Published:Updated:

மயிலாடுதுறை:`குடும்ப அட்டை கூட இல்லை!’ - மாற்றுத்திறனாளிக்கு சிங்கப்பூரிலிருந்து வந்த உதவி

மூன்று சக்கர சைக்கிள்
மூன்று சக்கர சைக்கிள்

சோமு தனக்கு உதவிய சரவணனுக்கு மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

மாமாகுடி கிராமத்தில் உறவுகளின்றி வசிக்கும் மாற்றுத்திறனாளி சோமுவுக்கு சிங்கப்பூரில் வசிக்கும் சரவணன் மூன்று சக்கர சைக்கிள் வழங்கியிருப்பது அக்கிராம மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மூன்று சக்கர சைக்கிள்
மூன்று சக்கர சைக்கிள்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த மாமாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் சோமு. பிறவியிலேயே இரண்டு கால்களும் செயல்படாத மாற்றுத்திறனாளி. பெற்றோருக்குப் பின் சகோதரி ஒருவர் பராமரிப்பில் வாழ்ந்திருக்கிறார். சகோதரியும் சில ஆண்டுகளுக்கு முன் காலமாகி விட்டார். 60 வயதாகும் சோமு தற்போது குப்பைகளில் சாலைகளில் கிடக்கும் மதுபாட்டில்கள் பொறுக்கி எடுத்து பழைய இரும்புக் கடையில் விற்று, அதிலிருந்து கிடைக்கும் ரூபாய் 10, 20 -ஐ வைத்து வாழ்ந்து வருகிறார்.

தனிநபர் என்பதால் ரேசன் கார்டு (குடும்ப அட்டை) கூட இல்லாத அவலத்திற்கு ஆளாகியிருக்கிறார். இதனால் அரசு வழங்கும் எந்தச் சலுகையும் பெறமுடியாத நிலையில் உள்ளார். எனவே தனிமையில் வாழ்வாதாரம் இல்லாமல் தவித்து வரும் தனக்கு அரசு உதவ முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் சோமுவின் பரிதாப நிலை பற்றி அறிந்த சிங்கப்பூரில் வசிக்கும் சரவணன் உடனடியாக மயிலாடுதுறை அருகே பெரம்பூரில் செயல்படும் பாரதிமோகன் அறக்கட்டளை மூலமாக சோமுவுக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கி உதவியிருக்கிறார்

மூன்று சக்கர சைக்கிள்
மூன்று சக்கர சைக்கிள்

அத்துடன் ஒரு மூட்டை அரிசி, மளிகை மற்றும் காய்கறிப் பொருட்களும் வழங்கியிருக்கிறார். சோமு தனக்கு உதவிய சரவணனுக்கு மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்

அடுத்த கட்டுரைக்கு