Published:Updated:

`மதுப்பிரியர்களின் கூடாரமாகும் 8 ஊர் கோயில் சாமிகளின் தீர்த்தவாரி!' -புலம்பும் குளித்தலை மக்கள்

கடம்பர் நதிக்கரையில் காலி மதுப்பாட்டில்கள்
கடம்பர் நதிக்கரையில் காலி மதுப்பாட்டில்கள் ( நா.ராஜமுருகன் )

பல வகையிலும் சிறப்புபெற்ற இந்த கடம்பர் நதிக்கரை, இப்போது குடிகாரர்களின் கூடாரமாக மாறிகிட்டு இருப்பது வேதனையளிக்குது. மதியம், மாலை, இரவுனு எல்லா வேளைகளிலும், நூற்றுக்கும் மேற்பட்ட மதுப்பிரியர்கள் அமர்ந்து, மது அருந்துகிறார்கள்.

8 ஊர் கோயில் சிவன்களின் தீர்த்தவாரியாக உள்ள குளித்தலை காவிரியாற்றில் இருக்கும் கடம்பன் நதிக்கரையை மதுப்பிரியர்கள் பாராக பாவித்து மது அருந்திவிட்டு, காலி பாட்டில்களை அங்கேயே வீசிச் செல்வதாக பக்தர்கள் புலம்பி வருகிறார்கள். அதோடு, அங்கிருந்துதான் தினமும் அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் ஆலயத்தில் பூஜை செய்ய புனித நீர் எடுத்துச் செல்வதால், அந்த இடத்தின் புனிதம் மதுப்பிரியர்களால் கெடுவதாக புலம்புகிறார்கள் பக்தர்கள்.

கடம்பவனேஸ்வரர் ஆலயம்
கடம்பவனேஸ்வரர் ஆலயம்
நா.ராஜமுருகன்
`கைவிரித்த அரசு; கிணற்றைத் தூர்வாரிய இளைஞர்கள்!' - மக்களுக்கு கைகொடுக்கும் 4,000 லிட்டர் நீர்

கரூர் மாவட்டம், குளித்தலையில் அமைந்துள்ளது கடம்பவனேஸ்வரர் கோயில். இந்தக் கோயில் வடக்கு நோக்கி அமைந்துள்ளதால், காசிக்கு இணையான கோயிலாக கருதப்படுகிறது. இந்தக் கோயிலையொட்டிதான், காவிரிக்கரையில் எட்டு ஊர் கோயில்களின் சாமிகளின் தீர்த்தவாரி நடக்கும் இடம் உள்ளது.

கடம்பர் நதிக்கரையில் காலி மதுப்பாட்டில்கள்
கடம்பர் நதிக்கரையில் காலி மதுப்பாட்டில்கள்
நா.ராஜமுருகன்

இந்த இடத்தை மதுப்பிரியர்கள் பாராக மாற்றி வருவதால், அந்த இடத்தின் புனிதம் கெட்டுப்போவதாக பக்தர்கள் கவலைப்படுகிறார்கள்.

இது குறித்து, குளித்தலைப் பகுதியைச் சேர்ந்த கடம்பை பிரபுவிடம் பேசினோம். ``கடம்பனேஸ்வரர் கோயில் வடக்கு நோக்கி இருப்பதால், இது காசிக்கு இணையான கோயிலாக கருதப்படுகிறது. அதேபோல், காலை கடம்பர், மதியம் சொக்கர், அந்தி வேளையில் திருஈங்கோய்நாதர் என்பது இங்கு சொல்லப்படும் சிறப்பாகும். அதாவது, குளித்தலை கடம்பரை காலையிலும், அய்யர் மலை சொக்கரை மதியமும், மாலையில் முசிறி திருஈங்கோய்மலை நாதரையும் வழிபட்டால், காசிக்கு போனதற்குச் சமம் என்பர். அதோடு, இந்தக் கோயிலுக்கு அருகில் உள்ள காவிரிக்கரை, கடம்பர் நதிக்கரை என்று அழைக்கப்படுகிறது.

கடம்பை பிரபு
கடம்பை பிரபு
நா.ராஜமுருகன்

இந்த கடம்பர் நதிக்கரையில்தான், 8 ஊர் சிவன்களுக்கு தீர்த்தவாரி நடக்கும். மாசிமகத் திருவிழாவின்போது, கடம்பவனேஸ்வரர், திருஈயிங்கோயிமலை, முசிறி, வெள்ளூர், கருப்பத்தூர், பெட்டவாய்த்தலை, அய்யர்மலை, இராஜேந்திரம் உள்ளிட்ட எட்டு கோயில் சிவன்களுக்குதான் கடம்பர் நதிக்கரையில் தீர்த்தவாரி நடக்கும். அப்போது, ஒரு லட்சம் பக்தர்கள் இங்கே கூடுவார்கள். அதேபோல், கடம்பர் நதிக்கரையில் இருந்துதான் தினமும் தீர்த்தம் எடுத்துட்டுப் போய் அய்யர்மலையில் உள்ள ரெத்தினகிரீஸ்வரருக்கு பூஜை செய்வாங்க.

எட்டு கிலோமீட்டர் தூரம் நடந்தே தீர்த்தத்தை எடுத்துப் போவாங்க. இப்படி பல வகையிலும் சிறப்புபெற்ற இந்த கடம்பர் நதிக்கரை, இப்போது குடிகாரர்களின் கூடாரமாக மாறிகிட்டு இருப்பது வேதனையளிக்குது. மதியம், மாலை, இரவுனு எல்லா வேளைகளிலும், கடம்பர் நதிக்கரைப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மதுப்பிரியர்கள் அமர்ந்து, மது அருந்துறாங்க. அதோடு, காலி பாட்டில்களை அங்கேயே உடைத்துப் போட்டுட்டுப் போறாங்க. இதனால், அந்த கடம்பர் நதிக்கரைப் பகுதியின் புனிதம் கெடுது. அதோடு, அங்கே தீர்த்தம் எடுக்கப் போக செல்லும் அர்ச்சகர்களிடம் பிரச்னை பண்றாங்க. அதோடு, கடம்பர் நதிக்கரைக்கு பக்தர்கள், குறிப்பாக பெண் பக்தர்களால் போக முடியாத சூழல்.

அய்யர்மலைக்கு தீர்த்தம் எடுத்துப் போகும் அர்ச்சகர்கள்
அய்யர்மலைக்கு தீர்த்தம் எடுத்துப் போகும் அர்ச்சகர்கள்
நா.ராஜமுருகன்

கோயில் நிர்வாகம் எவ்வளவோ தடுத்தும், மதுக்குடிக்க இங்கே வருபவர்களைத் தடுத்து நிறுத்தமுடியவில்லை. அதோடு, மதுப்பாட்டில்கள் உடைந்து மணலில் கிடப்பதால், அங்கே செல்லும் பக்தர்களுக்கு கால்களில் கடுமையான காயம் ஏற்படுது. அதனால், குளித்தலை நகராட்சி நிர்வாகமும், காவல் துறையும் இணைந்து, கடம்பர் நதிக்கரையில் மது அருந்துபவர்களுக்கு கடிவாளம் போடணும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு