Published:Updated:

மதுரை: கொரோனா போண்டாவைத் தொடர்ந்து மாஸ்க்! - வரவேற்பால் மிரளும் ஹோட்டல்

மாஸ்க் பரோட்டா
மாஸ்க் பரோட்டா

பரோட்டாவுக்கு உலக அளவில் ஃபேமஸ் நம்ம மதுரைதான். ஏன் மாஸ்க் வடிவ பரோட்டா செய்யக் கூடாது என தோன்றியது.

பிரியாணி 10 ரூபாய்… பரோட்டா 1 ரூபாய்… பெரியகுளத்தை ஆச்சர்யப்படுத்திய ஹோட்டல்!

கொரோனா தொற்றுத் நோய் பரவ ஆரம்பித்தது முதல் மாஸ்க் அணிவதன் கட்டாயத்தை அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வந்தாலும், அதனை மக்கள் சரிவர கடைப்பிடிப்பதில்லை என்பதுதான் கள நிலவரம். அண்மையில், சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன், மதுரை வந்திருந்தபோது, ‘மதுரை மக்கள் ரோட்டில் செல்லும்போது பெரும்பாலும் மாஸ்க் அணிவதில்லை’ என்றார்.

நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்துவரும் மதுரையில், மக்களிடையே மாஸ்க் தொடர்பான விழிப்பு உணர்வை ஏற்படுத்த, டெம்பிள் சிட்டி ஹோட்டல் நிர்வாகம், ’மாஸ்க் பரோட்டா’வை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாஸ்க் பரோட்டா, மதுரை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மாஸ்க் பரோட்டா
மாஸ்க் பரோட்டா
மதுரை: தேர்தல் வேலையால் பகை; மிரட்டல்! பஞ்சாயத்துத் தலைவருக்கு எதிராகக் கொதிக்கும் மக்கள்

நம்மிடையே பேசிய, மதுரை மாவட்ட ஹோட்டல்கள் சங்க தலைவரும், டெம்பிள் சிட்டி ஹோட்டல் நிர்வாக இயக்குநருமான குமார், “எப்போதும் வித்தியாசமாக செய்வதுதான் எங்கள் வழக்கம். நடிகர் ரஜினியின் பாபா படம் வெளியானபோது, எங்கள் ஹோட்டலில் ’பாபா பன்னீர் பட்டர் மசாலா’ அறிமுகம் செய்து, ரஜினி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து, சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபோது, கிரிக்கெட் பேட் வடிவிலான ‘டெண்டுல்கர் தோசை’ அறிமுகம் செய்தோம்.

கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த நேர்த்தில், மக்களிடையே கொரோனா குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்த, ’கொரோனா போண்டா’, ’கொரோனா ரவா தோசை’ அறிமுகம் செய்தோம்.

மாஸ்க் பரோட்டா
மாஸ்க் பரோட்டா
மதுரை: `அடக்கவிலையைவிட மிகவும் குறைவு!' - அசத்தும் நோய் எதிர்ப்பு மருந்துப் பெட்டகம்

இந்நிலையில், மதுரை மக்கள் பலரும் மாஸ்க் அணியாமல்தான் வெளியே வருகிறார்கள். அதனால், மாஸ்க் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என நினைத்தோம். பரோட்டாவுக்கு உலக அளவில் ஃபேமஸ் நம்ம மதுரைதான். ஏன் மாஸ்க் வடிவ பரோட்டா செய்யக் கூடாது எனத் தோன்றியது.

சாதாரண பரோட்டா செய்வதற்கான அதே மூலப்பொருள்களைக் கொண்டு மாஸ்க் வடிவில் செய்தோம். நாங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, குழந்தைகள் விரும்பி வாங்கிச் சாப்பிடுகிறார்கள். ஒரு செட் மாஸ்க் பரோட்டா விலை 50 ரூபாய்” என்றார் புன்னகையோடு.

மதுரையில் கொரோனா வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. எனினும், மக்கள் முகக்கவசம் அணியாமல் செல்வதால் அவர்களுக்கு...

Posted by Vikatan EMagazine on Wednesday, July 8, 2020
கொரோனா: `நோய் எதிர்ப்பு சக்தி; மாஸ்க் பயன்பாடு’ -  வியக்கவைக்கும் ஜப்பான்
அடுத்த கட்டுரைக்கு