Published:Updated:

ஊரடங்கிலும் பிறந்தநாள் கேக்கை கத்தியால் வெட்டி கொண்டாடிய இளைஞர்கள் - வீடியோவால் சிக்கிய பின்னணி

பிறந்தநாள் கொண்டாட்டம்
பிறந்தநாள் கொண்டாட்டம்

ஊரடங்கு அமலில் உள்ள நேரத்தில் சாலையை வழிமறித்த இளைஞர்கள், பைக்கின் மீது கேக்கை வைத்து பட்டாக்கத்தியைக் கொண்டு அதை வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், வயலூர் கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கரன், மப்பேடு காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, ``கொரோனா வைரஸ் பரவுவதால் அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவை மீறி 2.5.2020-ம் தேதி இரவு 10 மணி முதல் 11 மணி வரை திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் தாலுகா, வயலூர் கிராமம் காலனி செல்லும் வழியில் இளைஞர்கள் சிலர், இருசக்கர வாகனத்தின் மீது கேக் வைத்து பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர்.

பிறந்தநாள் கொண்டாட்டம்
பிறந்தநாள் கொண்டாட்டம்
பட்டாக்கத்தியில் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாட்டம்! -மதுரையில் சிறுவர்கள் உட்பட 5 நபர்கள் கைது

அந்த இளைஞர்கள், நடுரோட்டில் சாலையை வழிமறித்தவாறு நின்றுகொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர். மேலும், அவர்கள் பெரிய பட்டா கத்தியை வைத்து உயிருக்கு அச்சுறுத்துதல் ஏற்படும் வகையில் கேக்கை வெட்டி பகிர்ந்து சாப்பிட்டுள்ளனர். அவர்களின் செயல் மிரட்டும் தோரணையில் உள்ளது.

கொரோனா நோய் தொற்று ஏற்படும் விதமாகவும் அரசின் உத்தரவை மீறியும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் சம்பவமாக உள்ளது. மேலும், இந்தச் சம்பவமானது வாட்ஸ்அப் வீடியோவாக பரவிவருகிறது. எனக்கும் அந்த வீடியோ வந்தது. எனவே, சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

வயலூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேந்தரின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாட அவரின் நண்பர்கள் திட்டமிட்டனர். பட்டாக் கத்தியைக் கொண்டு பிறந்தநாள் கேக்கை வெட்டியுள்ளனர்.
போலீஸ்
கேக்கை கத்தியால் வெட்டும் இளைஞர்
கேக்கை கத்தியால் வெட்டும் இளைஞர்
Vikatan

புகாரின்பேரில் மப்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணையன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் பாத்திபன் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தார். வீடியோ அடிப்படையில் பிறந்தநாள் கேக்கை பட்டாக் கத்தியைக் கொண்டு வெட்டி கொண்டாடிய ராகுல் ஸ்டீபன்ராஜ் மற்றும் அருண்குமார் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சென்னையை அடுத்த மாங்காடு அருகே உள்ள மலையம்பாக்கத்தில் பிரபல ரவுடி பினு, தன்னுடைய பிறந்தநாளை பட்டாக்கத்தியைக் கொண்டு கேக் வெட்டினார். இந்தப் பிறந்தநாள் விழாவில் ரவுடி பினுவின் கூட்டாளிகள் கலந்துகொண்டனர். இதுதொடர்பான புகாரில் போலீஸார் பினு மற்றும் அவரின் கூட்டாளிகளைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவத்துக்குப்பிறகு பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவதை சிலர் வாடிக்கையாக வைத்தனர். அவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

கேக் ஊட்டும் இளைஞர்கள்
கேக் ஊட்டும் இளைஞர்கள்

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வயலூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேந்தரின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாட அவரின் நண்பர்கள் திட்டமிட்டனர். பட்டாக் கத்தியைக் கொண்டு பிறந்தநாள் கேக்கை வெட்டியுள்ளனர். இதுதொடர்பான புகாரில் ராகுல் ஸ்டீபன்ராஜ் மற்றும் அருண்குமார் ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். மற்றவர்களைத் தேடிவருகிறோம். இதுபோன்ற செயல்களில் இனி யாரும் ஈடுபட வேண்டாம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு