Published:Updated:

அரசுப் பேருந்தில் பயணம் செய்த மயிலாடுதுறை கலெக்டர்; என்ன காரணம் தெரியுமா?

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா
News
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா

மாவட்ட ஆட்சியர் லலிதா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அரசுப் பேருந்தில் வந்தடைந்தார். மகளிருக்கான விலையில்லா பேருந்து பயணத்திட்டத்தில் டிக்கெட் எடுக்காமல், நின்றபடியே பயணம் செய்தார்.

சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க வாரத்தில் திங்கள்கிழமை ஒருநாள் அரசு அதிகாரிகள் வாகனங்களை பயன்படுத்தாமல் சைக்கிளில், அல்லது நடை பயணமாக, அல்லது பொதுப் பேருந்தில் அலுவலகம் வரவேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

அரசுப் பேரூந்தில் கலெக்டர் பயணம்
அரசுப் பேரூந்தில் கலெக்டர் பயணம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அந்த அறிவுறுத்தலின்பேரில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தனது வீட்டிலிருந்து நடந்து பேருந்து நிறுத்தம் சென்று, அங்கிருந்து அரசுப் பேருந்தில் ஆட்சியர் அலுவலகத்திற்கு பணிக்கு வருகை புரிந்தார்.

இதற்காக கீழ நாஞ்சில்நாடு பகுதியிலுள்ள ஆட்சியர் முகாம் அலுவலகத்திலிருந்து, மாவட்ட ஆட்சியர் லலிதா சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் தொலைவிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அரசுப் பேருந்தில் வந்தடைந்தார். அவர் மகளிருக்கான விலையில்லா பேருந்து பயணத்திட்டத்தில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தார். பேருந்தில் நின்று கொண்டே பயணம் செய்த மாவட்ட ஆட்சியர் கீழவீதி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து 500 மீட்டர் தொலைவிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நடைபயணமாக வந்து சேர்ந்தார்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா

மாவட்ட ஆட்சியரோடு ஆண் அதிகாரிகள் பலரும் இன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு அரசு பேருந்தில் டிக்கெட் எடுத்து வந்தடைந்தனர்.

``வாரத்தில் ஒருநாள் இதுபோல் அனைத்து அதிகாரிகளும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும்" என்று அப்போது மாவட்ட ஆட்சியர் சக அலுவலர்களைக் கேட்டுக் கொண்டார்.