Published:Updated:

`கைலாசா, தேசத்துக்கு விரோதமானது!' -நித்யானந்தாவைச் சாடும் மன்னார்குடி ஜீயர்

வெளிநாடுகளுக்குச் சுற்றுலா விசாவில் சென்று அங்கேயே தங்குவதற்கு முயற்சிக்கும்போதுதான் அந்த நாடுகள் அவர்களை அடித்து விரட்டுகிறது.

மன்னார்குடி ஜீயர்
மன்னார்குடி ஜீயர்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ராயபாளையத்தில் முக்தி நிலையத்தில் அமைந்துள்ள சத்ய யுக சிருஷ்டி கோயிலில் வழிபட வருகை தந்த மன்னார்குடி செண்டலங்கார சென்பகமன்னார் ராமானுஜர் ஜீயர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

மன்னார்குடி ஜீயர்
மன்னார்குடி ஜீயர்

அப்போது அவர் பேசுகையில், ``குடியுரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்தினால்தான் நம் நாட்டில் தீவிரவாதம் குறையும். காஷ்மீர், அஸ்ஸாம், நாகலாந்து ஆகிய மாநிலங்களின் எல்லைக்குள் நுழையும் தீவிரவாதிகளின் எண்ணிக்கை குறையும். தீவிரவாதிகள் நம் நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதைத் தடுக்க குடியுரிமைச் சட்டம் மூலம் தீர்வு காணப்படும்.

`நித்யானந்தா அழைத்தால் கைலாசா செல்வேன்!' - காஞ்சிபுரம் ஞானப்பிரகாச ஆதீனம்

வெளிநாட்டிலிருந்து வருகிறவர்கள், அவர்கள் நாட்டுக்குத் திரும்பிச் செல்லத்தான் வேண்டும். வெளிநாடுகளுக்குச் சுற்றுலா விசாவில் சென்று அங்கேயே தங்குவதற்கு முயற்சி செய்யும்போதுதான் அந்த நாடுகள் அவர்களை அடித்து விரட்டுகின்ன.

மன்னார்குடி ஜீயர்
மன்னார்குடி ஜீயர்

ஆனால், நாம் யாரையும் அடித்து விரட்டப்போவதில்லை. அவர்களை முறையாக திருப்பி அனுப்பி வைப்போம். இச்சட்டத்தால் நம் நாட்டவர் யாருக்கும் பாதிப்பு ஏற்பாடாது" என்றவர்,

நித்யானந்தா விவகாரத்தைப் பற்றிப் பேசும்போது, ``அவர் அறிவித்துள்ளதாகச் சொல்லப்படும் கைலாசா நாடு என்பது இந்து மதத்துக்கும் நம் தேசத்துக்கும் எதிரானது. அவர் பெண்களை வைத்து சில்மிஷம் செய்துகொண்டிருந்தார். அவருடைய முழுமையான சொரூபம் இப்போதுதான் தெரியவந்ததால் அவர் மீது புகார் கொடுத்துள்ளோம்.

மன்னார்குடி ஜீயர்
மன்னார்குடி ஜீயர்

நித்யானந்தா ஏமாற்று வேலை செய்கிறார். நம் நாட்டில் ஏமாற்றி விட்டு வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ளார். அவர் மீது கர்நாடக அரசிடம் புகார் செய்துள்ளோம்" என்றார்.