Published:Updated:

உலக தண்ணீர் தினம்; விழிப்புணர்வு ஏற்படுத்தி மயிலாடுதுறை சிறுவன் உலக சாதனை!

வயது சிறுவன் உலக சாதனை

தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் தண்ணீரின் மூலக்கூறு வடிவமான H2O ஃபார்முலாவை 4.30 மணி நேரத்தில் 150 சதுரடியில் 2022 தடவை எழுதி கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார் சாய்மித்ரன்.

உலக தண்ணீர் தினம்; விழிப்புணர்வு ஏற்படுத்தி மயிலாடுதுறை சிறுவன் உலக சாதனை!

தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் தண்ணீரின் மூலக்கூறு வடிவமான H2O ஃபார்முலாவை 4.30 மணி நேரத்தில் 150 சதுரடியில் 2022 தடவை எழுதி கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார் சாய்மித்ரன்.

Published:Updated:
வயது சிறுவன் உலக சாதனை

உலக தண்ணீர் தினம் இன்று (22.03.2022) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மயிலாடுதுறையைச் சேர்ந்த சாய்மித்ரன் என்கிற நான்கரை வயதுச் சிறுவன் உலக சாதனை புரிந்துள்ளார்.

நான்கரை வயதுச் சிறுவன் உலக சாதனை
நான்கரை வயதுச் சிறுவன் உலக சாதனை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மயிலாடுதுறையைச் சேர்ந்த கல்யாண்குமார் - உமாமகேஸ்வரி தம்பதியின் மகனான சாய்மித்ரன் என்கிற நான்கரை வயதுச் சிறுவன் யு.கே.ஜி படித்து வருகிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில்  தண்ணீரின் மூலக்கூறு வடிவமான H2O ஃபார்முலாவை 4.30 மணி நேரத்தில் 150 சதுரடியில் 2022 தடவை எழுதி கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார் சாய்மித்ரன். உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

நான்கரை வயதுச் சிறுவன் உலக சாதனை
நான்கரை வயதுச் சிறுவன் உலக சாதனை

கடினமான முயற்சிதான் என்றாலும், தண்ணீர் இன்றி உலகு இல்லை என்பதை உணர்த்தவே தங்கள் மகன் இந்தச் சாதனையில் ஈடுபட்டார் என்று அவரின் பெற்றோர் தெரிவித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism