Published:Updated:

`இனி, ஒரு உயிரிழப்புகூட மருந்து இல்லாத காரணத்தால் ஏற்படக் கூடாது!’ - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நிகழ்ச்சியில் மா.சுப்பிரமணியன்
நிகழ்ச்சியில் மா.சுப்பிரமணியன்

``நானும்கூட கடந்த 25 ஆண்டுகளாக சர்க்கரை நோயாளியாக இருக்கிறேன். அதற்காக மருந்து, மாத்திரைகள் உட்கொண்டு வருகிறேன். இனி ஒரு உயிரிழப்புகூட தமிழகத்தில் மருந்து, மாத்திரைகள் இல்லாததால் ஏற்படக் கூடாது என்பதில் தமிழக முதல்வர் அக்கறையாக இருக்கிறார்.”

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதத்துக்குள் ஒரு கோடிப் பேருக்கு வீடு தேடி மருத்துவம் திட்டத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் மா.சுப்பிரமணியன்
நிகழ்ச்சியில் மா.சுப்பிரமணியன்
`7 கிராமப் பகுதிகளில் 100 சதவிகித கொரோனா தடுப்பூசி!' - சாதித்த கரூர் மாவட்ட செவிலியர்கள்

கரூர் மாவட்டத்தில் பல்வேறு ஆய்வுப் பணிகளில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 1,554 பயனாளிகளுக்கு ரூ 1,86,48,000 மதிப்பில் முதியோர் உதவித்தொகைகளை பயனாளிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து, தொழிலாளர் நலத்துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பட்டு வளர்ச்சித்துறை ஆகியவற்றின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்தநிகழ்ச்சியில், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபுசங்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் இளங்கோ, மாணிக்கம், சிவகாமசுந்தரி, வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் மா.சுப்ரமணியன்
நிகழ்ச்சியில் மா.சுப்ரமணியன்

தொடர்ந்து, பேசியஅமைச்சர் மா.சுப்பிரமணியன், ``தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட காலத்தில், கொரோனா பாதிப்பால் தொற்றாநோயாளிகள் உயிரிழப்பு அதிகரித்தது. சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு தினந்தோறும் மருந்து, மாத்திரைகள் உட்கொள்பவர்கள் தமிழகத்தில் 20 லட்சம் பேர் உள்ளனர். நானும்கூட கடந்த 25 ஆண்டுகளாக சர்க்கரை நோயாளியாக இருக்கிறேன். அதற்காக மருந்து, மாத்திரைகள் உட்கொண்டுவருகிறேன். இனி ஒரு உயிரிழப்பு கூட தமிழகத்தில் மருந்து, மாத்திரைகள் இல்லாததால் ஏற்படக் கூடாது என்பதில் தமிழக முதல்வர் கவனமாக இருக்கிறார். அந்த விஷயத்தைக் கருத்தில்கொண்டு, தமிழக சுகாதாரத்துறை வரலாற்றில் முதன்முறையாக, 'மக்களை தேடி மருத்துவம்' என்ற மகத்தான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

`20 லட்சம்பேருக்கு வீட்டிலேயே சிகிச்சை; தமிழக அரசின் `மக்களைத் தேடி மருத்துவம்' செய்யப்போவது என்ன?

இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 37 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். இந்தநிலையில், இன்று 50 ஆயிரத்தை எட்டியுள்ளது. இதன் மூலம், வரும் 2021, டிசம்பர் மாதத்துக்குள் ஒரு கோடிப் பேர் பயனடைவார்கள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. கொரோனா தடுப்பூசியைக் கட்டாயம் அனைவரும் செலுத்திக்கொள்ள வேண்டும். அதேபோல், முகக் கவசம் அணிவதை உறுதி செய்துகொள்ள வேண்டும். அப்போதுதான், கொரோனா பாதிப்பிலிருந்து அனைவரும் தப்பித்துக்கொள்ள முடியும்" என்று அவர்பேசியபோது, எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த பயனாளி ஒருவர், முறையாக முகக் கவசம் அணியாமல் இருந்ததை கவனித்தவர், அதைச் சுட்டிக்காட்டி, ``மூக்குக்கு மேல் முகக்கவசம் மூடியிருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். அப்போதுதான் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நல்லது" என கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து, அந்தப் பயனாளியும் தனது முகத்தில் முகக்கவசத்தை முறையாக அணிந்துகொண்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு