Published:Updated:

புயல் அபாயம்: பொதுமக்களுக்கு உதவி எண்கள் அறிவித்த மயிலாடுதுறை ஆட்சியர்!

``அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள ஆதார் கார்டு, பான் கார்டு, வங்கி கணக்குப் புத்தகம், படிப்புச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் எனவும் மேற்கண்டுள்ள அறிவுரைகளை பேரிடர் காலங்களில் தவறாமல் பின்பற்ற வேண்டும்." - ஆட்சியர்

வடகிழக்கு பருவமழையையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி  இன்று (08.11.2021) மாவட்ட ஆட்சியர் லலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ``தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய இந்திய பெருங்கடலில் சராசரி கடல் மட்டத்திலிந்து 4.5 கி.மீ உயரம் வரை மேல்காற்று சுழற்சி உள்ளது. அதன் தாக்கத்தின்கீழ் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் சுற்றுப்புறப்பகுதியில் நவம்பர் 09.11.2021-ல் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி, புயலாக மாற வாய்ப்புள்ளது. இது அடுத்த 45 மணி நேரத்தில் வலுப்பெற்று தமிழக கடற்கரையை நோக்கி வர வாய்ப்புள்ளது.

மழைக்கால முன்னெச்சரிக்கை
மழைக்கால முன்னெச்சரிக்கை
தொடர் மழை; வடிகால் வசதி இல்லாததால் நீரில் மூழ்கும் 100 ஏக்கர் நெற்பயிர்கள்; வேதனையில் விவசாயிகள்!

இதன் காரணமாக நவம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் தென்கிழக்கு வங்கக்கடலில் மணிக்கு 40 கி.மீ முதல் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்பதால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும், கடலுக்குச் சென்ற மீனவர்கள் 09.11.2021-க்குள் கரைக்கு திரும்பவும் அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், தொடர் கனமழையின் காரணமாக பெரும்பாலான நீர்நிலைகள்  நிரம்பியுள்ளதால் பொதுமக்கள் ஆற்றில் குளிக்க செல்வதை தவிர்க்க வேண்டும். தாழ்வான பகுதிகளிலும், நீர்நிலைகளின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச்  செல்ல வேண்டும். மழை, வெள்ள நீர்த் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டி வைக்கக்கூடாது. வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். ஒருவார காலத்திற்கு தேவையுள்ள அத்தியாவசியப் பொருள்களான உணவு வகைகள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, எரிவாயு உருளை, மண்ணெண்ணெய், பால் பவுடர், மின் விளக்குகள் மற்றும் உபரி பேட்டரிகள், சுகாதாரத்தை பேணி காக்க தேவையான மருத்துவப்பொருள்கள், முகக்கவசம் ஆகியவற்றை முன்னெச்சரிக்கையாக வாங்கி வைத்திருக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியர் லலிதா
மாவட்ட ஆட்சியர் லலிதா
`அடுத்த 4 நாள்களுக்குத் தொடர் கனமழை எச்சரிக்கை!' - வானிலை ஆய்வு மையம்

அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள ஆதார் கார்டு, பான் கார்டு, வங்கி கணக்குப் புத்தகம், படிப்புச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் எனவும் மேற்கண்டுள்ள அறிவுரைகளை பேரிடர் காலங்களில் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கிவரும் அவசர கால கட்டுப்பாட்டு அறைக்கு, பொதுமக்கள் இயற்கை இடர்பாடுகள் குறித்தான தங்கள் புகார்களை இலவச தொலைபேசி எண் 04364-1077, 04364-222588 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்" எனவும் மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு