Published:Updated:

`உலகைவிட்டு பிரிந்த சுர்ஜித்!' குழியில் விழுந்தது முதல் தற்போது வரை... என்ன நடந்தது? #LiveUpdate

சுர்ஜித்தின் உடல் மணப்பாறை பாத்திமாபுதூர் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சுர்ஜித்
சுர்ஜித்

ஆழ்துளைக் கிணற்றில் தவறிவிழுந்த குழந்தை சுர்ஜித்தின் உடல் மணப்பாறை பாத்திமாபுதூர் கல்லறையில் காலை சுமார் 8.25 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

குழந்தை சுர்ஜித்தின் உடல்முன்பாக அமர்ந்திருந்த அவரது தாயார் கலாமேரி கதறி அழுதார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறிவருகின்றனர். பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின்னர் குழந்தையின் உடல் பாத்திமாபுதூர் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

விடியற்காலை 4.30 மணி அளவில் சிறுவன் சுர்ஜித் உடல் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது

மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிரதேப் பரிசோதனை நிறைவடைந்த பின் சுர்ஜித் உடல் நல்லடக்கம் செய்வதற்காக ஆம்புலன்ஸ் வாகனம் மூலமாக கல்லறை தோட்டத்துக்கு கொண்டு வரப்பட்டது.

நள்ளிரவு 2.25 மணி

வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``வெள்ளிக்கிழமை மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் குழந்தை தவறி விழுந்தது. 80 மணி நேரத்துக்கு மேலாகத் தொடர்ந்த மீட்பு முயற்சி தோல்வி அடைந்தது. தனியார் மீட்புக் குழுக்கள் மற்றும் பேரிடர் மீட்புக் குழு ஆகியவை குழந்தையை மீட்க முயற்சி கொண்டன. இந்நிலையில், இரவு 10 மணிக்கு ஆழ்துளைக் கிணற்றில் வாடை வருகிறது. அதனால் உடலை மீட்கும் நடவடிக்கை குறித்து கூறப்படும் என்றார்''. அவரது பேட்டி கீழே

இரவு 10 மணி: சிறுவன் சுர்ஜித்தை மீட்பதற்காக ரிக் இயந்திரம் மூலம் 65 அடிக்கு குழிகள் தோண்டப்பட்டுள்ளது. அந்த குழிக்குள் ஆய்வு செய்ய ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் ஏணி மூலம் அஜித்குமார் என்ற வீரர் சென்றார். குழிக்குள் உள்ள மண் பாறையின் தன்மை ஆய்வு செய்தபின் தொடர்ந்து குழி தோண்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. உள்ளே சென்ற வீரர் திரும்ப வந்துவிட்டார். உள்ளிருந்து பாறை ஒன்றையும் ஆய்வுக்காக வெளியே கொண்டுவந்தார்.

இரவு 8 மணி

குழந்தை சுர்ஜித்தை மீட்க ரிக் இயந்திரத்தால் 63 அடி வரை குழி தோண்டப்பட்டுள்ளது. தோண்டப்பட்டுள்ள குழியில் போர்வெல் இயந்திரம் மூலம் துளைகளிடப்பட்டு ரிக் இயந்திரத்தால் குடைந்தெடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணி தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, ``ரிக் இயந்திரம் மூலம் குழித்தோண்டி முடித்தாலும் பக்காவட்டு பகுதியில் துளையிடுவதுதான் சவாலானது. கைகளால் துளையிடவுள்ளதால் சற்று கடினமாகவே இருக்கும்" எனக் கூறியுள்ளார்.

மாலை 6 மணி

ரிக் இயந்திரம் மூலம் மீண்டும் பள்ளம் தோண்டும் பணி துவங்கியது. துவங்கிய சிறிதுநேரத்திலேயே இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனைச் சரிசெய்து மீண்டும் பணிதுவங்கிய நிலையில் தற்போது நடுக்காட்டுப்பட்டி பகுதியில் மழை பெய்து வருகிறது. மழையிலும் பள்ளம் தோண்டும்பணி தீவிரமடைந்துள்ளது. 60 அடிவரை தோண்டப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் 65 அடிக்கு கீழ் இனி மணல் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால் பள்ளம் தோண்டும் பணி இனி வேகமெடுக்கும் எனத் தெரிகிறது.

பிற்பகல் 4 மணி

போர்வெல் மூலம் கடினமான பாறைகளை 5 பகுதிகளாக துளையிடப்பட்டது. ரிக் இயந்திரம் எளிதாக பாறைகளை உடைப்பதற்கு இப்படி துளையிடப்பட்டது. சுமார் 1 மணியளவில் தொடங்கிய பணி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஏற்கனவே 45 அடி வரை ரிக் இயந்திரம் மூலம் தோண்டப்பட்ட நிலையில் தற்போது போர்வெல் மூலம் மேலும் 20 அடி ஆழம் வரை தோண்டப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. போர்வெல் துளையிட்ட கற்களை ரிக் இயந்திரம் மூலம் அகற்றும் பணிகள் தற்போது நடந்துவருகிறது.

நண்பகல் 12.30 மணி

கடினமான பாறைகளை போர்வெல் மூலம் துளையிட்டு அதன்பின்னர் ரிக் இயந்திரம் மூலம் குழிதோண்ட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஏணி ஒன்றின் மூலம் குழிக்குள் தீயணைப்பு வீரர் ஒருவர் இறங்கினார். அங்கு அவர் துளையிடப்பட வேண்டிய பகுதிகளை குறியிட்டு வந்தார். பின்னர், போர்வெல் மூலம் சுமார் துளையிடும் பணி சுமார் 1 மணியளவில் தொடங்கியது.

நண்பகல் 12 மணி

பெரிய ரிக் இயந்திரம் குழி தோண்டிக்கொண்டிருந்த நிலையில், இயந்திரத்தில் சிறிய அளவில் பழுது ஏற்பட்டது. பழுதைப் போக்கும் பணியில் அங்கிருந்த பணியாளர்கள் ஈடுபட்டனர். இதுவரை 42 அடி அளவுக்குக் குழி தோண்டப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

காலை 11 மணி

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

திருச்சி ஆட்சியருடன் சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், ``பாறைகளை அடுத்து கரிசல் மண் தென்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால், குழந்தையை மீட்பதற்காகத் தோண்டும் பணி தொடர்ந்து நடைபெறும். 98 அடி ஆழத்துக்குப் பள்ளம் தோண்டத் திட்டமிடப்பட்டிருக்கிறது. குழந்தையை மீட்கும் திட்டம் எக்காரணத்தைக் கொண்டும் கைவிடப்படாது'' என்று தெரிவித்தார்.

காலை 10 மணி

குழந்தை சுர்ஜித்தை பத்திரமாக மீட்க வேண்டி தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளிலும் உள்ள வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல், சுர்ஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த முதல் நாள் முதலே #Savesujeeth #Prayforsujeeth உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் மூலம் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பிரார்த்தனையை முன்னெடுத்தனர்.

`உலகைவிட்டு பிரிந்த சுர்ஜித்!'  குழியில் விழுந்தது முதல் தற்போது வரை... என்ன நடந்தது? #LiveUpdate

அக்டோபர் 28-ம் தேதி காலை 9 மணி

விஜய பாஸ்கர்
விஜய பாஸ்கர்

சுர்ஜித்தை மீட்கும் பணிகளை தா.ம.க தலைவர் ஜி.கே.வாசன் நேரில் பார்வையிட்டார். பின்னர், அமைச்சர் விஜயபாஸ்கருடன் இணைந்து அவர் சுர்ஜித்தின் தந்தைக்கு ஆறுதல் கூறினார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர். அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ``துளையிடும் பணி மிகவும் சவாலானதாக இருக்கிறது. தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள், எல் அண்ட் டி நிறுவன அதிகாரிகள், இவ்வளவு பெரிய இயந்திரத்தை இயக்கும் பணியாளர்கள் என குழுவாக முயற்சி செய்தும், துளையிடும் பணி சவால் நிறைந்ததாகவே இருக்கிறது. துளையிடும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட இயந்திரங்களின் பாகங்கள் அனைத்தும் உடைந்துபோகின்றன. இவ்வளவு கடினமான பாறைகளை இதுவரை பார்த்ததில்லை.

இரவு சுமார் 11.30 மணி

நடுக்காட்டுப்பட்டிக்கு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் தேனி எம்.பி ரவீந்திரநாத் குமார் ஆகியோர் வந்தனர். மீட்புப் பணிகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ்,`குழந்தையை உயிருடன் மீட்க முழு முயற்சிகளையும் தமிழக அரசு செய்யும்' என்றார். அதேபோல், கரூர் எம்.பி ஜோதிமணியும் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணிகளைப் பார்வையிட்டதோடு, குழந்தையின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர். போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட்டார்.

இரவு 11 மணி

அதிக திறன் கொண்ட இரண்டாவது ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டும் பணி தொடங்கியது.

இரவு 10 மணி

முதல் ரிக் இயந்திரம் தோண்டும் பணி நிறுத்தப்பட்டது. அந்த இயந்திரம் சுமார் 26 முதல் 28 அடி ஆழம் அளவுக்குக் குழி தோண்டியதாகத் தெரிகிறது.

மாலை 5 மணி

இரண்டாவது ரிக் இயந்திரம் நடுக்காட்டுப்பட்டிக்குக் கொண்டு வரப்பட்டது. அந்த இயந்திரத்தைப் பொருத்தும் பணி தொடங்கியது.

மதியம் 2.30 மணி 

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர், அந்தப் பகுதியில் கடினமான பாறைகள் இருப்பதால், குழி தோண்டும் பணி சவாலானதாக இருப்பதாகத் தெரிவித்தனர். அதேபோல், முதல் இயந்திரத்துக்குப் பின்னர் இரண்டாவதாக புதிய ரிக் இயந்திரம் கொண்டுவரப்பட இருப்பதாகவும் தெரிவித்தனர்.

காலை 7.10 மணி

ரிக் இயந்திரம் மூலம் ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் குழி தோண்டும் பணி தொடங்கியது.

அதிகாலை 4 மணி

குழி தோண்டுவதற்கான இடம் குறிக்கப்பட்ட நிலையில், அதிகாலையில் முதல் ரிக் இயந்திரம் சம்பவ இடத்துக்கு வந்தது.

நள்ளிரவு சுமார் 1 மணி

தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் சுமார் 12 மணி நேரத்துக்கு மேலாக முயற்சித்த நிலையில், ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் மற்றொரு குழி தோண்டி மீட்புப் பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

லாக் செய்யப்பட்டது - நள்ளிரவு வழி செய்யப்படுகிறது ரிக்

இதற்காக குழி தோண்டும் ராட்சத ரிக் இயந்திரங்களைக் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. குழந்தை சுர்ஜித் அதிக ஆழத்துக்கு சென்றுவிடாதபடி ஏர்லாக் மற்றும் அழுத்தம் மூலம் குழந்தையின் கை பிடித்துவைக்கப்பட்டது.

குழந்தையின் தாய் மயக்கம்

முதல்நாள் இரவு முழுவதும் தூங்காமல் குழிக்கும் அருகில் இருந்து குழந்தை சுர்ஜித்துக்கு தைரியம் கொடுத்துக் கொண்டிருந்த தாய் காலமேரி தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தார். இதனால், இரண்டாவது நாள் மதியம் அளவில் அவர் மயக்கமடைந்தார். இதையடுத்து உடனடியாக அவருக்கு சம்பவ இடத்தில் இருந்த மருத்துவக் குழுவினர் சிகிச்சையளித்தனர்.

`உலகைவிட்டு பிரிந்த சுர்ஜித்!'  குழியில் விழுந்தது முதல் தற்போது வரை... என்ன நடந்தது? #LiveUpdate

மதியம் 12 மணி

இரண்டாவது நாள் மதியம் 12.30 மணியளவில் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்களைத் தொடர்ந்து சிறிதுநேரத்தில் அரக்கோணத்தில் இருந்து 33 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஆர்.சி.ஓலா தலைமையில் நடுக்காட்டுப்பட்டி வந்தனர். இரண்டு குழுவினரும் இணைந்து தங்களிடமுள்ள நவீன உபகரணங்களுடன் மீட்புப் பணியைத் தொடங்கினர். அப்போது லேசாக மழை பெய்யத் தொடங்கியதால் ஆழ்துளைக் கிணறு இருக்கும் பகுதியில் மழை பெய்யாதவாறு தார்பாலின் கொண்டு மேற்கூரை அமைக்கப்பட்டது. கேமரா பொருத்திய சிறப்புக் கருவிகள் துணையுடன் குழந்தையை மீட்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர்.

நண்பகல் 11 மணி

இதுதொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ``சென்னை மவுலிவாக்கம் கட்டட விபத்தின்போது உணவு, தண்ணீரில்லாமல் கிட்டத்தட்ட 72 மணிநேரத்துக்கு மேல் சிக்கித்தவித்தவர்களை நாம் உயிரோடு மீட்டிருக்கிறோம். அந்த நம்பிக்கையுடன்தான் நாங்கள் முயற்சி செய்துவருகிறோம். முதல்வர் தகவல் கொடுத்ததை அடுத்து, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட இருக்கிறார்கள்'' என்றார்.

மீட்பு பணி குறித்து அமைச்சர் பேட்டி

அக்டோபர் 26 காலை 8 மணி

குழந்தையை மீட்கும் பணி இரண்டாவது நாளாகத் தொடர்ந்தது. சினிமா சண்டைக் காட்சிகளை வடிவமைக்கும் அன்பறிவ் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள், தங்களின் நவீன இயந்திரங்கள் மூலமாகக் குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஏறக்குறைய ஒரு மணி நேரம் அவர்கள் முயற்சித்த நிலையில், அதுவும் பலனளிக்கவில்லை. அதிகாலை 5.30 மணிக்குப் பின்னர் குழந்தையிடம் இருந்து எந்த அசைவையும் பார்க்கமுடியவில்லை என்று மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். அதேநேரம், குழிக்குள் சிக்கியிருக்கும் குழந்தைக்கு தொடர்ந்து டியூப் மூலம் ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்தது.

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த திருச்சி டானியல் உடன் ஒரு நேர்காணல்

அதிகாலை 5 மணி

நாமக்கல் குழுவைத் தொடர்ந்து புதுக்கோட்டையைச் சேர்ந்த வீரமணி குழுவினர் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். விடிய விடிய அவர்கள் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை. இதையடுத்து, அதிகாலையில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் உதவி நாடப்பட்டது.

அதிகாலை 3 மணி

இதனிடையே நள்ளிரவு 2 மணியளவில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகே குழிதோண்டும் பணி மீண்டும் தொடங்கப்பட்டது. சிறிதுநேரத்துக்குப் பின்னர் அந்தப் பணி நிறுத்தப்பட்டது.

`உலகைவிட்டு பிரிந்த சுர்ஜித்!'  குழியில் விழுந்தது முதல் தற்போது வரை... என்ன நடந்தது? #LiveUpdate

நாமக்கல்லைச் சேர்ந்த வெங்கடேசன் குழுவினர் அதிகாலை 3.30 மணியளவில் சம்பவ இடத்துக்கு வந்தனர். ஐ.ஐ.டி அங்கீகாரம் பெற்ற தங்களது மீட்பு உபகரணம் மூலம் குழந்தையை மீட்கும் பணியை அவரது குழுவினர் தொடங்கினர். அப்போது குழந்தை, முன்னர் சிக்கியிருந்த இடத்தில் இருந்து மேலும் நழுவி, சுமார் 70 அடி ஆழத்துக்கு சென்றிருந்தது தெரியவந்தது. ஆழ்துளைக் கிணற்றின் விட்டம் மேல் பகுதியில் 6 இன்ச் ஆக இருந்தபோது, கீழ்ப்பகுதி நோக்கி செல்ல செல்ல விட்டம் 4 இன்ச் ஆகக் குறைந்தது. இதனால், 5 இன்ச் அகலம் கொண்ட நாமக்கல் குழுவினரின் மீட்புக் கருவியானது 50 அடி ஆழத்துக்கு மேல் செல்ல முடியவில்லை. அதேநேரம் குழந்தை சுவாசித்துக் கொண்டிருப்பது நவீன கருவிகள் மூலம் உறுதி செய்யப்பட்டது. குழந்தையின் அசைவுகளும் கேமரா மூலம் கண்டறியப்பட்டது.

இரவு சுமார் 8.30 மணி

ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியுள்ள குழந்தையை மீட்க மதுரையைச் சேர்ந்த மணிகண்டன், திருச்சி டேனியல், கோவை பல்லடத்தைச் சேர்ந்த குழுவினர் உள்ளிட்ட மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு ஒவ்வொரு குழுவாக வந்தனர். அவர்கள் மீட்புப் பணியைத் தொடங்கினர். மணிகண்டன் குழுவினர் குழிக்குள் கயிறை இறக்கி குழந்தையின் கையில் சுருக்குப் போட்டு அதன்மூலம் மீட்க முயற்சி செய்தனர். குழந்தையின் ஒரு கையில் சுருக்கு மூலம் கயிறு இறுக்கப்பட்டது. ஆனால், இரண்டாவது கையில் சுருக்குக் கயிறை மாட்டுவதில் சிக்கல் நீடித்தது. குழியில் சிக்கியிருக்கும் குழந்தைக்கு ஆக்ஸிஜன் குழாய் மூலம் செலுத்தப்பட்டது.மணப்பாறை அருகே ஆழ்துளை குழியில் விழுந்த குழந்தையை மீட்கும் முயற்சி தீவிரம்.குழந்தை குழிக்குள் இருந்து மீட்பு கருவி மூலம் மீட் கும் நடவடிக்கை நடந்து வருகிறது.

குழந்தையை மீட்கும் முயற்சி தீவிரம்.குழந்தை குழிக்குள் இருந்து மீட்பு கருவி மூலம் மீட்கும் நடவடிக்கை

இரவு சுமார் 7 மணி

சம்பவ இடத்துக்கு அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், திருச்சி ஆட்சியர் ராசாமணி ஆகியோர் வந்து மீட்புப் பணியை பார்வையிட்டனர். ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் 4 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் குழிதோண்டும் பணி தொடங்கியது. இரவு சுமார் 8.15 மணி வரை 17 அடி ஆழ குழி தோண்டப்பட்டது. அதன்பிறகு பாறைகள் தென்பட்டதால் குழி தோண்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய சிறுவனை மீட்கும் பணி தீவிரம்.

மாலை 6.30 மணி

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், தீயணைப்புப் படையினர் மீட்புப் பணியைத் தொடங்கினர். குழந்தை சுர்ஜித் சுமார் 30 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டிருப்பது தெரியவந்தது.

அக்டோபர் 25ம் தேதி மாலை 5.30 மணி

சுர்ஜித்
சுர்ஜித்

சோளக்காட்டில் இருந்த மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் சிறுவன் சுர்ஜித் தவறி விழுந்தார்.