டாக எடுத்துக்கொண்டு ஆபாச வீடியோக்கள் எடுத்து, அதைவைத்து மிரட்டி ஆபாசப் படங்களில் நடிக்கவைப்பதும், பாலியல்ரீதியாக அத்துமீறுவதுமாக இருந்துவருகின்றனர். மேலும் நடிக்கவைப்பதாகக் கூறி பல பெண்களிடம் பணத்தைச் சுருட்டியிருக்கின்றனர்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இளம்பெண்ணின் புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையிலான போலீஸார் அந்த சினிமா கம்பெனியில் சோதனை நடத்தினர். அதில், ஆபாசக் காட்சிகள் அடங்கிய ஹார்டுடிஸ்க்குகள், ஆணுறை பாக்கெட்டுகள், லேப்டாப், கேமராக்கள், பென்டிரைவ் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கைது
கைது

மேலும் வேல் சத்ரியன், ஜெயஜோதி இருவரையும் கைதுசெய்தனர். விசாரணையில் வேலு சத்ரியன் பல கல்லூரிப் பெண்களை குறிவைத்து ஏமாற்றிவந்ததும், அவர்களைத் தவறாகப் பயன்படுத்தியதும் தெரியவந்தது. அதனடிப்படையில் மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோடா ஆணைக்கிணங்க வேல் சத்ரியன், அவரின் உதவியாளர் ஜெயஜோதி இருவர்மீதும் குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.