Published:Updated:

கடன் பிரச்னையால் விவசாயி தற்கொலை; குடும்பத்துக்கு உதவி செய்ய மயிலாடுதுறை விவசாயிகள் கோரிக்கை!

தற்கொலை

``விவசாயிகள் விளைவித்த உணவுப் பொருள்களுக்கு லாபகரமான விலை கிடையாது. விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகிற குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய ஒன்றிய, மாநில அரசுகள் இதுவரை மறுத்து வருகின்றன."

கடன் பிரச்னையால் விவசாயி தற்கொலை; குடும்பத்துக்கு உதவி செய்ய மயிலாடுதுறை விவசாயிகள் கோரிக்கை!

``விவசாயிகள் விளைவித்த உணவுப் பொருள்களுக்கு லாபகரமான விலை கிடையாது. விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகிற குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய ஒன்றிய, மாநில அரசுகள் இதுவரை மறுத்து வருகின்றன."

Published:Updated:
தற்கொலை

மயிலாடுதுறை மாவட்டம் முடிகண்டநல்லூர் ஊராட்சி, மேலத்தெருவைச் சேர்ந்த ஜெயராமன் (வயது 62 ) என்ற விவசாயி, வங்கியில் வாங்கிய கடன் பிரச்னையாலும், விவசாயம் பொய்த்துப் போனதாலும் மன உளைச்சலுக்கு ஆளாகி கடந்த 26-ம் தேதி அன்று வயலிலேயே விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

ஜெயராமன்
ஜெயராமன்

இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஜெயராமன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது பேசிய சங்கத்தினர், ``ஜெயராமன் இறப்பால் அவருடைய குடும்பம் இன்று நிர்க்கதியாய் நிற்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒவ்வொரு மனிதனும் தினமும் உண்ணுவதற்கு உணவுப் பொருள்களை பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் தற்கொலைகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த நம்முடைய அரசுகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்கொலை
தற்கொலை

விவசாயிகள் விளைவித்த உணவுப் பொருள்களுக்கு லாபகரமான விலை கிடையாது. விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகிற குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய ஒன்றிய, மாநில அரசுகள் இதுவரை மறுத்து வருகின்றன. தற்கொலை செய்துகொண்ட விவசாயி ஜெயராமன் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.20 லட்சம் நிதி வழங்க வேண்டும். வங்கியில் ஜெயராமன் வாங்கிய கடன் முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும். டி.எம்.இ படித்து முடித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்து வரும் அவருடைய மகன் அருண்குமாருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்" என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism