Published:Updated:

``என் மகனே கடைசியாக இருக்கட்டும்!’’ - கலங்கும் சுஜித் வில்சனின் தாய் கலாமேரி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சுஜித் வில்சனின் தாய் கலாமேரி
சுஜித் வில்சனின் தாய் கலாமேரி

``என் மகனே கடைசி பலியாக இருக்கட்டும்” எனக் கலங்குகிறார் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுஜித் வில்சனின் தாய் கலாமேரி.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரிட்டோ ஆரோக்கியராஜ் மற்றும் கலாமேரி ஆகியோரின் இளைய மகன் சுஜித் வில்சன், கடந்த 25-ம் தேதி மாலை 5.30 மணியளவில், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் இருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான்.

Sujith
Sujith

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் வில்சனை மீட்க தீயணைப்புப் படையினர், வருவாய்த்துறையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்ட மீட்புப் படையினர் கடுமையான முயற்சிகளை முன்னெடுத்தார்கள். ஆனாலும், சிறுவனை மீட்க முடியவில்லை. அமைச்சர்கள், அதிகாரிகள் எனப் பலரும் நடுக்காட்டுப்பட்டியில் முகாமிட்டிருந்தனர்.

சுஜித் வீடு அருகே இருந்த மற்றொரு ஆழ்துளைக் கிணறு! - களத்தில் இறங்கி மூடிய அதிகாரிகள்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் திரண்டு வந்து மீட்புப்பணிகளைப் பார்த்தனர். ஒட்டு மொத்த தமிழகமும் சுஜித் வில்சன் பத்திரமாக மீட்கப் பட வேண்டும் எனத் துடித்தனர். ஆனால், சுமார் 80 மணி நேரப் போராட்டம் தோல்வியில் முடிந்தது. அதையடுத்து மீட்கப்பட்ட அவரது உடல், நடுக்காட்டுப்பட்டியை அடுத்த பாத்திமாபுதூர் கல்லறைத்தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

நேற்று பாதிக்கப்பட்ட சுஜித் வில்சனின் பெற்றோரை தி.மு.க தலைவர் ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தே.மு.தி.க சார்பில் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பல தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறி, நிதி உதவி வழங்கினர்.

சுஜித் வில்சன் தாய் கலாமேரி
சுஜித் வில்சன் தாய் கலாமேரி

தன்னைச் சந்திக்கும் தலைவர்களிடம் சுஜித்தின் தாய், ``என் மகனே கடைசியாக இருக்கட்டும், இனி எந்தக் குழந்தையும் பாதிக்காமல் நடவடிக்கை எடுங்கள்” என வலியுறுத்தினார்.

கடவுளே இரக்கம் இல்லையா? - சுர்ஜித் அஞ்சலியில் கதறி அழுத பொதுமக்கள் 

தொடர்ந்து சுஜித் வில்சனின் அப்பா பிரிட்டோ, “கடந்த 5 நாள்களாகத் தன் மகனை மீட்பதற்காகப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. சுஜித் வில்சனை மீட்க முயற்சிகள் எடுத்த அதிகாரிகளுக்கும் அரசுக்கும் நன்றி” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடைசியாக சுஜித் வில்சன் தாய் கலாமேரி, ``இனி ஆழ்துளைக் கிணறுகளில் ஏற்படும் உயிரிழப்பு சம்பவம் தொடரக்கூடாது.  சுஜித்தை எப்படியும் மீட்டுத்தருவாங்க என நம்பிக்கையோடு இருந்தேன். ஆனால், அதற்கு வழியில்லாமல் போச்சு.

`அந்த தம்பி இறந்துட்டான்னு அம்மா சொன்னாங்க!'- சுஜித் விழுந்த குழியைப் பார்த்து கலங்கிய குழந்தைகள்

என் மகன் சுஜித்தே கடைசியாக இருக்கட்டும். அவன் தவறி விழுந்த இடத்தில் கோயில் கட்ட வேண்டும் என்பது எனது ஆசை. என் மகன் சுஜித் நல்ல முறையில் மீட்கப்பட வேண்டும் எனப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி” எனக் கலங்கினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு