Published:Updated:

மணமகன் கையிலிருந்து தாலியைப் பிடுங்கி மணமகளுக்கு கட்டமுயன்ற காதலன்! - சினிமா பாணியில் நடந்த சம்பவம்

திருமணம்

சென்னையில் திருமண மேடையில் மணமகன் கையிலிருந்த தாலியைப் பிடுங்கி மணமகளுக்கு கட்டமுயன்ற இளைஞரால் பரபரப்பு.

மணமகன் கையிலிருந்து தாலியைப் பிடுங்கி மணமகளுக்கு கட்டமுயன்ற காதலன்! - சினிமா பாணியில் நடந்த சம்பவம்

சென்னையில் திருமண மேடையில் மணமகன் கையிலிருந்த தாலியைப் பிடுங்கி மணமகளுக்கு கட்டமுயன்ற இளைஞரால் பரபரப்பு.

Published:Updated:
திருமணம்

சென்னை, தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த இருவருக்கு நேற்று முன்தினம் காலை திருமணம் நடக்க இருந்தது. குறித்த முகூர்த்த நேரத்தில், மணமகன் தாலியைக் கட்ட முற்பட்டார். அப்போது, மணமேடைக்கு வந்த வாலிபர் ஒருவர், மணமகனின் கையிலிருந்த தாலியைப் பிடுங்கி மணமகளுக்குக் கட்ட முற்பட்டார். இதை சற்றும் எதிர்பார்த்த உறவினர்கள், அந்த வாலிபரைத் தடுத்து நிறுத்தி அவரின் கையிலிருந்த தாலியைப் பிடுங்கியதோடு, அவரை அடித்து உதைத்தனர்.

திருமணம்
திருமணம்

இந்தச் சம்பவம் தொடர்பாக ஆர்.கே நகர்ப் பகுதி காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பது தெரியவந்தது. மேலும், மணமகளும், அவரும் ஒரே இடத்தில் வேலை பார்க்கும்போது இருவரும் காதலித்து வந்திருக்கிறார்கள். மணமகள் சொன்னதையடுத்தே சதீஷ் மண்டபத்துக்கு வந்திருக்கிறார் என்பது தெரியவந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திருமணத்தை நிறுத்துவதற்காக, சதீஷ் முதல் நாள் மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலிருந்து மண்டபத்தைச் சுற்றிச் சுற்றி வந்திருக்கிறார். அவர் மணப்பெண்ணின் நண்பர் என்று சொன்னதால், அங்கிருந்த யாருக்கும் அவர் மேல் சந்தேகம் வரவில்லை. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தாலிகட்டும்போது, மணமேடைவரை சென்றிருக்கிறார் சதீஷ். இந்த விஷயம் தெரிந்ததும், மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்திவிட்டார்கள்.

சதீஷ்
சதீஷ்

இந்த திருமணத்துக்கு ஆன செலவையும், பெண் வீட்டார் கொடுக்க வேண்டும் என்று மாப்பிள்ளை வீட்டார் கேட்டிருக்கிறார்கள். பணத்தைத் தருவதற்கும் அவர்கள் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள். இதனையடுத்து, சதீஷை காவல்துறையினர் கண்டித்து அனுப்பியிருக்கிறார்கள். தற்போது காதலித்தவருக்கே திருமணம் செய்துவைக்கப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. சினிமா பாணியில் நடந்த இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.