Published:Updated:

``நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல... ஆனால் இந்து மதத்தைவைத்து அரசியல் நடக்கிறது” - மன்னார்குடி ஜீயர்

மன்னார்குடி ஜீயர்

``தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முதல்வராக இருந்து செயல்பட வேண்டுமே தவிர, கட்சித் தொண்டனைப்போல் செயல்படக் கூடாது” என மன்னார்குடி ஜீயர் ஸ்ரீவில்லிபுத்தூரில் கூறினார்.

``நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல... ஆனால் இந்து மதத்தைவைத்து அரசியல் நடக்கிறது” - மன்னார்குடி ஜீயர்

``தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முதல்வராக இருந்து செயல்பட வேண்டுமே தவிர, கட்சித் தொண்டனைப்போல் செயல்படக் கூடாது” என மன்னார்குடி ஜீயர் ஸ்ரீவில்லிபுத்தூரில் கூறினார்.

Published:Updated:
மன்னார்குடி ஜீயர்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு மன்னார்குடி செண்பகராம செண்டலங்கார ஜீயர் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர், "திமுக அரசு தொடர்ந்து இந்துக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டுவருகிறது. சமீபத்தில் பழநி கோயிலில் ஆரத்தி நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது கண்டனத்துக்குரியது. இது தொடர்பாக பா.ஜ.க-வின் ஹெச்.ராஜா கைதுசெய்யப்பட்டார். ஆனால் அதே பழநியில் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 2.99 ஏக்கர் நிலம் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதை இந்த அரசாங்கம் தட்டிக்கேட்கவில்லை.

நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல. ஆனால் இந்த அரசாங்கம் யாருக்கும் விரோதமில்லாமல் எல்லாரையும் ஒன்றாக நடத்த வேண்டும். கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக நடந்துகொண்டு இந்துக்களை கெளரவக் குறைச்சலாக நடத்த வேண்டாம். தர்ம விஷயத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எல்லாருக்கும் முதல்வராக இருக்க வேண்டுமே தவிர, கட்சித் தொண்டன்போல் செயல்படக் கூடாது. இந்துக்களுக்கும் இந்துக் கோயில்களுக்கும் எந்தவிதமான அநியாயம் செய்யாமல் தமிழக முதல்வர் செயல்பட வேண்டும்.

மன்னார்குடி ஜீயர்
மன்னார்குடி ஜீயர்

குஜராத் மாடலைப் பின்பற்றித்தான் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களை மாநில அரசே நிர்வகிக்கும் சட்டத்தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் நிறைவேற்றினார். அதே குஜராத்தில்தான் பசுவதை தடைச் சட்டம் அமலில் உள்ளது. அதை மட்டும் ஏன் இங்கு கொண்டு வரவில்லை... நாங்கள் இந்த அரசாங்கத்துக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் யார் இந்து தர்மத்துக்கு எதிராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கக்கூடியவர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மற்ற எந்த மதத்தைப் பற்றியோ, மதம் சார்ந்தோ பேசினால் கடுமையான‌ நடவடிக்கை எடுக்கும் அரசு, இந்துக் கடவுளைப் பேசினால் மட்டும் நடவடிக்கை எடுப்பதில்லை. இந்துக் கடவுள்களைப் பற்றிப் பேசி சங்கடங்களை உருவாக்குவதன் மூலம் தமிழகத்தில் வாக்குவங்கி அரசியல் நடத்தப்படுகிறது.

மன்னார்குடி ஜீயர்
மன்னார்குடி ஜீயர்

யூடியூப் சமூக வலைதளங்களில் இந்துக் கடவுள்களைப் பற்றி விமர்சிக்கப்படும் கருத்துகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கை மூலம் தீவிரவாத, தேச விரோதிகள் தமிழக அரசிடம் நெருங்குவதற்கு பயப்பட வேண்டும்.

இந்து மதம் மட்டுமல்ல, எந்த மதத்துக்கும் தி.மு.க‌.அரசு எதிரானது அல்ல என நிரூபிப்பதற்கு பதிலாக, நாங்கள் இந்து மதத்தை தவிர்த்து மற்ற எந்த மதத்துக்கும் எதிரானவர்கள் அல்ல என நிரூபித்துவருகிறது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism